11.7.18

Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பூசலார் நாயன்மார் - திருநின்றவூர் 



மூலவர் :  இருதயாலீஸ்வரர் 
தாயார் : மரகதவல்லி ,மரகதாம்பிகை 
விருச்சம் : வில்வம் 
ஊர்  : திருநின்றவூர் 
மாவட்டம் : திருவள்ளூர் 

* சுவாமியின் கருவறையிலேயே பூசலார் நாயனாரின் திருஉருவ சிலை அமைந்திருப்பது சிறப்பு 

* பூசலார் இதயத்தில் கட்டிய கோயிலை போல் நிஜத்தில் பல்லவ மன்னன் ராஜா சிம்மன்  கட்டிய கோயில் 

* சுவாமியின் விமானம் கஜபிருஷ்டம் என்ற அமைப்பில் உள்ளது .

* இருதய நோய் உள்ளவர்கள் வேண்டிக்கொள்ளும் கோயில் மற்றும்  இருதய மருத்துவர்கள் தன் நோயாளிகளுக்கு விரைவில் குணம் அடைய வேண்டிக்கொள்கிறார்கள் .

பூசலார் வரலாறு :


Thanks to Google

திருநின்றவூரில் பூசலார் என்ற ஒரு சிவனடியார் இருந்தார் அவர் தினமும் ஒரு சிவலிங்கத்தை பூஜித்து வந்தார் .அந்த சிவலிங்கம் வெயில் ,மழை இவைகளால் பாதிக்கப்படுவதை கண்டு மனம் வெந்து தன் இதயத்தில் சிவனுக்கு கோயில் கட்டினார் மனதில் கட்டுவதை கூட அவர் ஒரு கோயில் கட்ட எவ்வளவு காலங்கள் தேவைப்படுமோ அவ்வளவு காலங்கள் தன மனதிலேயே அழகிய மதில் சுவர்கள் ,கருவறை மற்றும் பெரிய பொருட்செலவில் கட்டினார் . இதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ராஜசிம்மன் மன்னன் ஒரு மிக பெரிய கோயிலை கட்டி வந்தான் .இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷகத்திற்கு நாள் குறித்தனர் .

சிவபெருமான் மன்னனின் கனவில் வந்து என்னுடைய பக்தன் ஒருவன் திருநின்றவூரில் இதே நாளில் கும்பாபிஷகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் ஆகவே நான் அங்கு செல்லவிருக்கிறேன் நீ வேற ஒரு நாளில் நடத்திமாறு கேட்டுக்கொண்டார் .

மன்னன் கண்விழித்து பார்த்து இது கனவு என்று உணர்ந்தான் தன் கனவில் சொன்ன இடத்தை தேடி வந்து அங்குள்ளவர்களிடம் பூசலார் கோயிலை பற்றி விசாரித்தார் ஆனால் அதை பற்றி யாருக்கும் தெரியவில்லை ,பின்பு பூசலாரை கண்டு அவர் தன் கனவில் கண்டதை கூறினார் அதை கேட்டு ஆச்சரியப்பட்டு பூசலார் தன் கோயிலை தன் இதயத்தில் கட்டியதாகவும் அதை அறிந்து சிவனே உங்களிடம் கூறியதை கண்டு தன் பேரானந்தம் கொண்டதாகவும் கூறினார் .

ஆச்சரிய பட்ட மன்னன் எவ்வளவு செலவு செய்து கோவில் கட்டுவதை விட தூய்மையான மனதில் கட்டும் கோவிலே சிறந்தது என்று எண்ணி அந்தநாளில் அவரின் இதயத்தில் கட்டிய கோயிலின் கும்பாபிஷகத்தை காண வினவினார் .பூசலாரும் அவரின் எண்ணத்தை நிறைவேற்ற தன் மனதில் கட்டிய கோவிலை காட்டினார் இருவரும் அதை கண்டுகளித்தனர் . சிவபெருமான் பூசலாரை தன் நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார் . மன்னனும் அதே இடத்தில்  கோவிலை கட்டிக்கொடுத்தார் .

செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :

சென்னை -திருவள்ளூர் செல்லும் ரயில் மார்க்கத்தில் திருநின்றவூர் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவும் . மற்றும் பூந்தமல்லி ,கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன .

இவூரில் உள்ள மற்ற கோயில்கள் :

1. பக்தவச்சசல பெருமாள் 
2. எரிக்காத ராமர் சன்னதி 

அருகில் உள்ள பிற கோயில்கள் 

1. திருமணம் (சித்துக்காடு )
2. திருமழிசை 






No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...