Showing posts with label chennai around temples. Show all posts
Showing posts with label chennai around temples. Show all posts

26.7.18

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் 

முகப்பு தோற்றம் 

இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசித்து உங்களுக்காக இந்த ஆலயத்தின் சிறப்புகளை அளித்துள்ளேன் நீங்கள் படித்து இறைவனின் அருளை பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறேன் .


மூலவர் : மாசிலாமணீஸ்வரர் 

தாயார் : கொடியிடைநாயகி 

ஆகமம் : சிவாகமம் 

தல விருச்சகம் : முல்லை 

ஊர் : வட திருமுல்லைவாயில் 

பழமை : 2000 வருடங்களுக்கு முற்பட்டது 


* தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இந்த ஆலயம் தொண்டை மண்டலத்தில் 22வது தலம் ஆகும் .இது 255வது தலமாகும் 
தொண்டைமான் சக்கரவர்த்தி 

சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார் . தொண்டைமான் மன்னரால் வெட்டப்பட்டதால் அதை மறைக்க அவருக்கு சந்தனக்காப்பு இடப்பட்டிருக்கும் .வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று அதை எடுத்து வேறு மாற்றுவார்கள் .

* பாதரச லிங்கம் சன்னதி உள்ளது அவருக்கு எல்லாவித அபிஷேகமும் நடைபெறுகிறது .

* அம்பாள் வலது புறத்தில் வீற்றியிருப்பர் .இவர் இங்கு கிரியா சக்தியாக காட்சிதருகிறார் 

* தொண்டைமான் மன்னருக்கு போருக்கு உதவி செய்வதற்காக நந்தி உடன் சென்றதால் அவர் இறைவனின் எதிர் திசையை(கிழக்கு நோக்கி ) நோக்கி வீற்றியிருப்பர் 

* இங்கே சிவனே பிரதானம் என்பதால் நவகிரகத்திற்கு தனி சன்னதி இல்லை .
கிழக்கு நோக்கிய நந்தி 

* மன்னருக்கு அவசரமாக காட்சி அளிக்க வேண்டியிருந்ததால் அம்பாள் வலதுபுறத்தில் இருப்பார் மற்றும் இருவரும் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார் .

* தேவர்களும் ,அருளாளர்களும் வணங்கிய ஆலயம் 

*பைரவர் ,சூரியன் ,நக்ஷத்திரங்கள் ,வீரபத்திரர் ,நக்கிரகங்கள் இவர்களுக்கு தனி வழிபாடு கிடையாது ஏனெனில் அனைவரும் தம்வினை நீங்க இவ் பெருமானை வணங்கியதால் தனி வழிபாடு கிடையாது ,இறைவனே இங்கு எல்லாம் ஆவார் .

* பிரதோஷம் இங்கு மிக சிறப்பாக கொண்டாட படுகிறது 

* வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாட்களில் திருவெற்றியூர் வடிவுடையம்மன் ,மேலூர் திருவுடையம்மன் மற்றும் இவ் ஆலயத்தின் கொடியுடையம்மன் ஆகியவர்களை மூன்று காலங்களில் வழிப்பட்டால் நல்ல பலன் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது . இவ் மூன்று ஆலயங்களையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது .

* இங்குள்ள முருகரை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார் 

*வசிட்டருக்கு தன் தவத்தால் காமதேனு பசு கிடைத்ததாக புராணங்கள் கூறுகின்றன .

* தொண்டைமான் மன்னன் இக் ஆலயத்தை கட்ட குறும்பர்களின் கோட்டையிலுருந்து இரண்டு வெள்ளருக்கு தூண்களை அமைத்தார் அவை இன்றும் மாசிலாமணி ஆலயத்தின் முன்னர் காணப்படுகிறது .
கொடிமரம் 


கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் செல்லும் வழி 

காலை 7.00 முதல் 12.30 வரை ,மாலை 4.30 மணி முதல் 8.30 வரை 

சென்னை முதல் அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் திருமுல்லைவாயில் நிறுத்தத்தில் இறங்கி 1km செல்லவேண்டும் .மற்றும் அம்பத்தூரிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

அருகில் உள்ள ஆலயங்கள் 

திருநின்றவூர்
Bhakthavatchala perumal
Hirudayaleeswar

திருவேற்காடு 

திருவலிதாயம்
Thiruvalleswarar

      

  திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்சீருடைக் கழல்கள்என் றெண்ணிஒருவரை மதியா துறாமைகள் செய்தும்ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்முருகமர் சோலை சூழ்திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னைப்பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே

- சுந்தரர் 

தலை விருச்சகம் 


தல தீர்த்தம் 

முன் மண்டப சிற்பம் 

நர்த்தன கிருஷ்ணர் 

சிவன் 

விநாயகர் 

உள் பிரகார வழி 

பல்லி சிற்பம் 
பெருமாள் கோயில் 

இறைவன்






2.2.18

Arulmigu Shri Thirukkachi nambigal and Varatharaja Pereumal Temple- Poonamallee

அருள்மிகு ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் - பூந்தமல்லி 

ராஜ கோபுரம் 

இந்த கோவில் ஐந்து கோபுரங்களை கொண்ட அழகிய கோவிலாகும். மற்றும் திருக்கச்சி நம்பிகள் பிறந்த தலமாகும். இந்த கோவில் 14 மற்றும் 17 ம் நூற்றாண்டு தோன்றியது ஆகும் அதாவது விஜய நகர் காலம் . இங்குள்ள ஊஞ்சல் மண்டபம் அச்சுதப்பா நாயக்கர் உருவாக்கினார் .




கோவிலின் உள்ளே சென்றவுடன் இடது புறத்தில் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்கலாம் . கோவிலின் உட்ப்ரகாரத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் , காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் ,திருக்கச்சி நம்பிகள் ஆகியோரை தரிசிக்கலாம் . திருக்கச்சி நம்பிகள் மூன்று பேரையும் ஒருசேர தரிசிக்க எண்ணி அவர் இதை நிர்மாணித்தார் . வலது புறத்தில் புஷ்பக வள்ளி தாயார் வீற்றிருக்கார் .

ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 21 ம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்குள் சூர்ய கதிர்கள் ஸ்ரீ வரதராஜர் முகத்தில் படும் .

திருக்கச்சி நம்பிகள் பிறந்த நட்சத்திரமான மாசி மிருகசீர்ஷம் அன்று அதாவது பிப்ரவரி மாதத்தில் மிருகசீர்ஷம் ஒட்டி 10 நாட்கள் திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும் .



கோவில் திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம் :

காலை 6.30 முதல் 11.30 வரை 
மாலை 4.30 முதல் இரவு 8.30 வரை 

இத்திருத்தலம் பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தெருவில் உள்ளது .



அருகில் உள்ள திருத்தலங்கள் :

இக்கோவிலின் அருகில் 

1. வைத்தியநாதர் திருக்கோவில் - பூந்தமல்லி 

2. மாங்காடு காமாச்சி  அம்மன் 

3.  வில்லேஸ்வரர் கோவில் -மாங்காடு 

4. வைகுண்ட பெருமாள் கோவில் - மாங்காடு 


19.11.17

Tiruvetteeswarar Temple- Chennai

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் -திருவட்டீஸ்வரன் பேட்டை -சென்னை 



மூலவர் - திருவேட்டீஸ்வரர் 

அம்பாள் - செண்பகவல்லி தாயார் 

தல விருச்சம் - செண்பக மரம் 

பழமை          - 1000 வருடங்கள் 

தீர்த்தம் -  செண்பக தீர்த்தம் 

தல சிறப்பு :



இலக்குமி அம்மையார் திருமாலை அடைய இங்கு இருந்து தவம் செய்தாள் .
திருமால் பார்த்தசாரதியாக வந்து இங்கு இருந்த இலக்குமி தாயை கைபிடித்ததால் பார்த்தசாரதிக்கு இது வேட்டகம் -மாமியார் வீடு ஆனதால் திருவேட்டக ஈஸ்வரன் பேட்டை என அழைக்கப்படுகிறது .


ராகு கேது பரிகார தலமாகவும் கருதப்படுகிறது 
இக்கோவிலின் தூணில் மகாலக்ஷ்மி கலசத்துடன் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் சிற்பம் உள்ளது . விநாயகருக்கு தனி சன்னதி எதிரே அமைந்து உள்ளது. இங்கு உள்ள சரஸ்வதிக்கு வீணை கிடையாது . சிவன் சுயம்புவாக காட்சி தருகிறார் .

அமைவிடம் :

திருவல்லிகேணி ஜாம் பஜார் உள் பக்கத்திலிருந்தும் ஸ்டார் தியேட்டர் எதிர் சந்திலிருந்தும்  இக்கோவிலுக்கு செல்லலாம் . இங்கிருந்து பார்த்த சாரதி கோவில் மிக மிக அருகிலேயே உள்ளது .

