Showing posts with label cuddalore district temple. Show all posts
Showing posts with label cuddalore district temple. Show all posts

8.6.18

Sri Veeranarayana Perumal Temple and Shriman Nathamunigal- Kattumannarkoil

அருள்மிகு வீரநாராயண பெருமாள் கோயில் 






மூலவர்  : வீரநாராயண பெருமாள் 

தாயார் :  மரகதவல்லி தாயார் 

சிதம்பரம் அருகில் சுமார் 25 km தொலைவில் பராந்தக சோழனால் கட்டப்பட்ட மிக பரந்து விரிந்து காணப்படும் வீராணம் ஏரியின் அருகில் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் இக் கோவில் அமைந்துள்ளது . 

இவூரின் சுற்றுப்புறங்களில் மிகவும் பழமையான சிவ ஆலயங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்கள் உள்ளது . இவைகள்  இப்போது மிகவும் நலிந்து இருப்பதால் அக் கோவில்களுக்கு செல்பவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யவும் .

நாலாயிர திவ்ய பிரபந்தம் இசையோடு பாடப்பெற்ற தலம் 

ஸ்ரீமன் நாதமுனிகள் :

12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற 4000 பாசுரங்களை ஒன்று திரட்டி இசையோடு நாதமுனிகள் இங்கு பாடினார் . இவருடைய இந்த சீரிய முயற்சியாலேயே நம்மால் 108 திவ்ய தேசங்களை கண்டுபிடிக்கமுடிந்தது .

இந்த ஊரின் அருகில் சுமார் 2 km  தொலைவில் குப்பன்குழி என்ற ஊரில் நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் சுவாமிகள் அவதரித்தார்கள் 

கோயில் திறந்திருக்கும் நேரம் :

காலை 7 மணி முதல் 12 Pm வரை  மற்றும் மாலை 4 மணி முதல்  இரவு 9 மணி வரை 

phone :04144-262257

for more details please click following link









22.11.17

Narasimhar Temple- Singarkudi / Singirikudi

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் - சிங்கர்குடி  / சிங்கிரிக்குடி 

மூலவர் 

மூலவர் : நரசிம்மர் 

தாயார் : கனகவல்லி தாயார் 

தீர்த்தம் : ஜமத் கனி, இந்திரா ,பிறகு வாமன மற்றும் கருட தீர்த்தம் என                           ஐந்து வகை தீர்த்தம்  

விருச்சகம் : வில்வம் 

ராஜகோபுரம் 

தல பெருமை :

இத்தலம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது . இங்கு நரசிம்மர் 16 கைகளுடன் மேற்கு பார்த்து வீற்றியிருக்கிறார் . நரசிம்மர் தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காக  மேற்கு திசையை நோக்கியவாறு இரணியனை வதம் செய்தார் அந்த பிரமாண்ட உருவத்துடன் 16 கைகளுடன் மிக உக்கிரமாக காட்சி அளிக்கிறார் . மற்றும் இடது புறத்தில் இரணியனின் மனைவி நீலாவதி வலது புறத்தில் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள் மற்றும் வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர்,பால நரசிம்மர் வீற்றியிருக்கிறார்கள் .ஒரே இடத்தில 3 நரசிம்மர்கள் காட்சி கொடுப்பது மிக அரிது.

நரசிம்மர் தன் 16 கைகளில் பதாகஹஸ்தம் ,பிரயோக சக்ரம் ,குத்து கத்தி ,பானம் ,வில் ,சங்கு ,கதை ,கேடயம் ஆகியவற்றைகளையும் மற்ற கரங்களில் இரணியன் சம்ஹரமான குடலை கிழிப்பது ,மாலையாய் பிடித்திருத்தல் ,இரணியனின் தலையை அழுத்தி பிடித்தல் ஆகியவற்றுடன் காட்சி அளிக்கிறார் .
நுழைவாயில் 

தல சிறப்பு :

நரசிம்மர் உக்கிர கோலத்தில் லக்ஷ்மியை மடியில் வைத்தோ அல்லது யோக நிலையிலோ எல்லா கோவில்களிலும் காணலாம் ஆனால் இங்கு அவர் 16 கைகளுடன் இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிரமாக காட்சி கொடுக்கிறார் .
ஒரே தலத்தில் 3 நரசிம்ஹர் காட்சி கொடுக்கும் தலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது .

பொது :

இத்தலத்தில் 5 நிலை கோபுரம் ,கனகவல்லி தாயார் ,ராமர் ,16ஆழ்வார்கள் ,விநாயகர் ,ஆஞ்சநேயர் ஆகியவர்கள் தனி தனி சன்னதியில் வீற்றியுள்ளார்கள் .

நரசிம்மரை வேண்டினாள் கடன் பிரச்சனை ,மனநலம் பாதித்தவர்கள் ,குழந்தை வரம் ,எதிரிகளால் வரும் தொல்லை ஆகியவற்றிகளுக்கு வேண்டி செவ்வாய் கிழமைகளில் மற்றும் ஸ்வாதி நட்சத்திரம் அன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் .

 செல்லும் வழி :

எல்லாரும் வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய தலம் இது . ஒரே நாளில் சிங்கர்குடி ,பூவரசன் குப்பம் பூவரகன்  ,பரிக்கல் நரசிம்மர் தரிசிப்பது மிக சிறப்பு இவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் மிக அருகிலேயே அமைந்துள்ளது .


சிங்கர்குடிக்கு பாண்டிச்சேரியிலிருந்து 10 km தூரம் கடலூர் செல்லும் வழியில் தவளக்குப்பம் என்ற இடத்தில இறங்கி ஆட்டோவில் இக்கோவிலுக்கு செல்லவேண்டும் .கடலூரில் இருந்தும் பாண்டிச்சேரி போகும் வழியில் இறங்கி செல்லலாம் .நிறைய பேருந்து வசதிகள் உள்ளது 

கோவில் திறந்திருக்கும் நேரம் :

காலை 7 முதல் 12 வரை , மாலை 4.30 முதல் 9.30 வரை 
இக்கோவில் கடலூர் மாவட்டத்தை உள்ளடங்கியது .

More details about this temple:



This is a Nrusimha Khsetra, situated about 3kms west of Abhishekapakkam road junction of Pondicherry--Cuddalore Road.

This holy place is at a distance of about 15 kms from Pondicherry.

This temple dedicated to Sri Nrusimha belong to Chola period,identified as AYIRRUR of ALWAR of Singavezhkundram(1051 A.D.)

There were stone inscriptions in the temple which describe the donations offered by Chola Kings , Sri Krishnadevaraya etc to Sri Nrusimha.

Sri Nrusimha is giving dharsan with 16 hands( thirukkarams )in a gigantic posture.
You could see Neelavathi, wife of Hiranyakasibu, threeASuras, Prahladha , Sukracharya, Vasishta in the lower east of the pedastal. 
Sri Devanathan , the presiding deity of Thiruvaheendrapuram is giving dharsan here as Sri Nrusimha. 

Sri Thirumangai Azhvar says that SRi Nrusimha is there at Thiruvaheendrapuram as Sri Devanatha.
Markandeya purana describes this holy Khsetra in Nrusimha vana purana. 
There is Brindavan for 4th Peedathipathi of Sri Ahobila Mutt here

Thanks To Mr. Saranathan Lakshminarasimhan for the above content 

25.10.17

Kolanji Appar Temple(Murugan Temple)- Manavalanallur-Vriddhachalam

கொளஞ்சி அப்பர் கோவில் (முருகன் )---
விருத்தாச்சலம் 

அருள்மிகு கொளஞ்சியப்பர் சந்தன அலங்காரத்துடன் 


தல பெருமை :

நடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றான 'திருமுதுகுன்றம் 'என்னும் விருதாச்சலத்திற்கு அருகில் கடும் பூவும் நிறைந்த புள்ளினங்கள் ,வண்டினங்களும் இசைபாடும் இதைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது .'குரங்கு உலாவும் குன்றுறை மணவாள 'என்று அருணகிரிநாதர் அருளியதால் கந்தன் எழுந்தருளிய காரணத்தால் மணவாளநல்லூர் என்று அழைக்க படுகிறது .

இன்றைய கந்தசஷ்டி கடைசி நாளான சூரசம்ஹார நாளன்று இந்த கந்தனை பற்றி எழுத எனக்குள் உந்துதலை என் கருணை வடிவான கந்தன் ஏற்படுத்தியதை நான் என்னவென்று சொல்லுவேன் .

