அருள்மிகு தாத்ரீஸ்வர் ,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மற்றும் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் - சித்துக்காடு (திருமணம் )
மூலவர் : தாத்ரீஸ்வரர்
தாயார் : பூங்குழலி
சிறப்பம்சம் :
* இங்கு வசித்த படுக்கை ஜடா முனி சித்தர் மற்றும் பிராணதீபிகா சித்தர் தாங்கள் தவம் செய்ய இங்குள்ள நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை நிறுவினர் . சமஸ்கரத்தில் தாத்ரி என்றால் நெல்லி என்று பொருள் .
* சிறந்த மணம் பொருந்திய வனம் என்பதால் இதை திருமணம் என்று அழைக்கப்படுகிறது . சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தர்காடு என்றும் அது மருவி சித்துக்காடு என்று அழைக்கப்படுகிறது .
* இங்குள்ள தூண்களில் ஜடாமுனி மற்றும் பிராணதீபிகா சித்தர்கள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . சுவாச கோளாறு மற்றும் இதய நோயாளிகள் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர் .
* சுவாதி நட்சத்திரர் உடையவர்கள் வணங்கவேண்டிய தலம் இது . சுவாதி நட்சத்திரர்க்காரர்கள் தங்கள் திருமண தடைகளை போக்க இங்கு வந்து தீபம் ஏற்றி வணங்குகிறார்கள் .
* இங்கு திருவாதிரை அன்று நடராஜர் மற்றும் சிவகாமி அவர்களுக்கு திருமணம் விமர்சியாக நடக்கும் இத் திருமணத்தை தம்பதியர் தரிசித்தால் ஒற்றுமை ஓங்கும் .
* ஈஸ்வரனுக்கு முன் உள்ள நந்தி சாந்தமாக காட்சி அளிப்பது சிறப்பு அதனால் அவருக்கு மூக்கணாம் கயறு கிடையாது .
மூக்கணாம் கயறு அற்ற நந்தி |
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் :
மூலவர் : ஸ்ரீ சுந்தரராஜர் பெருமாள்
தாயார் : சுந்தரவல்லி தாயார்
* சிவன் கோயிலுக்கு பின்புறம் இக்கோயில் உள்ளது
* மூலவர் தன் பெயருக்கு ஏற்றார் போல் சுந்தரமாக காட்சி அளிக்கிறார்
* ஆனந்த கூத்தாடும் கண்ணனுக்கு தனி சன்னதி உள்ளது
ஆனந்த கூத்தாடும் கண்னன் |
* கருடக்கொடி சித்தர் இங்குள்ள குளத்திலேயே ஜீவ சமாதி அடைந்துவிட்டார் அவருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது .
* இங்குள்ள ஆண்டாள் அம்மையாரின் தூண்களில் நரசிம்மர் உருவங்கள் மிக அழகாக பொறிக்கப்பட்டுள்ளது .
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் :
* பெருமாள் கோயில் இருந்து 1 km தூரம் கூவம் ஆற்றின் கரையோரம் சென்றால் மிக சிறியதாக இங்குள்ள சிவ அடியார்களால் புணராமிக்கப்பட்டு மிக சிறப்பாக பராமரிக்கப்படுகிறது . பிரதோஷ நாட்களில் மிக சிறப்பாக நடத்துகிறார்கள் .
* சிறிய கோயில் பிரகாரத்து அருகில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது .
செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :
வண்டலூர் மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் பூந்தமல்லி இருந்து பட்டாபிராம் போகும் வழியில் திருமணம் என்று பெயர் பலகை இருக்கும் . பட்டாபிராம் இருந்தும் செல்லலாம் .
காலை 8 மணி இருந்து 9.00 மணி மாலை 5 முதல் 7 மணி வரை . விசேஷ நாட்களில் மாறுபடும் .
இங்குள்ள எல்லா கோவில்களுக்கும் செல்லும் போது முடிந்தவரை நம்மால் தீப எண்ணெய் வாங்கி செல்லவும் .
நிறைவே காணும் மனம் வேண்டும் சிவனே ! அதை நீ தரவேண்டும்
No comments:
Post a Comment