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00 மணி முதல் 11.00 வரையும் 
மாலை 5.00 முதல் 9.00 மணி வரை 

முகவரி :

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவில் 
திருவேட்டீஸ்வரன் பேட்டை , சென்னை -5
044-28418383


4.11.17

yoga Narasimhar Temple- Velachery

யோக நரசிம்மர் ஆலயம் - வேளச்சேரி 

vazipokkan



மூலவர் : ஸ்ரீ  யோக நரசிம்மர் 
தாயார் :ஸ்ரீ அமிர்தபாலவல்லி 

இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக நம்பப்படுகின்றது . இத்தலம் சோழர் காலத்துக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது . இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது . அண்மையில் தான் இந்த ஆலயம் மிக அழகாக பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷகம் நடத்தப்பட்டது .

vazipokkan



கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் மேற்கிலும் ஒரு நுழைவாயில் உள்ளது .அமிர்தபாலவல்லி தாயார் வலது புறத்தில் தனி சன்னதி உள்ளது அவர் கிழக்கை நோக்கி உள்ளார் . நுழைவாயிலின் இடது புறத்தில் சக்கரத்து ஆழ்வார் ,கோதண்டராமர் மற்றும் ஆஞ்சனேயர் ஆகியவர்கள் தனித்தனி சன்னதியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர் .

மூலவர் யோக நரசிம்மர் மிக அழகாக கம்பிரமான தோற்றத்துடன் நான்கு கரத்துடன் யோக நிலையில் அருள் செய்கிறார் . அவரை நாம் பார்க்கும்போதே நம் மனதில் ஒரு விதமான பரவச நிலையை அடைவதை உணரலாம் .

இந்த கோவில் அமைப்பு மற்றும் சுற்று புறத்தில் உள்ள கலை நயமிக்க பாலகர்கள் மற்றும் நரசிம்மருடைய சிலைகளை காண்பதற்கு நாம் கோடி கண்கள் வேண்டும் .

கோவில் செல்லும் வழி
விஜய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து குருநானக்  கல்லூரி மற்றும் தண்டீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ளது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 7.00-10.30 மற்றும் மாலை 5.00 - 10.30

If you want to read in English please click this link

vazipokkan

vazipokkan

17.9.17

Ashtalingams Near Chennai

சென்னை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்கள் 

அஷ்டலிங்கத்தின் விளக்கம் :

நாம் பெரும்பாலும் அஷ்டலிங்கங்களை திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரை சுற்றி கிரி வளம் வரும் போது கண்டிருப்போம் .ஆனால் நம் சென்னை அருகில் திருவேற்காடு சுற்றி அஷ்டலிங்கங்களை கண்டிருக்கமாட்டோம் .இங்கு உள்ள அனைத்து லிங்கங்களும் 2000 வருடங்களுக்கு முற்பட்டது ,இவை அனைத்தையும் அகத்தியர் மாமுனிவர் நிறுவினார் . இவை அனைத்தையும் அபிநய சோழன் என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது .

அஷ்டலிங்கங்களும் அதன் பெருமைகளும்  :

அஷ்டலிங்கங்களை ஒரே நாளில் கண்டு ரசித்தால் கர்மவினை அகலும் என்று சொல்வார்கள் .ஒவ்வரு ராசிகளுக்கும் ஒரு லிங்கம் உண்டு அந்த ராசிக்காரர்கள் அவருக்குரிய லிங்கங்களை வணங்கினால் அதற்குரிய நன்மைகளை பெறலாம் .

1. இந்திரலிங்கம் - ரிஷபம் ,துலாம் 
2. அக்னி லிங்கம் - சிம்மம் 
3. எமலிங்கம்       - விருச்சகம் 
4. நிருதிலிங்கம்  - மேஷம் 
5. வருணலிங்கம் -மகரம் ,கும்பம் 
6. வாயுலிங்கம்    -கடகம் 
7. குபேரலிங்கம்  -தனுசு ,மீனம் 
8. ஈசான்யலிங்கம் - மிதுனம் ,கன்னி 

சென்னையை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்களின் இடங்கள் :

1. இந்திரலிங்கம் -வள்ளிகொல்லைமேடு (கிழக்கு )

