* திருநின்றவூரில் பெருமாள் கோவிலின் பின்புறம் ஏரியின் மேல் அமைந்துள்ளது . கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டிய தலம் .
*முன்னோரு காலத்தில் திருநின்றவூர் ஏரி நீரால் நிரம்பி அடிக்கடி ஏரி உடைந்து இந்த ஊரை மூழ்க செய்யும் ,ஆதலால் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி ராமரை வேண்டினர் ராமர் தனக்கு ஏரி கரையில் கோயில் அமைக்குமாறு கூறினார் ,அவர்களும் அவ்வாறே செய்ய ஏரி காப்பாற்றப்பட்டது .
moolavar-tks to google
* ஏரியின் கரையில் மிக ரம்மியமாக காட்சி அளிக்கிறது இந்த கோயில் .
* உள்ள நுழைந்தவுடன் இடது பக்கம் நர்த்தனம் ஆடும் கிருஷ்ணன் சிலை உள்ளது . வலதுபுரத்தில் ஆஞ்சநேயர் தன் இரு தோள்களின் மேல் ராமரையும் ,லக்ஷ்மணரையும் சுமந்து காலுக்கு அடியில் லங்கிணியை மிதித்தும் காட்சியளிக்கிறார் .அவரது பின்புறத்தில் இருவருடைய பாத தரிசனம் செய்யலாம் .
ஆஞ்சனேயர் ராமர் மற்றும் லக்ஷ்மணரை தோளில் சுமந்தபடி -Tks Google
* மூலசானத்தில் ராமர் ,லக்ஷ்மணர் மற்றும் சீதை மிக மிக உயரமாக காட்சி அளிக்கின்றனர் .
* கோவிலின் பின்புறம் ஏரி மிக பெரியதாகவும் மிக ரம்மியமாகவும் காட்சி தருகின்றது .
அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பூசலார் நாயன்மார் - திருநின்றவூர்
மூலவர் : இருதயாலீஸ்வரர்
தாயார் : மரகதவல்லி ,மரகதாம்பிகை
விருச்சம் : வில்வம்
ஊர் : திருநின்றவூர்
மாவட்டம் : திருவள்ளூர்
* சுவாமியின் கருவறையிலேயே பூசலார் நாயனாரின் திருஉருவ சிலை அமைந்திருப்பது சிறப்பு
* பூசலார் இதயத்தில் கட்டிய கோயிலை போல் நிஜத்தில் பல்லவ மன்னன் ராஜா சிம்மன் கட்டிய கோயில்
* சுவாமியின் விமானம் கஜபிருஷ்டம் என்ற அமைப்பில் உள்ளது .
* இருதய நோய் உள்ளவர்கள் வேண்டிக்கொள்ளும் கோயில் மற்றும் இருதய மருத்துவர்கள் தன் நோயாளிகளுக்கு விரைவில் குணம் அடைய வேண்டிக்கொள்கிறார்கள் .
பூசலார் வரலாறு :
Thanks to Google
திருநின்றவூரில் பூசலார் என்ற ஒரு சிவனடியார் இருந்தார் அவர் தினமும் ஒரு சிவலிங்கத்தை பூஜித்து வந்தார் .அந்த சிவலிங்கம் வெயில் ,மழை இவைகளால் பாதிக்கப்படுவதை கண்டு மனம் வெந்து தன் இதயத்தில் சிவனுக்கு கோயில் கட்டினார் மனதில் கட்டுவதை கூட அவர் ஒரு கோயில் கட்ட எவ்வளவு காலங்கள் தேவைப்படுமோ அவ்வளவு காலங்கள் தன மனதிலேயே அழகிய மதில் சுவர்கள் ,கருவறை மற்றும் பெரிய பொருட்செலவில் கட்டினார் . இதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ராஜசிம்மன் மன்னன் ஒரு மிக பெரிய கோயிலை கட்டி வந்தான் .இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷகத்திற்கு நாள் குறித்தனர் .
சிவபெருமான் மன்னனின் கனவில் வந்து என்னுடைய பக்தன் ஒருவன் திருநின்றவூரில் இதே நாளில் கும்பாபிஷகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் ஆகவே நான் அங்கு செல்லவிருக்கிறேன் நீ வேற ஒரு நாளில் நடத்திமாறு கேட்டுக்கொண்டார் .
மன்னன் கண்விழித்து பார்த்து இது கனவு என்று உணர்ந்தான் தன் கனவில் சொன்ன இடத்தை தேடி வந்து அங்குள்ளவர்களிடம் பூசலார் கோயிலை பற்றி விசாரித்தார் ஆனால் அதை பற்றி யாருக்கும் தெரியவில்லை ,பின்பு பூசலாரை கண்டு அவர் தன் கனவில் கண்டதை கூறினார் அதை கேட்டு ஆச்சரியப்பட்டு பூசலார் தன் கோயிலை தன் இதயத்தில் கட்டியதாகவும் அதை அறிந்து சிவனே உங்களிடம் கூறியதை கண்டு தன் பேரானந்தம் கொண்டதாகவும் கூறினார் .
