26.5.18

Arulmigu Ardhanareeswarar Temple- Tiruchengode

அருள்மிகு அர்த்தநாரீஸ்வர் திருக்கோவில் - திருச்செங்கோடு 

இறைவன் : அர்தநாரீஸ்வரர் / ஸ்ரீ மாதொரு பாகர் 

தாயார் :      ஸ்ரீ பாகம் ப்ரியாள் 




* திருஞானசம்பந்தரரால் பாடல் பெற்ற தலம் .
* பாடல் பெற்ற தலங்களில் 262 வது தலம் .கொங்கு மண்டல தலத்தில் 4 வது தலம் .2000 வருடம் முற்பட்டது 
* இங்கு முருகர் ரொம்ப பிரசித்தமானது .இவர் செங்கோட்டு வேலர் என்று அழைக்கப்படுகிறார் .
* மலை மேல் உள்ள கோவில் . மேலமடா வீதியில் இருந்து பார்க்கும் போது நாகம் போல் காட்சி அளிப்பதால் நாகாசலம் என்னும் பெயர் உண்டு .
* 1200 படிகள் 20 அடி பாம்பு வடிவம் ஒரு இடத்தில உள்ளது . இங்குள்ள 60ஆம் படி சத்தியத்திற்கு விசேஷமானது .இங்கு செய்யப்படும் சத்தியம் நீதிமன்றத்திலும் செல்லும் என்று கூறப்படுகிறது .
* வெள்ளை பாஷானத்தால் ஆன சுயம்பு மூர்த்தி . உளிபடாத விடங்கம் .சதுர பீடம் .
* மூலவர் லிங்க வடிவில்லாத அர்த்தநாரீஸ்வரர் . இதுவும் வெள்ளை பாஷாணம் .
* இவரை வணங்கினால் தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் .
* இவூருக்கு கோடிமாடச்செங்குன்றுர் என்ற பெயரும் உண்டு .


கோயில் திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 

அமைவிடம் மற்றும் செல்லும் வழி :

நகரின் மையத்தில் இவ் மலை அமைந்துள்ளது . மலைக்கு செல்ல கோவில் பேருந்து உள்ளது . ஈரோடு மற்றும் நாமக்கல் இருந்து பேருந்து உள்ளது .
இக் கோயிலை தரிசித்து விட்டு நாமக்கல் வந்து ஆஞ்சனேயர் மற்றும் நாமக்கல் நரசிம்மரையும் தரிசிக்கலாம் .

For brief details please refer below links.

Video link








23.5.18

Arulmigu sthala Sayana Perumal Temple, Mamalapuram

அருள்மிகு தல சயனப் பெருமாள் திருக்கோயில் 

திருக்கடல் மல்லை ( மாமல்லபுரம் )




மூலவர் - தலசயன பெருமாள் 

தாயார் - நிலமங்கை  தாயார் 

உற்சவர் - உலகுய்ய நின்ற பெருமாள் 

கோலம் -  சயனம் 

தீர்த்தம் - புண்டரீக புட்கரணி , கருட நதி 

மங்களாசனம் - பூதத்தாழ்வார் , திருமங்கை ஆழ்வார் 

* 108 திவ்யதேசங்களில் 63 வது திவ்யதேசம் ஆகும் 

* 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது 

தல வரலாறு 



புண்டரீக முனிவர் பாற்கடல் பரந்தாமனின் மீது அளவற்ற பக்தி பெருக்கால் குளத்தில் உள்ள தாமரை மலர்களை கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்க நினைத்தார் .பறித்த பூக்களை கூடையில் இட்டு கிழக்கு நோக்கி கொண்டு செல்லும் போது ,குறுக்கே கடல் இருந்தது ,பக்தி பெருக்கால் தன் இரண்டுகைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைத்தார் . அண்ணம் அகாரம் இன்றி இதையே செய்துகொண்டிருந்தார் . இதை கண்டு ஆனந்தம் ஆனந்தம் கொண்ட இறைவன் முதியவர் வேடம் இட்டு காரணம் கேட்டார் . அதற்கு புண்டரீக முனிவர் பாற்கடல் செல்ல பாதை ஏற்படுத்துவதாக கூறினார் . உடனே முதியவராக வந்த இறைவன் தனக்கு உணவு தயார் செய்து கொடுத்தால் தானும் உம்மோடு சேர்ந்து இறைப்பதாக கூறினார் . உடனே முனிவர் மகிழ்ந்து விரைவாக இரண்டு பேரும் இறைக்கலாம் என்று எண்ணி உணவு தயார் செய்ய சென்றார் ,உணவு தயார் செய்து திரும்ப வந்து பார்க்கையில் முதியவர் முகுந்தனாக சயனித்திருந்தார் . அதிர்ந்து போன முனிவர் ஆதிசேஷன் மீது கிடப்பவர் வெறும் தரையில் கிடக்கிறாரே என்று மனம் வருந்தி தான் பறித்து வைத்த தாமரை மலர்களை சமர்ப்பித்து திருவடி அருகிலேயே நிரந்தரமாக அமரும் வரத்தை பெற்றார் . இன்றளவும் இத்திருத்தலத்தில் திருவடி அருகே தாமரை மலரையும் ,புண்டரீக முனிவர் அமர்ந்துள்ளதையும் காணலாம் . தரை தலத்தில் சயனித்திருப்பதால்  "தல சயன பெருமாள் "என்று அழைக்கப்படுகிறார் .

மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிவன் ,திருமால் தலத்தையே திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்ததாக தெரிகிறது .


பூதத்தாழ்வார் 

பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் திரு அவதாரம் செய்த திருத்தலம் .

*  பெருமாள் தரை தலத்தில் சயனித்துள்ள ஒரே திவ்யதேசம் , அதனால இங்கு வந்து  நிலம் வீடு சம்பந்தமாக வேண்டுவார்கள் .
*தாயார் தாமரை இன்றி நிலத்திலேயே அமர்ந்துள்ள ஒரே தலம் .
* உற்சவர் தாமரை மலரை ஏந்தியவாறு காட்சி தரும் ஒரே  திவ்யதேசம் .
*திருமகள் பிராட்டி நிலமங்கை தாயார் என்ற நாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம் .

தரிசன நேரம் & முகவரி 

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை 
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00மணி வரை 

மாமல்லபுரம் பேருந்து நிலைய அருகிலேயே உள்ளது .
சென்னையிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளது .




     

15.5.18

Arulmigu Kapaleeshwarar Temple- Mylapore, Chennai

அருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் - மயிலாப்பூர் (திருமயிலை )


நிறைவே கானும் மனம் வேண்டும் சிவனே ! அதை நீ தரவேண்டும் 

ராஜ கோபுரம் 

தேவாரம் பாடல் பெற்ற தல எண்  213


இறைவன்: கபாலீஸ்வரர்.

அம்பாள் : கற்பகாம்பாள்.

தல விருட்சம்: புன்னை மரம்.

தல தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்.

ஆகமம்: காமிக ஆகமம்.

ஆலயப் பழமை: ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.
இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.





கோவில் அமைப்பு:
கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்டு இவ்வாலயம், சென்னை நகரின் நடுப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது.

கிழக்கில் உள்ள கோபுரமே பிரதான இராஜகோபுரம்.
ஏழு நிலைகளைத் தாங்கியபடி சுமார் நூற்று இருபது அடி உயரம் வரை இருக்கும் எனத் தோன்றுகின்றதது.




தல அருமை:
சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன.

இதனால் தானும், சிவனுக்கு ஈடானவன் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது.

இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார்.

பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து போவது இயல்பு.

மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மாவை ஈசனால் படைக்கப்படுவார்.

ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார்.

சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்தார் சிவபெருமான்.

அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார்.

ஆகவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு *கபாலீஸ்வரர்* ஆனார்.

தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.
தல விருச்சம் 


# அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தாள்.
சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார்.

# இதுவே, புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறதைக் காணமுடிந்தது. 

# இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது.

 #வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார்.

# தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார்.

# தேவியர்கள் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர்.

# திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது பத்து பாடல்கள் பாடப்பெற்றிருக்கிறது.

தல பெருமை:
பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள்.

சிவனும் உபதேசிக்க முனைப்பெடுத்து, உபதேசத்தை அருளிக்கொண்டிருந்த சமயத்தில்........

அவ்வேளையில் அங்கு மயில் ஒன்று நடனமாடவே, அந்த மயிலைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை உண்ணிப்பாக கவனிக்காமல் மயில் நடனத்தை வேடிக்கை பார்த்தாள்.

பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பதுதானே இயல்பு.

அதனால், குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதாவாகவே பிற! என்று மயிலாக மாறும்படி செய்து சபித்து விட்டார்.

தன் நிலை குற்றத்தைப் புரிந்து கொண்ட அம்பிகை, தன் குற்றத்திற்கு விமோசனம் கூறுமாறு கேட்டாள்.

அதற்கு ஈசன், நீ பூலோகத்தில் என்னை மயில் வடிவில் வந்து வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார். 

அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.

பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.
இருப்பிடம்:
சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

திருமயிலை புறநகர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கிறது.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மைலாப்பூர்,
சென்னை,
PIN - 600 004

ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

நன்றி : திரு .கருப்புசாமி 

8.3.18

Arulmigu Vaikundavasa perumal temple, koyembedu

அருள்மிகு வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் 

முகப்பு தோற்றம் 




மூலவர் - வைகுண்டவாசர் 

உற்சவர் :  பக்தவச்சலர் 

தாயார் - கனகவல்லி தாயார் 

விருச்சகம் - வில்வம் , வேம்பு 

தீர்த்தம் -  லவசதீர்த்தம் 

புராண பெயர் : குசலவபுரி 





தல சிறப்பு :

*  வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் .

* வால்மீகி மற்றும் லவன் குசன் இங்கு காட்சிஅளிக்கின்றனர் 

* இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் 

* இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது 

* அனுமன்,லக்ஷ்மணன்  இல்லாத ராமர் மற்றும் சீதா காட்சியளிக்கிறார் ஏனென்றால் சீதாவை காண ராமர் அரச கோலத்தில் வராமல் மரவுரி தரித்த கோலத்தில் காட்சிதருகிறார் .இக்கோலத்தில் காண்பது மிக அபூர்வம் . இக்கோவிலின் வெளியே லவசதீர்த்ததில் பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டது .

* கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது . அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர் . கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர் .

* இங்குள்ள விமானம் சாயா விமானம் .

கோவில் அமைவிடம் 

கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி பாலத்தின் இடது புறத்தில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் அருகில் உள்ளது .
காலை  6.30 முதல் 11.00 வரை மாலை 4 மணி முதல் இரவு  8.45 வரை .

If you want English please click

7.3.18

Arulmigu Kurungaleeswarar temple, koyambedu

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் , கோயம்பேடு 

மூலவர் : குறுங்காலீஸ்வரர் 

தாயார் :  ஸ்ரீ தர்ம சம்வர்தனி 

விருச்சகம் :  வில்வம் 



கோவில் சிறப்பு :

*  வடக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோவில் ஆதலால் மோட்ச தலமாக கருதப்படுகிறது . பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார தளம் ஆகும்.

*  அம்பாள் தன் இடது காலை முன் வைத்த வண்ணமாக காட்சியளிக்கிறார் 

* அம்மன் சன்னதி தூணில் ஜூகுணு மஹரிஷி திருவுருவம் இருப்பது சிறப்பு 

* நூதன பஞ்சவர்ண நவகிரக சன்னதி ஒன்று சதுர மேடையில் தாமரையை ஓதவடியில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

*  தாமரை நடுவில் சூரியன் தன் மனைவி உஷா மற்றும் ப்ரதுஷ்டா உடன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் நிற்கிறார் . தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளை பிடித்தபடி சாரதியாய் இருக்கிறரர் .

* இங்குள்ள தூண்களில் ராமாயண காட்சிகள் மிக அழிகிய வேலைப்பாடுடன் செதுக்கப்பட்டுள்ளது .

* கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தூணில் சரபேஸ்வரர் வீற்றியுள்ளார் . அவருக்கு ஞாயிறு கிழமை ராகு காலத்தில் சிறப்பான பூஜை நடைபெறுகிறது .