இது  அஷ்டலிங்கங்களின் முதல் லிங்கம் ஆகும் .இங்கே ஞானாம்பிகை சமேத இந்திரலிங்கம் உள்ளார் .திருவேற்காடு பேருந்து நிலையம் போகும் வழியில் பெட்ரோல் பங்க் எதிர் புறம் பிரதான சாலையிலேயே அமைந்து உள்ளது .இவரை வணங்கினால் வேலையில் முன்னற்றம் ,அரசு தொடர்பான காரியங்களை தங்கு தடையின்றி பெறலாம் .

vazipokkan
இந்திரலிங்கம் 


2. அக்னிலிங்கம் - நூம்பல் (தென் கிழக்கு ) 


அகத்தியர் இமயமலையிலிருந்து நூம்பல் என்ற பூவை எடுத்து வந்து இங்கே இவரை நிறுவி வணங்கியதால் இந்த ஊருக்கு நூம்பல் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது . வேலப்பன்சாவடியிலேருந்து கஜலக்ஷ்மி மண்டபத்தின் அருகில் உள்ள சாலையில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது . இவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் .


3. எமலிங்கம் - சென்னீர்குப்பம் (தெற்கு )

மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் இங்கே  அமைந்துள்ளார் . குடியிருப்புகள் அதிகமாக அமைந்துள்ள இடத்தில் வீற்றியுள்ளார் . பூந்தமல்லி ஆவடி மெயின் ரோட்டில் பைபாஸ் சந்திக்கும் இடத்துக்கு முன்னதாக இந்த கோவில அமைந்துள்ளது .இவரை வணங்கினால் எம பயம் நீங்கும் மற்றும் ஏழரை சனி ,கண்ட சனி இவைகளிருந்து விடுபடலாம் .

எமலிங்கம் - கைலாசநாதர் 

4. நிருதிலிங்கம் - பாரிவாக்கம் (தென் மேற்கு )

பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் அமைந்த இடம் . பூந்தமல்லி பைபாஸ் நடுவில் ஒரு சிக்னல் வரும் அதற்கு இடப்புறம் பட்டாபிராம் போகும் வழியில் பரிவாக்கம் வரும் இடது புறத்தில் கோவிலின் வளைவு வரும் . இவரை வணங்கினால் கடன் தொல்லைகள் ,வார கடன் இவைகளில் இருந்து விடுபடலாம் .இந்த கோவில் குருக்கள் வரும் நேரத்தில் மட்டுமே திறந்து இருக்கும் .


நிருத்தலிங்கம் -பாலீஸ்வரர் 

5. வருணலிங்கம் - மேட்டுப்பாளையம் (மேற்கு )

பாலிவாக்கம் கோவிலில் இருந்து திரும்பி வரும் வழியில் அம்பேத்கார் சிலைக்கு அடுத்து வரும் ரோட்டில் திரும்பினாள் ஏரி கரையை கடந்தால் இயற்கையான இடத்தில மிக சிறியதான டென்ட் கொட்டகை உள் மிக ரம்யமாக ஜலகெண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வர் வீற்றியிருக்கிறரர் . அவரை வணங்கினால் நோய்களிலிருந்து விடுபடலாம் மற்றும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . இந்த கோவிலை புதுப்பிக்கும் மற்றும் கோபுரம் அமைக்கும் பணி வரும் கார்த்திகை மாதத்தில் தொடங்க இருக்கிறார்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் .
ஜலகண்டேஸ்வரர் 
ஜலகண்டேஸ்வரரி 
கோவில் தோற்றம்

6. வாயுலிங்கம்  - பருத்திப்பட்டு (வட மேற்கு )


மேட்டுப்பாளையத்தில் இருந்து 3கி .மீ சென்றால் பருத்திப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் ஹனுமான் கோவில் அருகில் உள்ளே சென்றால் இந்த அழகிய கோவில் வரும் . இந்த விருத்தாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரரை வணங்கினால் வாயு தொல்லை மற்றும் இழந்த சொத்துக்களையும் மீட்டு எடுக்கலாம்.


7. குபேரலிங்கம் - சுந்தரசோழபுரம் (வடக்கு )


பருத்திப்பட்டு இருந்து இடது புறத்தில் சென்றால் சுந்தரசோழபுரம் வரும் . வேம்புநாயகி சமேத குபேரலிங்கேஸ்வர் இவரை வணங்கினால் வாழ்வில் எல்லா வித பொருளாதார மற்றும் வெற்றிகளை பெறலாம் .



