அருள்மிகு கோதண்டராமர் கோயில் - மேற்கு மாம்பலம் , சென்னை
மூலவர் : ஸ்ரீ கோதண்டராமர்
தாயார் : அரங்கநாயகி தாயார்
* 200 வருட பழமை வாய்ந்தது
* மூலவர் பட்டாபிராமன் அவருடைய இடப்பக்கம் சீதாபிராட்டியை அமரவைத்து வலது புறத்தில் இலக்குவன் குடை பிடிக்க சிறிய திருவடியாக ஹனுமான் ஸ்ரீராமரின் பாதங்களை தாங்கி பிடிக்க இப்படியொரு பட்டாபிஷேகத் திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார் .
*இந்த திருத்தலத்தை தக்ஷிண பத்ராசலம் என்று அழைக்கிறார்கள் . பத்ராசலத்தில் திரு பக்தராமதாசர் திருக்கோயிலை கட்டினார் இங்கு அவருடைய வம்சாவழி வந்த ஆதிநாராயண தாஸர் இத்திருக்கோயிலை கட்டினார் .
* பரபரப்பான மாம்பழம் ரயில் நிலையம் அருகில் மிக அமைதியாக இருக்கிறது இந்த திருக்கோயில் .
* கோவில் உள்ளே ரெங்கநாதருக்கு தனி சன்னதி உள்ளது . மஹாசம்ப்ரோக்ஷனை சமயத்தில் திருநீர்மலை ஸ்ரீ ரெங்கநாதர் இங்கு எழுந்தருளி மங்களாசனம் செய்தார்
* இங்கு உள்ள ஹனுமானுக்கு சஞ்சீவி பர்வத ஆஞ்சிநேயர் என்று பெயர் . அவர் பர்வத மலையை சுமந்தபடி இங்கு காட்சியளிக்கிறார் .
செல்லும் வழி :
மாம்பழம் ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கு அருகிலும் உள்ளது .
காணொளியில் காண கிழே உள்ள வீடியோவை காணவும்
No comments:
Post a Comment