சுயம்புவாக கொளஞ்சியப்பன் :

தந்தையை போல் தானும் அருவுருவமாய் காட்சி தரும் தலம் மணவாளநல்லூர் .ஒரு காலத்தில் கொளஞ்சி மரங்கள் அதிகமாக இருந்த பகுதி ,ஒரு சமயம் சில சிறுவர்கள் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டி வந்தபோது ஒரு பசு மட்டும் தினமும் ஒரு புதருக்குள் ஆடாமல் அசையாமல் நிற்பதை கவனித்த சிறுவர்கள் அந்த இடத்தை சென்று பார்க்கும்போது பசு அங்கு இருந்த ஒரு கருங்கல் பீடத்துக்கு தானாகவே பால் சொரிவதை கவனித்தனர் . உடனே அவர்கள் ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அந்த சுயம்புவாக தோன்றிய இடத்தில் கோவில் எழுப்பி வழிபட தொடங்கினர் .கொளஞ்சி வனத்தில் தோன்றியதால் 'கொளஞ்சியப்பர் 'என்ற திருப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார் .


திருத்தல வரலாறு 

சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்தபோது ,விருத்தாச்சலம் திருத்தல வரலாற்றில் 'தம்பிரான் தோழன் 'என்று சொல்லக்கூடிய சுந்தரமுர்த்தி நாயனார் தில்லை இருந்து பதிகம் பாடி 
விருத்தாச்சலம் அடையும் போது ஊர் மற்றும் சுவாமி பெயர்களை கேள்வியுற்று முதுமை தன்மை வாய்ந்த இவர்களால் போன் ,பொருள் கிடைக்காது என கருதி பாடாமல் சென்ற போது திருமுதுகுன்ற ஈசனாகிய பரம்பொருள் அவரிடம் விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் 
'சுந்தரர் மதியாது செல்வதால் அவரை எமதிடத்திற்கு வருவிக்க செய் ' என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் என்று தெரிய வந்தது .அதன்படி விருத்தாச்சலம் நகருக்கு மேற்கு திசையில் முருகன் தான் பலிபீட உருவில் அமைந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டது .

திருத்தல பெருமை மற்றும் பிராது கட்டுதல் :

பிராது கட்டும் இடம் 


இத்திருத்தலத்தில் முருகர் நீதிபதியாகவும் வைத்தியராகவும் அருள்புரிகிறார் .அதன்படி பக்தர்கள் தங்களுடைய கஷ்டங்களையும் ,நியாயமான கோரிக்கைகளையும் எழுத்து மூலமாக சுவாமிக்கு பிராது செலுத்தி செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் முழுவதுமாக நிவர்த்தி பெறுவதும் ,கோரிக்கை நிறைவேறியவர்கள் பிராத்தனை திரும்ப பெற்றுக்கொள்வதும் அன்றாடம் நடந்து வருகிறது .

பிணி தீர்க்கும் வேப்பஎண்ணெய் :

கை கால் வலி உள்ளவர்கள் ,தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம் ,அரை மண்டலம் என தங்கி கொளஞ்சியப்பரை தரிசித்து அவரது சன்னதியில் பூஜித்து வழங்கும் வேப்பஎண்ணெயினை உடம்பில் பூசியும் ,அருந்தியும் குணமடைந்து வருகின்றனர் .

சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் :



முருகருக்கு அருகிலேயே சித்தி விநாயகருக்கும் தனிவிமானதுடன் கூடிய கருவறை உண்டு இவர் பெரிய திருமேனியுடன் காட்சி அளிப்பார் .இவருக்கு நேர் எதிரே இரண்டு பெரிய கம்பிரமான குதிரை உள்ளது .மற்றும் முனியப்பர் ,வீரனார் ,இடும்பன் ஆகியோர் சன்னதி கொண்டு இருக்கின்றனர் .முனியப்பர் நேரே நிறைய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

அமைவிடம் :

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் உள்ளது . விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நல்லூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் 10 நிமிடங்களில் சென்றுவிடலாம் .

