Showing posts with label shivan temple. Show all posts
Showing posts with label shivan temple. Show all posts

16.10.17

Palamalainathar (Viruthagirishwarar) Temple, Viruthachalam

அருள்மிகு பழமலைநாதர்(விருத்தகரீஸ்வர் )ஆலயம் விருத்தாச்சலம்

முழு தோற்றம் 

 சுவாமி : விருத்தகிரீஸ்வரர்
தாயார் : விருத்தாம்பிகை , பாலாம்பிகை 
விருச்சம் : வன்னி மரம் 
தீர்த்தம் : மணிமுத்தாநதி 
புராண பெயர் : திருமுதுகுன்றம் 


சிறப்புக்கள் :






நோய் தீர்க்கும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு திருத்தலங்களில் இது 9 வது தலம் .

விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

வன்னி மரம் 



இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கையம்மனை வழிபட்டால் கல்யாணவரம் கை கூடும், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். கோயில் அருகிலுள்ள மணிமுக்தா நதியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 

விழா காலங்கள் 


இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள்பொடி மற்றும் புடவைசாத்துதல் ஆகியவைகளும் செய்யபட்டு வருகிறது.


ஆழத்து பிள்ளையார்



ஆழத்து பிள்ளையார் 


 ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படைவீடாகும். காளஹஸ்தி கோயிலில் உள்ளது போல் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும் வகையில் விநாயகர் அமர்ந்துள்ளார். ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது.முருகப்பெருமானின் தலையில் சக்கரம் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது






ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரவிழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதற்காக ஒவ்வொரு ஸ்தலமாக பொருள் சேகரித்து கொண்டு வந்தார். இத்தலத்துக்கு வந்தபோது இறைவன், சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். அந்த பொன்னை எடுத்துச்சென்றால் வழியில் கள்வர்கள் பறித்துக்கொள்வார்களோ என பயந்துபோன சுந்தரர் இங்குள்ள மணிமுக்தாற்றில் பொற்காசுகளைப் போட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்தாராம். இதுவே ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி உருவாகக் காரணமானது.

அமைவிடம் 

இந்த  திருத்தலம் கடலூர் மாவட்டதில் அமைந்துதள்ளது . பாண்டி ,திருச்சி ,சென்னை ,சேலம் ஆகிய இடங்களில் இருந்து ட்ரெயின் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது .
இங்கிருந்து சிதம்பரம் தில்லை நாதன் , ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் , கொளஞ்சியப்பர் முருகன் மிக அருகில் உள்ளது .

If you need details in English Please Click following Link

27.8.17

Thandeeshvarar Temple- Velacherry

அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் - வேளச்சேரி 




மூலவர் :               தண்டீஸ்வரர்
தாயார் :                 கருணாம்பிகை 
தல விருட்சம்  : வில்வம் 
தீர்த்தம்                : எம தீர்த்தம் 

சென்னையில் மிகவும் பரப்பரப்பான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் வசிக்கும் இடமான வேளச்சேரி பகுதியில் மிக அமைதியான இடத்தில் அமைந்து உள்ளது இந்த கோயில் . 

வேளச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சாலையில் 1 கி.மீ  சென்றால் எம தீர்த்த குளத்தை அடையலாம் அதன் அருகில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்து உள்ளது . மூலவர் அமைந்து உள்ள பகுதி மிகவும் பழமையாக சிறியதாகவும் உள்ளது .

கருவறையின் கிழக்கில் பிள்ளையாரும் , மேற்கு பகுதியில் அண்ணாமலையரும் வீற்றியிருக்கின்றனர் .

சோமசுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்த நான்கு வேதங்களையும் பறித்து சென்றான் அதனை திருமால் மீட்டு வந்தார் , வேதங்கள் அசுரனிடம் இருந்த தோஷத்தை போக்க சிவனை நோக்கி தவம் செய்தனர் சிவன் அவர்களுக்கு காட்சி தந்து அவர்களின் தோஷத்தை போக்கினார் , வேதங்கள் வழிபட்டதால் 'வேதச்சேரி ' என்று அழைக்கப்பட்டது அதுவே இப்பொது வேளச்சேரி என்று ஆனது .