8. ஈசானலிங்கம் - சின்னகோலடி (வட கிழக்கு )


இந்தக்கோயில் கண்டுபிடிப்பது சற்று சிரமம் . இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஞானேஸ்வரி சமேத ஈசான்யலிங்கம் இவரை வணங்கினால் வாழ்வில் வெற்றிகளையும் மற்றும் தடைகள் மற்றும் தோல்விகளில் இருந்து விடுபடலாம் .

நாம் இந்த கோவில்களுக்கு செல்லும் போது சில கோவில்கள் குருக்கள் இல்லாமல் அல்லது ஒரு வேலை மட்டும் பூஜை செய்யப்படுகிறது .
பௌர்ணமி , சிவராத்திரி ,திங்கள் கிழமை இந்த நாட்களில் நல்ல கூட்டமும் பூஜைகளும் நடைபெறுகின்றன . சிலர் இந்த நாட்களில் குழுவாக எல்லா கோவில்களுக்கும் ஒரே நாளில் செல்கின்றனர் . நீங்களும் இந்த அஷ்டலிங்கங்களை தரிசனம் செய்தால் ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் ஈசனின் அருளையும் பெறுவது நிச்சயம் .


வழிகாட்டி 


12.9.17

Vedapureeswarar Temple,Tiruverkadu

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு

மூலவர் :  வேதபுரீஸ்வரர் 
அம்பாள் : பாலாம்பிகை 
தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம் 
இடம்     : திருவேற்காடு 
காலம் : 2000 வருடங்கள் மேற்பட்ட பழமையானது 
சிறப்பு : தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23 ஆவது                     தளம், தேவார சிவ தலம்  274 ல் இது  256வது தலம் .

திருவேற்காடு என்றவுடன் எல்லோருக்கும் கருமாரி அம்மன் கோவில் மட்டுமே நினைவுக்கு வரும் ஆனால் திருவேற்காடு பேருந்து நிலையத்தில் 1கி.மீ  தொலைவில் மிக கம்பிரமாக வேதபுரீஸ்வர் கோவில் காட்சி அளிக்கிறார் .

தல வரலாறு   

சிவபெருமான் பார்வதி திருமணம் திருமணம் செய்த நேரத்தில் தேவர்கள் முதலியோர் வட திசை நோக்கி சென்றதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்த்து அதை சரிசெய்ய சிவபெருமான் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார் . அய்யனின் திருமணத்தை காணமுடியவில்லை என்ற அகத்தியரின்  வருத்தத்தை போக்க சிவபெருமான் தன் பார்வதியுடன் தன் திரு மணகோலத்தில் காட்சி அளித்தார் .

பிருகு முனிவர் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாக பரசுராமர் என்ற நாமத்தில் அவதரித்தார் .அவர் இத்தலத்தை வழிபட வந்தபோது உடன் ரேணுகையும் வந்தார் . அந்த ரேணுகையையே இப்போது 'கருமாரி அம்மன் 'என்று அழைக்கப்படுகிறது .

சிறப்பு :

இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார் . லிங்கத்திற்கு பின்னாடி சிவபெருமான் பார்வதி தேவியுடன் திருமண கோலத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறார் .

திருவேற்காடு பாலாம்பிகையும் ,திருவலிதாயம் ஜெகதாம்பிகையும் ,திருவெற்றியூர் வடிவாம்பிகையும் ஒரே நாளில் வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்வர் என்று கூறப்படுகிறது .

இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான 'மூர்க்கநாயனார் ' அவதரித்த தலமாகும் .



செல்லும் வழி : கோயம்பேட்டுலிருந்து திருவேற்காட்டுக்கு நிறைய பேருந்துகள் உள்ளன . மற்றும் வேலப்பன்சாவடி சிக்னல் இருந்து வலது புறம் திரும்பினால் திருவேற்காடு வரும்.

இந்த தளத்திற்கு அகத்தியர் வரும் பொழுது இந்த கோவிலை சுற்றி எட்டுத்திசைகளிலும் அஷ்ட லிங்கங்களை நிறுவி வழிபட்டதாக கருதப்படுகிறது அந்த அஷ்ட லிங்கங்களை பற்றி அடுத்த வரும் வாரங்களில்  பார்ப்போம் .
details of Ashtalingams please click below link
Ashtalingam details


       
               ------  திருச்சிற்றம்பலம் ------


27.8.17

Thandeeshvarar Temple- Velacherry

அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் - வேளச்சேரி 




மூலவர் :               தண்டீஸ்வரர்
தாயார் :                 கருணாம்பிகை 
தல விருட்சம்  : வில்வம் 
தீர்த்தம்                : எம தீர்த்தம் 

சென்னையில் மிகவும் பரப்பரப்பான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் வசிக்கும் இடமான வேளச்சேரி பகுதியில் மிக அமைதியான இடத்தில் அமைந்து உள்ளது இந்த கோயில் . 