ஆச்சரிய பட்ட மன்னன் எவ்வளவு செலவு செய்து கோவில் கட்டுவதை விட தூய்மையான மனதில் கட்டும் கோவிலே சிறந்தது என்று எண்ணி அந்தநாளில் அவரின் இதயத்தில் கட்டிய கோயிலின் கும்பாபிஷகத்தை காண வினவினார் .பூசலாரும் அவரின் எண்ணத்தை நிறைவேற்ற தன் மனதில் கட்டிய கோவிலை காட்டினார் இருவரும் அதை கண்டுகளித்தனர் . சிவபெருமான் பூசலாரை தன் நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார் . மன்னனும் அதே இடத்தில் கோவிலை கட்டிக்கொடுத்தார் .
செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :
சென்னை -திருவள்ளூர் செல்லும் ரயில் மார்க்கத்தில் திருநின்றவூர் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவும் . மற்றும் பூந்தமல்லி ,கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன .
ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் - திருநின்றவூர்
மூலவர் : பக்தவத்சல பெருமாள்
தாயார் : என்னைப் பெற்ற தாயார் , சுதாவல்லி
கோலம் : நின்ற கோலம்
மங்களாசனம் - திருமங்கை ஆழ்வார்
ஊர் - திருநின்றவூர்
மாவட்டம் - திருவள்ளூர்
* 58 வது திவ்ய தேசம்
* லட்சுமி பிராட்டி ஒரு முறை வைகுண்டத்திலிருந்து இங்கு வந்து நின்றதால் திருநின்றவூர் என்று பெயர் பெற்றது .
* தாயார் இவூரின் அழகை கண்டு மீண்டும் வைகுண்டம் செல்ல விரும்பாமல் இங்கேயே இருந்தார் அப்போது அவருடைய தகப்பனார் சமுத்திரராஜன் அவரை என்னை பெற்ற தாயே என்று அழைத்த காரணத்தால் என்னைப் பெற்ற தாயார் என்று அழைக்கப்படும் ஒரே திவ்ய தலம் இதுவாகும் .
* குபேரர் தன் நிதியை இழந்து தவித்தபோது இங்கு வந்து என்னைப் பெற்ற தாயாரை வணங்கி தன் நிதிகளை பெற்றதால் இவர் இங்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவலக்ஷ்மியாகவும் காட்சி தருகிறார் .
* இங்கு ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உள்ளது . இவரை வேண்டி பக்தர்கள் ராகு தோஷ நிவர்த்தி மற்றும் கல்யாண தடைகளிலிருந்து விடுபடுகிறார்கள் .
* சமுத்ரராஜன் மற்றும் வருணன் இருவரும் தாயாரை வைகுண்டத்திற்க்கு திரும்பவருமாறு அழைத்தும் அவர் மறுக்கிறார் உடனே இருவரும் திருமாலிடம் சென்று தாயாரை அழைத்துவர விண்ணப்பித்தனர் ,திருமாலும் மனமிறங்கி வைகுண்டம் விட்டு இத்தலம் வந்தார் .இவ்விருவரின் பக்திக்காக இங்கு வந்ததால் இவருக்கு பக்தவத்சல பெருமாள் என்ற திருநாமம் .
* இத்தலம் தாயாருக்கு சிறப்பு பெற்ற திவ்ய தேசம் .
செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :
சென்னை - திருவள்ளூர் ரயில் பாதையில் திருநின்றவூர் நிறுத்தம் உள்ளது .அங்கிருந்து ஆட்டோவில் செல்லவேண்டும் . கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன . சென்னை மீஞ்சூர் -வண்டலூர் வெளிவட்டை சாலை வழியாகவும் செல்லலாம் .
அருள்மிகு தாத்ரீஸ்வர் ,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மற்றும் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் - சித்துக்காடு (திருமணம் )
மூலவர் : தாத்ரீஸ்வரர்
தாயார் : பூங்குழலி
சிறப்பம்சம் :
* இங்கு வசித்த படுக்கை ஜடா முனி சித்தர் மற்றும் பிராணதீபிகா சித்தர் தாங்கள் தவம் செய்ய இங்குள்ள நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை நிறுவினர் . சமஸ்கரத்தில் தாத்ரி என்றால் நெல்லி என்று பொருள் .
* சிறந்த மணம் பொருந்திய வனம் என்பதால் இதை திருமணம் என்று அழைக்கப்படுகிறது . சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தர்காடு என்றும் அது மருவி சித்துக்காடு என்று அழைக்கப்படுகிறது .
