Showing posts with label Vinayagar Temples. Show all posts
Showing posts with label Vinayagar Temples. Show all posts

6.7.18

Sri Thiruvalachuli Nathar, Vellai pillayar Temple- Thiruvalanchuzi

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் மற்றும் வெள்ளை பிள்ளையார் திருக்கோயில் 

மூலவர் - திருவலஞ்சுழிநாதர் 
அம்பாள் - பெரியநாயகி ,பிரஹந்நாயகி 
தீர்த்தம் - காவேரி 
தல விருச்சம் - வில்வம் 
ஊர்              - திருவலஞ்சுழி 







* காவேரியை வலமாக சுற்றும் போது வருவதால் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது 
* பாடல் பெற்ற தலங்களில் இது 88 தலமாகும் 
* இங்குள்ள விநாயகர் மிகவும் சிறப்பு வாழ்ந்தவர் ,இவருக்கென தனி சன்னதி  உள்ளது .இவர் இங்கு வெள்ளை நிறத்தில் காணப்படுவதால் வெள்ளை பி ள்ளையார் என்று அழைக்கப்படுகிறார் .
* பாற்கடலை கடையும் போது ஏற்பட்ட அமுத கடல் நுரையினால்  ஏற்பட்ட  விநாயகர் என்பதால் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் .இவர் சுயம்புவாக காட்சி தருகிறார் .
* தேவேந்திரன் அகல்வியாவின் சாபத்திலிருந்து விடுபட விநாயகரை கையில் சுமந்தபடி பூலோகத்தில் உள்ள சிவ தலங்களுக்கு சென்று தினமும் பூஜை செய்துவந்தார் ,அப்போது இத்தலத்திற்கு வந்தபோது சிவன் சிறுவனாக வந்து இந்திரனுக்கு முன்னாடி காட்சி அளித்தார் அப்போது இந்திரன் சிறுவனான சிவனிடம் தான் நீராட செல்லவேண்டும் அதுவரை விநாயகர் உள்ள பெட்டியை வைத்திருக்குமாறு கூறினார் . சிவன் அந்த விநாயகர் உள்ள பெட்டியை அங்கேயே கீழே வைத்து விட்டு மறைந்துவிட்டார் இந்திரன் வந்து பாத்த போது சிறுவன் இல்லை உடனே பிள்ளையாரின் பெட்டியை எடுக்க முற்பட்டார் ஆனால் எடுக்கமுடியவில்லை பின்பு விஸ்வகர்மாவை வைத்து விநாயகரை சுற்றி இந்திர ரதம் செய்து எடுத்து செல்ல முற்பட்டார் அப்போதும் முடியவில்லை . அப்போது விநாயகர் அசிரீரி மூலம் நான்  இங்கேயே இருப்பதாகவும் விநாயகர் சதுர்த்தி அன்று இங்கு வந்து தன்னை வணங்கினால் தினமும் வணங்கியதற்கு சமம் ஆகும் என்றார் . ஆதலால் இக்கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள் மிக அற்புதமாகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும் .
*விநாயகர் சுயம்பாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் ,அலங்காரம் .பூக்கள் சாத்தப்படுவதில்லை ,பச்சை கற்பூரத்தை பொடி செய்து மட்டுமே சாத்துவார்கள் . 
* விநாயகர் 10 படை வீடுகளில் இத்தலமும் ஒன்று .
* கோயில் மிக பிரமாண்டமாக பெரியதாக இயற்கை அழகோடு மரங்கள் சூழ அமைந்திருக்கிறது.

அமைவிடம் மற்றும் செல்லும் வழி :

சுவாமிமலை அருகில் உள்ளது இங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம் இதன் அருகிலேயே பட்டிஸ்வரம் கோவில் மற்றும் திவ்ய தேசத்தில் ஒன்றான திருப்புள்ளம் பூதங்குடி உள்ளது . கும்பகோணத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

கோயில் திறந்திருக்கும் நேரம் 

காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை 
மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை 

மேலும் புகைப்படங்களுக்கு கிழே உள்ள link ஐ அழுத்தவும் 










16.10.17

Palamalainathar (Viruthagirishwarar) Temple, Viruthachalam

அருள்மிகு பழமலைநாதர்(விருத்தகரீஸ்வர் )ஆலயம் விருத்தாச்சலம்

முழு தோற்றம் 

 சுவாமி : விருத்தகிரீஸ்வரர்
தாயார் : விருத்தாம்பிகை , பாலாம்பிகை 
விருச்சம் : வன்னி மரம் 
தீர்த்தம் : மணிமுத்தாநதி 
புராண பெயர் : திருமுதுகுன்றம் 


சிறப்புக்கள் :






நோய் தீர்க்கும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு திருத்தலங்களில் இது 9 வது தலம் .

விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

வன்னி மரம் 



இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கையம்மனை வழிபட்டால் கல்யாணவரம் கை கூடும், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். கோயில் அருகிலுள்ள மணிமுக்தா நதியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 

விழா காலங்கள் 


இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள்பொடி மற்றும் புடவைசாத்துதல் ஆகியவைகளும் செய்யபட்டு வருகிறது.


ஆழத்து பிள்ளையார்



ஆழத்து பிள்ளையார் 


 ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படைவீடாகும். காளஹஸ்தி கோயிலில் உள்ளது போல் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும் வகையில் விநாயகர் அமர்ந்துள்ளார். ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது.முருகப்பெருமானின் தலையில் சக்கரம் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது






ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரவிழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதற்காக ஒவ்வொரு ஸ்தலமாக பொருள் சேகரித்து கொண்டு வந்தார். இத்தலத்துக்கு வந்தபோது இறைவன், சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். அந்த பொன்னை எடுத்துச்சென்றால் வழியில் கள்வர்கள் பறித்துக்கொள்வார்களோ என பயந்துபோன சுந்தரர் இங்குள்ள மணிமுக்தாற்றில் பொற்காசுகளைப் போட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்தாராம். இதுவே ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி உருவாகக் காரணமானது.

அமைவிடம் 

இந்த  திருத்தலம் கடலூர் மாவட்டதில் அமைந்துதள்ளது . பாண்டி ,திருச்சி ,சென்னை ,சேலம் ஆகிய இடங்களில் இருந்து ட்ரெயின் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது .
இங்கிருந்து சிதம்பரம் தில்லை நாதன் , ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் , கொளஞ்சியப்பர் முருகன் மிக அருகில் உள்ளது .

If you need details in English Please Click following Link

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...