வேளச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சாலையில் 1 கி.மீ  சென்றால் எம தீர்த்த குளத்தை அடையலாம் அதன் அருகில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்து உள்ளது . மூலவர் அமைந்து உள்ள பகுதி மிகவும் பழமையாக சிறியதாகவும் உள்ளது .

கருவறையின் கிழக்கில் பிள்ளையாரும் , மேற்கு பகுதியில் அண்ணாமலையரும் வீற்றியிருக்கின்றனர் .

சோமசுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்த நான்கு வேதங்களையும் பறித்து சென்றான் அதனை திருமால் மீட்டு வந்தார் , வேதங்கள் அசுரனிடம் இருந்த தோஷத்தை போக்க சிவனை நோக்கி தவம் செய்தனர் சிவன் அவர்களுக்கு காட்சி தந்து அவர்களின் தோஷத்தை போக்கினார் , வேதங்கள் வழிபட்டதால் 'வேதச்சேரி ' என்று அழைக்கப்பட்டது அதுவே இப்பொது வேளச்சேரி என்று ஆனது .

மார்க்கண்டையரின் ஆயுளை எடுக்க எமன் கயிறை வீசும் போது அது சிவனின் மீது விழுந்தது ,சிவன் கோபம் வந்து யமனின் பதவியை பறித்தார் ,எமன் தன் பாவத்தை மற்றும் தன் பதவியை பெற பூலோகத்தில் உள்ள இந்த குளத்தில் நீராடி தன் பதவியை திரும்ப பெற்றார் . ஆதலால் இவ் பெருமானை வண்ணங்கினால் தீர்க்க ஆயுளையும் இழந்த பதவியையும் பெறலாம் .

எமன் சிவனை பூஜிப்பதற்காக தண்டத்தை ஊன்றி பூஜை செய்தார் பூஜை முடிந்ததும் திரும்ப தண்டத்தை எடுக்க முடியவில்லை அதுவே தண்டு ஈஸ்வரனாக அமைந்ததால் 'தண்டீஸ்வரர் ' என்ற பெயர் பெற்றதாக கூறுவதுண்டு .


கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.30-11.00
                                                                   மாலை 4.00-8.30

சிறப்பு :
இங்கு சஷ்டியர்திபூர்த்தி செய்யவும் , இழந்த பதவிகளை பெறவும் தகுந்த கோவில் .


20.8.17

Jegannathar Perumal and Thirumalisai Alvar Temple, Thirumazhisai

அருள்மிகு ஜகந்நாதர் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார்




சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இந்த திருமழிசை தலம் சிறப்பு வாழ்ந்தது . உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது " உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்துப் பக்கம் வலிது " என்ற திருச்சந்தவிருத்தானியானால் அறியப்படுகிறது .




தலபெருமை :

திருப்புல்லானினியில் சயனகோலமும் ,பூரியில் நின்ற கோலமும் இந்த திருத்தலத்தில் வீற்றிருந்த கோலத்தில் இருப்பதால் இத்தலத்தை" மத்திய ஜெகநாதம் " என்று அழைக்கப்படுகிறது .

அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார் . அவர்களுக்கு ஜெகந்நாதர் அமர்ந்த நிலையில் காட்சி அளித்தார் .

ஆழ்வார் அவதாரம் :

இவர் இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானின் சக்கரம் அம்சமாக திருவவாதித்தார் . அவதரித்த காலம் : துவாபரயுகம் .
தந்தை பெயர் : பார்கவ மகரிஷி
தாயார் : கனகாங்கி
அருளிக் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி ,திருச்சந்த விருத்தம்
இவர் இவுலகில் எழுந்தருளியிருந்த காலம் : 4700 ஆண்டுகள்
இந்த கோவில் மட்டும் இல்லாமல் இத்திருத்தலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒத்தாண்டேஸ்வரர் மற்றும் வீடறிந்த பெருமாள் கோவில்கள் உள்ளன இவற்றையும் கண்டு இறைவன் அருளை பெறலாம் .
இக்கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .



Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...