மார்க்கண்டையரின் ஆயுளை எடுக்க எமன் கயிறை வீசும் போது அது சிவனின் மீது விழுந்தது ,சிவன் கோபம் வந்து யமனின் பதவியை பறித்தார் ,எமன் தன் பாவத்தை மற்றும் தன் பதவியை பெற பூலோகத்தில் உள்ள இந்த குளத்தில் நீராடி தன் பதவியை திரும்ப பெற்றார் . ஆதலால் இவ் பெருமானை வண்ணங்கினால் தீர்க்க ஆயுளையும் இழந்த பதவியையும் பெறலாம் .

எமன் சிவனை பூஜிப்பதற்காக தண்டத்தை ஊன்றி பூஜை செய்தார் பூஜை முடிந்ததும் திரும்ப தண்டத்தை எடுக்க முடியவில்லை அதுவே தண்டு ஈஸ்வரனாக அமைந்ததால் 'தண்டீஸ்வரர் ' என்ற பெயர் பெற்றதாக கூறுவதுண்டு .


கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.30-11.00
                                                                   மாலை 4.00-8.30

சிறப்பு :
இங்கு சஷ்டியர்திபூர்த்தி செய்யவும் , இழந்த பதவிகளை பெறவும் தகுந்த கோவில் .


12.8.17

Vilvaneswarar temple-Nallur

பிரகன்நாயகி உடனுறை வில்வனேஸ்வர் ஆலயம் - நல்லூர் 



நான் ஆலயங்களை பற்றி எழுத ஆரம்பிக்கும்போது நான் முதலில் எழுதவேண்டிய ஆலயம் இது . ஏனென்றால் நான் பிறந்து வளர்த்த ஊரின் ஆலயம் இது .எனக்குள் கடவுளின் மேல் நம்பிக்கையும் ஆர்வமும் கிட்டிய தலம் .நான் முதன் முதலில் வணங்கிய எம்பெருமான் என் அம்பலத்தானின் திருமுகம் கண்ட தலம் .

விருத்தாசலம் -வேப்பூர் சாலையில் சென்று கண்டப்பங்குறிச்சி சென்று வடக்கில் நான்கு கிமி செல்லவேண்டும்.கடலூர் மாவட்டத்தில் அமைந்த நல்லூர் என்ற ஊர் ஆகும் . இவ்வூருக்கு 
 தனி சிறப்பு தருவது  மூன்று நதிகள் கூடுமிடமாக அமைந்துள்ளது என்பதே,இந்தத் திருத்தலத்தையொட்டி ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு , கோமுகி நதியும் கிழக்கு நோக்கி பாய்கின்றன . ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தலம் நல்லூர். 


              நல்லூர் வில்வவனேஸ்வரர் ஆலயம் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் மேட்டுப் பகுதியான இடத்தில வட மேற்கே அழகுற அமைந்துள்ளது 
  திருக்கோவிலில் கருவறை,அர்த்தமண்டபம் , மகாமண்டபம் ,முகமண்டபம் 



மகா  மண்டபம்:


                இம்மண்டபம் சோழர்கால தூண்களை கொண்டுள்ளது ,தூண்களில் வடக்குபுறம் ஒரு தூணில் கல் வெட்டு காணப்படுகிறது.

                     "ஸ ஸ்  ஸ்ரீ தனித்த 
                      யாண்ட பஞ்சசதி 
                      தகன அறுபடை 
                      யான சுந்தரபட்ட
                      நான தில்லைநாயக 
                      வேளான் "

என்று வெட்டப்பட்டுள்ளது , சுந்தர பட்டனான தில்லை நாயக வேளான் கட்டி வைத்த மண்டபக இருக்ககூடும் , தூண்களும் மண்டப அமைப்பும், கட்டடக் கலைத்திறனும் ஒப்பு நோக்கும் போது இவை சோழர் காலத்திய கலை முறை என்பதை உணர முடிகிறது. மேலும் இம்மண்டபம் மூன்று பக்கங்களிலும் திறந்த நிலையிலும் ,விதானத்தில் மீனின் பெரிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது .


                  கல்வெட்டுக்களை ஒப்புநோக்கும் போது இங்கு சோழர்களும், பாண்டியர்களும்,விசயநகர மன்னர்களும் இப்பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் அரசாண்டாமை புலனாகின்றது.இவற்றில் இக்கோயில் மூலத்தானம் முதல் மகா மண்டபம் வரையில் சோழர்கால கலைப்பணியாக திகழ்கின்றது. கோபுரம் ,முக மண்டபம் பிற பிற்க்காலத்திய பணிகளாக தோன்றுகிறது.ற அமைப்புடன் அமையபெற்றுள்ளது.
               நுழைவு வாயிலில் கோபுரமும்,  முன்மண்டபங்களும், 
திருமண மண்டபம் காணப்படுகிறது .நந்தி மண்டபம் இறைவனை நோக்கி எழுப்பட்டுள்ளது .

இறைவன் கிழக்கு  நோக்கியும் அவரது இடது புறத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். 

வடக்கு திசை நோக்கிய முருகன் :

இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக  உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. 

முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம். 
கருவறை சுற்றி சுற்றாலை மண்டபங்கள் உள்ளன அதில் அறுபத்து மூவர் உள்ளனர். பின் புறம் பிராண தியாகர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி உள்ளனர். 

 கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவபெருமாள், பிரமன், துர்க்கை உள்ளனர் அது போல் இறைவியின் கருவறை சுற்றி ஞானசக்தி, கிர்ரியாசக்தி, பிரம்மா சக்தி என சிலைகள் உள்ளன.  இறைவியின் முகப்பு மண்டபம் ஒட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியுள்ளார்.

 இறைவியின் எதிரிலும் இறைவனின் எதிரிலும் தனி தனி கொடிமரங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சூரியன் உள்ளன. 

இக்கோயில் கடக ராசி உள்ளவர்கள் பார்த்து அருள் பெறவேண்டிய தளம் .ஒரு காலத்தில் வில்வமரங்கள் உள்ள காடுகளுக்கு நடுவே எம்பெருமான் உள்ளதால் இவருக்கு வில்வனேஸ்வர் என்ற பெயர் கிட்டியது .இன்றும் ஊருக்கு வெளியே சுற்றிலும் ஆறுகளால் சூழப்பட்டு நிறைய மரங்களுக்கு இடையே ரம்யமாக அமைதியாக காட்சி அளிப்பார் .

இந்த கோவிலில் மாசி மகம் ஆறாம் நாள் திருவிழா ரொம்ப விசேஷமானது .திருவட்டத்துறையில் 5 ஆம் நாள் திருவிழாவும் ,ஆறாம் நாள் திருவிழாவின் காலை விருதாச்சலத்திலும்  இரவு  இங்கேயும் வரிசையாக காண்பவர்கள் காசிக்கு போய் கிட்டும் புன்னியம் கிட்டுவதாக ஐதீகம் .அதுபோல் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாழ்ந்தது .இங்கு பஞ்ச பாண்டவர்கள் தங்கி ஈசனை வணங்கியதாக சொல்லப்படுகிறது .

அம்பாள் பாலாம்பிகை வேண்டினாள் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு . உங்களுக்கு கடலூர் மாவட்டம் செல்லும் நேரம் கிடைத்தால் இந்த கோவில் , மிக அருகில் உள்ள விருதை,கொளஞ்சியப்பர் ,ஸ்ரீமுஷ்ணம் வராகர் இவைகளையும் சேர்த்து பார்க்கலாம் .

இறைவன்- வில்வனேஸ்வரர் 
 இறைவி- பிரகன்னாயகி

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...