ஏரி காத்த ராமர் சன்னதி - திருநின்றவூர்
* திருநின்றவூரில் பெருமாள் கோவிலின் பின்புறம் ஏரியின் மேல் அமைந்துள்ளது . கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டிய தலம் .
*முன்னோரு காலத்தில் திருநின்றவூர் ஏரி நீரால் நிரம்பி அடிக்கடி ஏரி உடைந்து இந்த ஊரை மூழ்க செய்யும் ,ஆதலால் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி ராமரை வேண்டினர் ராமர் தனக்கு ஏரி கரையில் கோயில் அமைக்குமாறு கூறினார் ,அவர்களும் அவ்வாறே செய்ய ஏரி காப்பாற்றப்பட்டது .
moolavar-tks to google |
* ஏரியின் கரையில் மிக ரம்மியமாக காட்சி அளிக்கிறது இந்த கோயில் .
* உள்ள நுழைந்தவுடன் இடது பக்கம் நர்த்தனம் ஆடும் கிருஷ்ணன் சிலை உள்ளது . வலதுபுரத்தில் ஆஞ்சநேயர் தன் இரு தோள்களின் மேல் ராமரையும் ,லக்ஷ்மணரையும் சுமந்து காலுக்கு அடியில் லங்கிணியை மிதித்தும் காட்சியளிக்கிறார் .அவரது பின்புறத்தில் இருவருடைய பாத தரிசனம் செய்யலாம் .
ஆஞ்சனேயர் ராமர் மற்றும் லக்ஷ்மணரை தோளில் சுமந்தபடி -Tks Google |
* மூலசானத்தில் ராமர் ,லக்ஷ்மணர் மற்றும் சீதை மிக மிக உயரமாக காட்சி அளிக்கின்றனர் .
* கோவிலின் பின்புறம் ஏரி மிக பெரியதாகவும் மிக ரம்மியமாகவும் காட்சி தருகின்றது .
ஊரில் உள்ள மற்ற கோயில்கள் :
ஏரி |
No comments:
Post a Comment