* இங்குள்ள தூண்களில் ஜடாமுனி மற்றும் பிராணதீபிகா சித்தர்கள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . சுவாச கோளாறு மற்றும் இதய நோயாளிகள் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர் .
* சுவாதி நட்சத்திரர் உடையவர்கள் வணங்கவேண்டிய தலம் இது . சுவாதி நட்சத்திரர்க்காரர்கள் தங்கள் திருமண தடைகளை போக்க இங்கு வந்து தீபம் ஏற்றி வணங்குகிறார்கள் .
* இங்கு திருவாதிரை அன்று நடராஜர் மற்றும் சிவகாமி அவர்களுக்கு திருமணம் விமர்சியாக நடக்கும் இத் திருமணத்தை தம்பதியர் தரிசித்தால் ஒற்றுமை ஓங்கும் .
* ஈஸ்வரனுக்கு முன் உள்ள நந்தி சாந்தமாக காட்சி அளிப்பது சிறப்பு அதனால் அவருக்கு மூக்கணாம் கயறு கிடையாது .
மூக்கணாம் கயறு அற்ற நந்தி
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் :
மூலவர் : ஸ்ரீ சுந்தரராஜர் பெருமாள்
தாயார் : சுந்தரவல்லி தாயார்
* சிவன் கோயிலுக்கு பின்புறம் இக்கோயில் உள்ளது
* மூலவர் தன் பெயருக்கு ஏற்றார் போல் சுந்தரமாக காட்சி அளிக்கிறார்
* ஆனந்த கூத்தாடும் கண்ணனுக்கு தனி சன்னதி உள்ளது
ஆனந்த கூத்தாடும் கண்னன்
* கருடக்கொடி சித்தர் இங்குள்ள குளத்திலேயே ஜீவ சமாதி அடைந்துவிட்டார் அவருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது .
* இங்குள்ள ஆண்டாள் அம்மையாரின் தூண்களில் நரசிம்மர் உருவங்கள் மிக அழகாக பொறிக்கப்பட்டுள்ளது .
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் :
* பெருமாள் கோயில் இருந்து 1 km தூரம் கூவம் ஆற்றின் கரையோரம் சென்றால் மிக சிறியதாக இங்குள்ள சிவ அடியார்களால் புணராமிக்கப்பட்டு மிக சிறப்பாக பராமரிக்கப்படுகிறது . பிரதோஷ நாட்களில் மிக சிறப்பாக நடத்துகிறார்கள் .
* சிறிய கோயில் பிரகாரத்து அருகில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது .
செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :
வண்டலூர் மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் பூந்தமல்லி இருந்து பட்டாபிராம் போகும் வழியில் திருமணம் என்று பெயர் பலகை இருக்கும் . பட்டாபிராம் இருந்தும் செல்லலாம் .
காலை 8 மணி இருந்து 9.00 மணி மாலை 5 முதல் 7 மணி வரை . விசேஷ நாட்களில் மாறுபடும் .
இங்குள்ள எல்லா கோவில்களுக்கும் செல்லும் போது முடிந்தவரை நம்மால் தீப எண்ணெய் வாங்கி செல்லவும் .
நிறைவே காணும் மனம் வேண்டும் சிவனே ! அதை நீ தரவேண்டும்
அருள்மிகு ஜகந்நாதர் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார்
சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இந்த திருமழிசை தலம் சிறப்பு வாழ்ந்தது . உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது " உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்துப் பக்கம் வலிது " என்ற திருச்சந்தவிருத்தானியானால் அறியப்படுகிறது .
தலபெருமை :
திருப்புல்லானினியில் சயனகோலமும் ,பூரியில் நின்ற கோலமும் இந்த திருத்தலத்தில் வீற்றிருந்த கோலத்தில் இருப்பதால் இத்தலத்தை" மத்திய ஜெகநாதம் " என்று அழைக்கப்படுகிறது .
அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார் . அவர்களுக்கு ஜெகந்நாதர் அமர்ந்த நிலையில் காட்சி அளித்தார் .
ஆழ்வார் அவதாரம் :
இவர் இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானின் சக்கரம் அம்சமாக திருவவாதித்தார் . அவதரித்த காலம் : துவாபரயுகம் .
தந்தை பெயர் : பார்கவ மகரிஷி
தாயார் : கனகாங்கி
அருளிக் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி ,திருச்சந்த விருத்தம்
இவர் இவுலகில் எழுந்தருளியிருந்த காலம் : 4700 ஆண்டுகள்
இந்த கோவில் மட்டும் இல்லாமல் இத்திருத்தலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒத்தாண்டேஸ்வரர் மற்றும் வீடறிந்த பெருமாள் கோவில்கள் உள்ளன இவற்றையும் கண்டு இறைவன் அருளை பெறலாம் .
இக்கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .