Showing posts with label murugan temple. Show all posts
Showing posts with label murugan temple. Show all posts

11.11.17

Vaidyanathar Temple- Vaitheeswaran Koil

வைத்தியநாதர் கோவில் -வைத்தீஸ்வரன் கோவில்

 








ஆதி வைத்தியநாதர் மற்றும் தல விருச்சம் 


மூலவர் - வைத்தியநாதர் 

தாயார் - தையல்நாயகி 

தலவிருச்சகம் - வேம்பு 

தீர்த்தம் - சித்தாமிர்தம் 

பழமை - 2000 வருடங்கள் முற்பட்டது 

மறுபெயர் - புள்ளிருக்குவேளூர் 

தேவார பாடல் பெற்ற காவேரி வடகரையில் இது 16வது தலம் .





தன்வந்திரி ஜீவ சமாதி 

தல சிறப்புக்கள் :



வைத்தியநாதர்  :

இவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக வீற்றியிருக்கிறார் . இக்கோவிலில் எல்லா நவகிரகங்களும் ஈசனின் பின்புறத்தில் ஒரே நேர்கோட்டில் உள்ளனர் .ஈசனுக்கு அடங்கி நவகிரகங்கள் உள்ளதால் ஈசனை வணங்குவர்களின் கிரக பலனை சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி செய்கிறார் .வைத்தியநாதர் மருந்தை தினமும் சாப்பிட்டுவந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு . இங்குள்ள மரகத லிங்கம் சிறப்பு வாய்ந்தது .

தையல்நாயகி :

தையல்நாயகிக்கு  புடவை சாத்துதல் ,அபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு  செய்வது பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது . மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் தாயாருக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்வார்கள் .இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் நீங்கும் .

செல்வமுத்துகுமார் :

இவருக்கு அர்த்தசாமபூஜை ரொம்ப விசேஷமானது .இரவு 9 மணிக்கு நடக்கும் பூஜையில் புனுகு ,பச்சை கற்பூரம் ,சந்தனம் ,எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம் ,பால் அன்னம் வைத்து பூஜை செய்வர் . இந்த சந்தனம் மற்றும் திருநீறு நோய் தீர்க்கவல்லது .இங்கு முத்துகுமாரரே முதன்மையாக உள்ளதால் காலை மற்றும் அர்த்தஜாம பூஜை முதலில் இவருக்கு செய்த பிறகே சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும் . இங்கு எல்லா விழாக்களும் முருகனுக்கே நடக்கிறது .

அங்காரகன் (செவ்வாய் )

இங்கு அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது . செவ்வாய் தோஷத்தால் தடை பட்ட திருமண தோஷங்கள் ,கடன் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகள் ,நிலம் பிரச்சனைகள் ஆகியவை இவரை வணங்கினால் தீரும் . செவ்வாய் கிழமைகளில் இவர் ஆடு வாகனத்தில் எழுந்தருள்வார் . 

சித்தாமிர்த தீர்த்தம் :

இத்தல சிவனை சித்தர்கள் அமிர்தத்தால் அபிசேகம் செய்து பல வரங்களை பெற்றனர் அவ்வாறு செய்கையில் ஒரு துளி அமிர்தம் இக்குளத்தில் விழுந்ததால் இக்குளத்திற்கு சித்தாமிர்த குளம் என்று அழைக்கப்பட்டது .இக்குளத்தில் நீராடினால் உடலில் உள்ள அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடலாம் .இக்குளத்தில் 18 தீர்த்தங்கள் உள்ளதாக கூறப்படுகிறது .சதானந்த முனிவரின் சாபத்தால் இக்குளத்தில் தவளை மற்றும் பாம்புகள் இருப்பதில்லை .

திருச்சாந்து :

இங்கு புற்று மண் ,அபிசேக தீர்த்தம் ,வேப்ப இலை ,அபிசேக சந்தனம் ,அபிசேக திருநீறு இவைகளை கொண்டு திருச்சாந்து உருண்டை தயார் செய்யப்படுகிறது .இதை வாங்கி சாப்பிட்டால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு .தோல் வியாதிகளுக்கு இங்கே கொடுக்கப்படும் புனுகு எண்ணையை தேய்த்து நீராடினால் குணமாகும் . இக்கோயில் 4448 நோய்களை தீர்த்துவைக்கும் தலைமை பீடம் இது .தன்வந்தரி சித்தரின் ஜீவ சமாதி அடைந்த இடமும்கூட .

சடாயுகுண்டம் :


சடாயுகுண்டம் 



சடாயுவின் வேண்டுதலின் படி ராமபிரான் விபூதி குண்டலத்தில் சிதையடுக்கி சடாயுவின் உடலை இட்டு தகனம் செய்ததால் இவ்விடம் சடாயுகுண்டம் என்று அழைக்கப்படுகிறது .

இத்தல பெருமைகளை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் இது .

மற்றும்  பல மாநிலத்தவரின் குலதெய்வம் என்பதால் தினமும் இங்கே மொட்டை அடித்தல் ,காது குத்துதல் மற்றும் திருமணங்கள் நடை பெறுகின்றனர் .இத்தலத்தில் ஓலை சுவடி ஜோசியம் ரொம்ப பிரபலமானது .

இத்திருக்கோயில் திருக்கைலாய தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமானது .

செல்லும் வழி :

இது நாகப்பட்டினம் மாவட்டதில் மயிலாடுதுறை அருகில் உள்ளது .சிதம்பரம் நடராசரை தரிசனம் செய்துவிட்டு வைத்தியநாதரை தரிசனம் செய்யலாம்.
நிறைய தங்கும் விடுதிகள் இங்கே உண்டு . மொட்டை அடித்தால் சுடு நீர் அருகிலேயே குறைந்த பணத்திற்கு தருகிறார்கள் . சாப்பிட ஒரு ஐயர் மெஸ் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் மிக உயர் தரமான சைவ ஹோட்டலுடன் கூடிய அழகிய தங்கும் விடுதி "சதாபிஷேகம் " என்ற பெயரில் உள்ளது .  விடுதியின் விவரம் பின் வரும் லிங்கை அழுத்தவும் .


திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 வரை , மாலை 4 மணி முதல் இரவு  8.30 வரை 

If you need to English please click following link





12.8.17

Vilvaneswarar temple-Nallur

பிரகன்நாயகி உடனுறை வில்வனேஸ்வர் ஆலயம் - நல்லூர் 



நான் ஆலயங்களை பற்றி எழுத ஆரம்பிக்கும்போது நான் முதலில் எழுதவேண்டிய ஆலயம் இது . ஏனென்றால் நான் பிறந்து வளர்த்த ஊரின் ஆலயம் இது .எனக்குள் கடவுளின் மேல் நம்பிக்கையும் ஆர்வமும் கிட்டிய தலம் .நான் முதன் முதலில் வணங்கிய எம்பெருமான் என் அம்பலத்தானின் திருமுகம் கண்ட தலம் .

விருத்தாசலம் -வேப்பூர் சாலையில் சென்று கண்டப்பங்குறிச்சி சென்று வடக்கில் நான்கு கிமி செல்லவேண்டும்.கடலூர் மாவட்டத்தில் அமைந்த நல்லூர் என்ற ஊர் ஆகும் . இவ்வூருக்கு 
 தனி சிறப்பு தருவது  மூன்று நதிகள் கூடுமிடமாக அமைந்துள்ளது என்பதே,இந்தத் திருத்தலத்தையொட்டி ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு , கோமுகி நதியும் கிழக்கு நோக்கி பாய்கின்றன . ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தலம் நல்லூர். 


              நல்லூர் வில்வவனேஸ்வரர் ஆலயம் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் மேட்டுப் பகுதியான இடத்தில வட மேற்கே அழகுற அமைந்துள்ளது 
  திருக்கோவிலில் கருவறை,அர்த்தமண்டபம் , மகாமண்டபம் ,முகமண்டபம் 



மகா  மண்டபம்:


                இம்மண்டபம் சோழர்கால தூண்களை கொண்டுள்ளது ,தூண்களில் வடக்குபுறம் ஒரு தூணில் கல் வெட்டு காணப்படுகிறது.

                     "ஸ ஸ்  ஸ்ரீ தனித்த 
                      யாண்ட பஞ்சசதி 
                      தகன அறுபடை 
                      யான சுந்தரபட்ட
                      நான தில்லைநாயக 
                      வேளான் "

என்று வெட்டப்பட்டுள்ளது , சுந்தர பட்டனான தில்லை நாயக வேளான் கட்டி வைத்த மண்டபக இருக்ககூடும் , தூண்களும் மண்டப அமைப்பும், கட்டடக் கலைத்திறனும் ஒப்பு நோக்கும் போது இவை சோழர் காலத்திய கலை முறை என்பதை உணர முடிகிறது. மேலும் இம்மண்டபம் மூன்று பக்கங்களிலும் திறந்த நிலையிலும் ,விதானத்தில் மீனின் பெரிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது .


                  கல்வெட்டுக்களை ஒப்புநோக்கும் போது இங்கு சோழர்களும், பாண்டியர்களும்,விசயநகர மன்னர்களும் இப்பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் அரசாண்டாமை புலனாகின்றது.இவற்றில் இக்கோயில் மூலத்தானம் முதல் மகா மண்டபம் வரையில் சோழர்கால கலைப்பணியாக திகழ்கின்றது. கோபுரம் ,முக மண்டபம் பிற பிற்க்காலத்திய பணிகளாக தோன்றுகிறது.ற அமைப்புடன் அமையபெற்றுள்ளது.
               நுழைவு வாயிலில் கோபுரமும்,  முன்மண்டபங்களும், 
திருமண மண்டபம் காணப்படுகிறது .நந்தி மண்டபம் இறைவனை நோக்கி எழுப்பட்டுள்ளது .

இறைவன் கிழக்கு  நோக்கியும் அவரது இடது புறத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். 

வடக்கு திசை நோக்கிய முருகன் :

இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக  உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. 

முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம். 
கருவறை சுற்றி சுற்றாலை மண்டபங்கள் உள்ளன அதில் அறுபத்து மூவர் உள்ளனர். பின் புறம் பிராண தியாகர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி உள்ளனர். 

 கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவபெருமாள், பிரமன், துர்க்கை உள்ளனர் அது போல் இறைவியின் கருவறை சுற்றி ஞானசக்தி, கிர்ரியாசக்தி, பிரம்மா சக்தி என சிலைகள் உள்ளன.  இறைவியின் முகப்பு மண்டபம் ஒட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியுள்ளார்.

 இறைவியின் எதிரிலும் இறைவனின் எதிரிலும் தனி தனி கொடிமரங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சூரியன் உள்ளன. 

இக்கோயில் கடக ராசி உள்ளவர்கள் பார்த்து அருள் பெறவேண்டிய தளம் .ஒரு காலத்தில் வில்வமரங்கள் உள்ள காடுகளுக்கு நடுவே எம்பெருமான் உள்ளதால் இவருக்கு வில்வனேஸ்வர் என்ற பெயர் கிட்டியது .இன்றும் ஊருக்கு வெளியே சுற்றிலும் ஆறுகளால் சூழப்பட்டு நிறைய மரங்களுக்கு இடையே ரம்யமாக அமைதியாக காட்சி அளிப்பார் .

இந்த கோவிலில் மாசி மகம் ஆறாம் நாள் திருவிழா ரொம்ப விசேஷமானது .திருவட்டத்துறையில் 5 ஆம் நாள் திருவிழாவும் ,ஆறாம் நாள் திருவிழாவின் காலை விருதாச்சலத்திலும்  இரவு  இங்கேயும் வரிசையாக காண்பவர்கள் காசிக்கு போய் கிட்டும் புன்னியம் கிட்டுவதாக ஐதீகம் .அதுபோல் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாழ்ந்தது .இங்கு பஞ்ச பாண்டவர்கள் தங்கி ஈசனை வணங்கியதாக சொல்லப்படுகிறது .

அம்பாள் பாலாம்பிகை வேண்டினாள் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு . உங்களுக்கு கடலூர் மாவட்டம் செல்லும் நேரம் கிடைத்தால் இந்த கோவில் , மிக அருகில் உள்ள விருதை,கொளஞ்சியப்பர் ,ஸ்ரீமுஷ்ணம் வராகர் இவைகளையும் சேர்த்து பார்க்கலாம் .

இறைவன்- வில்வனேஸ்வரர் 
 இறைவி- பிரகன்னாயகி

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...