If you need further details in English please click following link

16.10.17

Palamalainathar (Viruthagirishwarar) Temple, Viruthachalam

அருள்மிகு பழமலைநாதர்(விருத்தகரீஸ்வர் )ஆலயம் விருத்தாச்சலம்

முழு தோற்றம் 

 சுவாமி : விருத்தகிரீஸ்வரர்
தாயார் : விருத்தாம்பிகை , பாலாம்பிகை 
விருச்சம் : வன்னி மரம் 
தீர்த்தம் : மணிமுத்தாநதி 
புராண பெயர் : திருமுதுகுன்றம் 


சிறப்புக்கள் :






நோய் தீர்க்கும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு திருத்தலங்களில் இது 9 வது தலம் .

விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

வன்னி மரம் 



இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கையம்மனை வழிபட்டால் கல்யாணவரம் கை கூடும், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். கோயில் அருகிலுள்ள மணிமுக்தா நதியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 

விழா காலங்கள் 


இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள்பொடி மற்றும் புடவைசாத்துதல் ஆகியவைகளும் செய்யபட்டு வருகிறது.


ஆழத்து பிள்ளையார்



ஆழத்து பிள்ளையார் 


 ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படைவீடாகும். காளஹஸ்தி கோயிலில் உள்ளது போல் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும் வகையில் விநாயகர் அமர்ந்துள்ளார். ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது.முருகப்பெருமானின் தலையில் சக்கரம் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது






ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரவிழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதற்காக ஒவ்வொரு ஸ்தலமாக பொருள் சேகரித்து கொண்டு வந்தார். இத்தலத்துக்கு வந்தபோது இறைவன், சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். அந்த பொன்னை எடுத்துச்சென்றால் வழியில் கள்வர்கள் பறித்துக்கொள்வார்களோ என பயந்துபோன சுந்தரர் இங்குள்ள மணிமுக்தாற்றில் பொற்காசுகளைப் போட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்தாராம். இதுவே ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி உருவாகக் காரணமானது.

அமைவிடம் 

இந்த  திருத்தலம் கடலூர் மாவட்டதில் அமைந்துதள்ளது . பாண்டி ,திருச்சி ,சென்னை ,சேலம் ஆகிய இடங்களில் இருந்து ட்ரெயின் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது .
இங்கிருந்து சிதம்பரம் தில்லை நாதன் , ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் , கொளஞ்சியப்பர் முருகன் மிக அருகில் உள்ளது .

If you need details in English Please Click following Link

12.8.17

Vilvaneswarar temple-Nallur

பிரகன்நாயகி உடனுறை வில்வனேஸ்வர் ஆலயம் - நல்லூர் 



நான் ஆலயங்களை பற்றி எழுத ஆரம்பிக்கும்போது நான் முதலில் எழுதவேண்டிய ஆலயம் இது . ஏனென்றால் நான் பிறந்து வளர்த்த ஊரின் ஆலயம் இது .எனக்குள் கடவுளின் மேல் நம்பிக்கையும் ஆர்வமும் கிட்டிய தலம் .நான் முதன் முதலில் வணங்கிய எம்பெருமான் என் அம்பலத்தானின் திருமுகம் கண்ட தலம் .

விருத்தாசலம் -வேப்பூர் சாலையில் சென்று கண்டப்பங்குறிச்சி சென்று வடக்கில் நான்கு கிமி செல்லவேண்டும்.கடலூர் மாவட்டத்தில் அமைந்த நல்லூர் என்ற ஊர் ஆகும் . இவ்வூருக்கு 
 தனி சிறப்பு தருவது  மூன்று நதிகள் கூடுமிடமாக அமைந்துள்ளது என்பதே,இந்தத் திருத்தலத்தையொட்டி ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு , கோமுகி நதியும் கிழக்கு நோக்கி பாய்கின்றன . ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தலம் நல்லூர். 


              நல்லூர் வில்வவனேஸ்வரர் ஆலயம் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் மேட்டுப் பகுதியான இடத்தில வட மேற்கே அழகுற அமைந்துள்ளது 
  திருக்கோவிலில் கருவறை,அர்த்தமண்டபம் , மகாமண்டபம் ,முகமண்டபம் 



மகா  மண்டபம்:


                இம்மண்டபம் சோழர்கால தூண்களை கொண்டுள்ளது ,தூண்களில் வடக்குபுறம் ஒரு தூணில் கல் வெட்டு காணப்படுகிறது.

                     "ஸ ஸ்  ஸ்ரீ தனித்த 
                      யாண்ட பஞ்சசதி 
                      தகன அறுபடை 
                      யான சுந்தரபட்ட
                      நான தில்லைநாயக 
                      வேளான் "

என்று வெட்டப்பட்டுள்ளது , சுந்தர பட்டனான தில்லை நாயக வேளான் கட்டி வைத்த மண்டபக இருக்ககூடும் , தூண்களும் மண்டப அமைப்பும், கட்டடக் கலைத்திறனும் ஒப்பு நோக்கும் போது இவை சோழர் காலத்திய கலை முறை என்பதை உணர முடிகிறது. மேலும் இம்மண்டபம் மூன்று பக்கங்களிலும் திறந்த நிலையிலும் ,விதானத்தில் மீனின் பெரிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது .


                  கல்வெட்டுக்களை ஒப்புநோக்கும் போது இங்கு சோழர்களும், பாண்டியர்களும்,விசயநகர மன்னர்களும் இப்பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் அரசாண்டாமை புலனாகின்றது.இவற்றில் இக்கோயில் மூலத்தானம் முதல் மகா மண்டபம் வரையில் சோழர்கால கலைப்பணியாக திகழ்கின்றது. கோபுரம் ,முக மண்டபம் பிற பிற்க்காலத்திய பணிகளாக தோன்றுகிறது.ற அமைப்புடன் அமையபெற்றுள்ளது.
               நுழைவு வாயிலில் கோபுரமும்,  முன்மண்டபங்களும், 
திருமண மண்டபம் காணப்படுகிறது .நந்தி மண்டபம் இறைவனை நோக்கி எழுப்பட்டுள்ளது .

இறைவன் கிழக்கு  நோக்கியும் அவரது இடது புறத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். 

வடக்கு திசை நோக்கிய முருகன் :

இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக  உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. 

முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம். 
கருவறை சுற்றி சுற்றாலை மண்டபங்கள் உள்ளன அதில் அறுபத்து மூவர் உள்ளனர். பின் புறம் பிராண தியாகர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி உள்ளனர். 

 கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவபெருமாள், பிரமன், துர்க்கை உள்ளனர் அது போல் இறைவியின் கருவறை சுற்றி ஞானசக்தி, கிர்ரியாசக்தி, பிரம்மா சக்தி என சிலைகள் உள்ளன.  இறைவியின் முகப்பு மண்டபம் ஒட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியுள்ளார்.

 இறைவியின் எதிரிலும் இறைவனின் எதிரிலும் தனி தனி கொடிமரங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சூரியன் உள்ளன. 

இக்கோயில் கடக ராசி உள்ளவர்கள் பார்த்து அருள் பெறவேண்டிய தளம் .ஒரு காலத்தில் வில்வமரங்கள் உள்ள காடுகளுக்கு நடுவே எம்பெருமான் உள்ளதால் இவருக்கு வில்வனேஸ்வர் என்ற பெயர் கிட்டியது .இன்றும் ஊருக்கு வெளியே சுற்றிலும் ஆறுகளால் சூழப்பட்டு நிறைய மரங்களுக்கு இடையே ரம்யமாக அமைதியாக காட்சி அளிப்பார் .

இந்த கோவிலில் மாசி மகம் ஆறாம் நாள் திருவிழா ரொம்ப விசேஷமானது .திருவட்டத்துறையில் 5 ஆம் நாள் திருவிழாவும் ,ஆறாம் நாள் திருவிழாவின் காலை விருதாச்சலத்திலும்  இரவு  இங்கேயும் வரிசையாக காண்பவர்கள் காசிக்கு போய் கிட்டும் புன்னியம் கிட்டுவதாக ஐதீகம் .அதுபோல் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாழ்ந்தது .இங்கு பஞ்ச பாண்டவர்கள் தங்கி ஈசனை வணங்கியதாக சொல்லப்படுகிறது .

அம்பாள் பாலாம்பிகை வேண்டினாள் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு . உங்களுக்கு கடலூர் மாவட்டம் செல்லும் நேரம் கிடைத்தால் இந்த கோவில் , மிக அருகில் உள்ள விருதை,கொளஞ்சியப்பர் ,ஸ்ரீமுஷ்ணம் வராகர் இவைகளையும் சேர்த்து பார்க்கலாம் .

இறைவன்- வில்வனேஸ்வரர் 
 இறைவி- பிரகன்னாயகி

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...