*  லவன் ,குசன் பிறந்து விளையாடிய இடம் மற்றும் ராமன் சீதைக்காக அஸ்வமேதை யாகம் நடத்திய குதிரையை லவன் மற்றும் குசன் இங்குதான் கட்டி போட்டதாகவும் அதை மீட்க ராமன் அவர்களிடம் போரிட்டதாகவும் வால்மீகி அவர்கள் அதை தடுத்து இவர் தான் உங்களுடைய தந்தை என்று லவன் ,குசேலனிடம் சொன்னார் ஆதலால் பித்ரு தோஷம் போக்க ராமர் இவ் சிவனை வணங்கி பித்ரு தோஷம் போக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

* இக்கோவிலின் அருகிலேயே வைகுண்டவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது இவூரின் சிறப்பு . 

* கோ என்ற அரசன்  ராமன் குதிரைகளை அயம் என்ற இரும்பு  வேலியில் கடியதுதான் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது பேடு என்றால் வேலி என்று பொருள் .  



அமைவிடம் :

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பாலம் அருகில் உள்ளது . மற்றும் கோயம்பேடு மார்க்கெட் அருகில் உள்ளது .காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரை , மாலை 4 மணி முதல் இரவு 8.45 வரை கோவில் திறந்திருக்கும் .


If you need English  please click






13.2.18

Arulmighu Thiruvalythayam Tiruvalleswarar Temple- Padi

வலிதாய நாதர் திருக்கோவில், திருவலிதாயம், பாடி (சென்னை)

_________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் இருபதாவது தலமாகப் போற்றப் படுகிறது.




இறைவன்:

 வலிதாய நாதர், வல்லீஸ்வரர்.
இறைவி: ஜகதாம்பாள், தாயம்மை.

தல விருட்சம்: பாதிரி மரம், கொன்றை.

தல தீர்த்தம்: பரத்வாஜ் தீர்த்தம்.
ஆகமம்: காமீகம்.
ஆலயப் பழமை:  2000 ஆண்டுகள் முற்பட்டது 

தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.



பெயர்க்காரணம்:

பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.



அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு இருந்தது.

ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் இருந்தது.

அம்பாள் உருவம் ஒரு காலத்தில் பின்னப்பட, புதிய மூர்த்தம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து, பின்னமான மூர்த்தத்தை ஈசன் கருவறைக்கு உள்ளே வைத்து விட்டதாக சொன்னார்.


பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் இருந்தது. கைதொழுது வணங்கிக் கொண்டோம்.



பாரத்வாஜ தீர்த்தம்:
ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி உருவம் பெற நேர்ந்தது.

சாபம் நீங்கப் பெற்றார் அவர் (கருங்குருவி) திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார்.

நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறானது அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது என்பர்.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது.

விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும்வேளையில் தான் திருமணம் நிச்சயமாகும்.

ஆனால், நல்ல வரன் அமைய வியாழக் கிழமைகளில் இங்குள்ள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

தல சிறப்பு:

இக்கோவிலில் குரு பகவான் தவம் புரிந்து காமத்தீயை வென்றவராவார்.

அதனால் சென்னையில் உள்ள ஓர் குரு தலமாகவும் திகழ்கிறது.

திருமால், அனுமன், சுக்ரீவன், ராமபிரான், லவகுசலர் முதலியோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்ற தலம் இது.

அகத்திய முனிவர் வில்வலன், வாதாபி ஆகியோரை கொன்ற பாவம் நீங்க இத்தலத்தப் பெருமானை வழிபட்டு பேறு பெற்ற தலமும் இது.

தல பெருமை:

திருவலிதாயம் என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது பாடி என வழங்கப்படுகிறது.

வியாழ பகவானின் மகன்களாக பரத்வாஜர், கரிக்குருவி என்கிற வலியன் ஆகியோர் பிள்ளைகளாக பிறந்தார்கள்.

பரத்வாஜர் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தம் அடைந்து, பல புண்ணிய தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார்.

அவர் இங்கு வந்த போது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார்.

லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார்.

இதனால் இத்தலத்தில் புறாக்கள் அதிகம் காணப்பெறலாம்.

எனவே தான், இத்தலம் “திருவலிதாயம்”என்றும் சிவன் “வலியநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மன் தவப்புதல்வியரான கமலை, வள்ளி என்னும் இருவரையும் விநாயகப்பெருமான் இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.




இத்திருத்தலத்தில் சாப விமோசனம் பெற்றவர்களின் பட்டியல் அகத்தியர் , சந்திரன் , யமன் , அக்னி , ராமர் , அனுமான் ,லவகுசர்கள் , மன்மதன் , இந்திரன் திருமால் என நீளுகிறது.

இது வியாழ பகவான் சாப விமோசனம் பெற்ற தலமாதலால் இது குருஸ்தலமாகவும் விளங்குகிறது.

இங்கு குருவுக்கென்று தனி சன்னதி ஒன்றும் சமீபத்தில் கட்டப் பட்டுள்ளது.

மேலும் இத்திருத்தலத்தில் எழுந்தளியுள்ள எம்பெருமானுக்கு திருவல்லீஸ்வரர் எனப் பெயர் வந்த காரணத்தையும் விளக்கினார் குருக்கள்.

ஒரு முறை பிரம்மாவின் புதல்விகளான கமலை , வல்லி என்பவர்கள் சிவனையே மணாளனாக அடைய நினைத்து தவமியற்றினர்.

அதைத் தெரிந்து கொண்ட சிவ பிரான் தான் சக்திக்கு ஒரு பாதி உடலை அளித்து விட்டதால் அவர்களை மணக்க இயலாத நிலையில் உள்ளதாக எடுத்துக் கூறினார்.

இதில் உள்ள உண்மையை உணர்ந்த அவர்கள் சிவபெருமனைவிடப் புகழில் சற்றும் குறையாத அவரது மகனான விநாகரைத் திருமணம் செய்து கொண்ட இடமாதலால் இங்குள்ள ஈஸ்வரர் , திருவல்லீஸ்வரர் என அழைக்கப் படுகிறார் என்றும் தெரிவித்தார்.

திருஞான சம்பந்தர் மட்டுமல்ல , அருணகிரியார் தான் பாடிய திருப்புகழிலும் திருவலிதாயத்தில் குடி கொண்டுள்ள எம்பிரான் முருகனை, மருமல்லியார்... எனத் தொடங்கும் பாடலின் மூலம் வணங்கியுள்ளார்.

மேலும், கருணையின் மறு வடிவமாகத் திகழ்ந்த இராமலிங்க அடிகளார் , திருவருட்பாவில் இங்குள்ள ஈசனை.......

சிந்தை நின்ற சிவாநந்தச் செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாயத் தலைவ நீ
கந்தை சுற்றும் கணக்கது என் கொலோ!
எனக் கசிந்துருகுகிறார்.

மேலும் இவர் வலிதாய நாதன் மீது பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

மிகவும் பழம் பெருமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் முதலில் வெறும் மரத்தடிக் கோயிலாகவும் , பின்னர் மரக் கோயிலாகவும் இருந்திருக்கிறது.

சோழர் காலத்தில் தான் கற்கோயில் கட்டப்பட்டது என்பதை இங்கேயுள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இங்கே முந்தைய காலங்களில் ஆயர் குலத்தவர் அதிகம் வசித்து வந்த்தால் பாடி என்னும் பெயர் பெற்றது என்கின்றனர்.


*பாடலின் மேன்மை:*
திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற புகழை உடையது இந்தத் திருத்தலம்.

பத்தரோடு ... எனத் தொடங்கி பத்து பாடல்கள் இயற்றியுள்ளார்.

இவ்வாறு பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பிற்கு தமிழ் இலக்கணம் இட்டிருக்கும் பெயர் தான் பதிகம்.

அவர் இறைவனை வலிதாய நாதர் எனவும் இறைவியை தாயம்மை எனவும்  பாடியிருக்கிறார்.

ஆனால் அர்ச்சனையில் இறைவனை திருவல்லீஸ்வர ஸ்வாமி என்றும் அம்பிகையை ஸ்ரீ ஜகதாம்பிகா என்றும் குறிப்பிடுகிறார்கள்.

*சம்பந்தர் தேவாரம்*
பண் :நட்டபாடை

1.பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.



2.படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கலனேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில்
மடையிலங்குபொழி லின்னிழல்வாய்மது வீசும்வலிதாயம்
அடையநின்றவடி யார்க்கடையாவினை யல்லற்றுயர்தானே.


3.ஐயன்நொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்றிரு மாதோடுறைகோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீரும்நலமாமே.



4.ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படைசூழப்
புற்றினாகமரை யார்த்துழல்கின்றவெம் பெம்மான்மடவாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட வுள்கும்வலிதாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடியார்க்கே.


5.புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.



6.ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவரேத்தக்
கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன்சடைதன்மேல்
வானியன்றபிறை வைத்தவெம்மாதி மகிழும்வலிதாயந்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளிவாமே.



7.கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர்வீட்டிப்
பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய பெம்மானுறைகோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலிதாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் முண்மைக்கதியாமே.


8.கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.



9.பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயின்மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடிவாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழுதேத்த
உரியராகவுடை யார்பெரியாரென வுள்கும்முலகோரே.


10.ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர்கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொருளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலிதாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரியோரே.



11.வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருண் மாலைத்தமிழாகக்
கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர்வாரே.


திருவிழாக்கள்:

சித்திரையில் பிரமோற்சவம்,
தை கிருத்திகை,
குரு பெயர்ச்சி.


ஆலயப் பூஜை காலம்:

தினமும் காலை 7.00 மணி முதல் 12.00  மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

 இருப்பிடம் 

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது.

சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம்.
*தொடர்புக்கு:*
044- 26540706

நன்றி -  கு . கருப்புசாமி 

2.2.18

Arulmigu Shri Thirukkachi nambigal and Varatharaja Pereumal Temple- Poonamallee

அருள்மிகு ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் - பூந்தமல்லி 

ராஜ கோபுரம் 

இந்த கோவில் ஐந்து கோபுரங்களை கொண்ட அழகிய கோவிலாகும். மற்றும் திருக்கச்சி நம்பிகள் பிறந்த தலமாகும். இந்த கோவில் 14 மற்றும் 17 ம் நூற்றாண்டு தோன்றியது ஆகும் அதாவது விஜய நகர் காலம் . இங்குள்ள ஊஞ்சல் மண்டபம் அச்சுதப்பா நாயக்கர் உருவாக்கினார் .




கோவிலின் உள்ளே சென்றவுடன் இடது புறத்தில் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்கலாம் . கோவிலின் உட்ப்ரகாரத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் , காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் ,திருக்கச்சி நம்பிகள் ஆகியோரை தரிசிக்கலாம் . திருக்கச்சி நம்பிகள் மூன்று பேரையும் ஒருசேர தரிசிக்க எண்ணி அவர் இதை நிர்மாணித்தார் . வலது புறத்தில் புஷ்பக வள்ளி தாயார் வீற்றிருக்கார் .

ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 21 ம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்குள் சூர்ய கதிர்கள் ஸ்ரீ வரதராஜர் முகத்தில் படும் .

திருக்கச்சி நம்பிகள் பிறந்த நட்சத்திரமான மாசி மிருகசீர்ஷம் அன்று அதாவது பிப்ரவரி மாதத்தில் மிருகசீர்ஷம் ஒட்டி 10 நாட்கள் திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும் .



கோவில் திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம் :

காலை 6.30 முதல் 11.30 வரை 
மாலை 4.30 முதல் இரவு 8.30 வரை 

இத்திருத்தலம் பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தெருவில் உள்ளது .



அருகில் உள்ள திருத்தலங்கள் :

இக்கோவிலின் அருகில் 

1. வைத்தியநாதர் திருக்கோவில் - பூந்தமல்லி 

2. மாங்காடு காமாச்சி  அம்மன் 

3.  வில்லேஸ்வரர் கோவில் -மாங்காடு 

4. வைகுண்ட பெருமாள் கோவில் - மாங்காடு 


Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...