அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு
மூலவர் : வேதபுரீஸ்வரர்
அம்பாள் : பாலாம்பிகை
தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம்
இடம் : திருவேற்காடு
காலம் : 2000 வருடங்கள் மேற்பட்ட பழமையானது
சிறப்பு : தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23 ஆவது தளம், தேவார சிவ தலம் 274 ல் இது 256வது தலம் .
திருவேற்காடு என்றவுடன் எல்லோருக்கும் கருமாரி அம்மன் கோவில் மட்டுமே நினைவுக்கு வரும் ஆனால் திருவேற்காடு பேருந்து நிலையத்தில் 1கி.மீ தொலைவில் மிக கம்பிரமாக வேதபுரீஸ்வர் கோவில் காட்சி அளிக்கிறார் .
தல வரலாறு
சிவபெருமான் பார்வதி திருமணம் திருமணம் செய்த நேரத்தில் தேவர்கள் முதலியோர் வட திசை நோக்கி சென்றதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்த்து அதை சரிசெய்ய சிவபெருமான் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார் . அய்யனின் திருமணத்தை காணமுடியவில்லை என்ற அகத்தியரின் வருத்தத்தை போக்க சிவபெருமான் தன் பார்வதியுடன் தன் திரு மணகோலத்தில் காட்சி அளித்தார் .
பிருகு முனிவர் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாக பரசுராமர் என்ற நாமத்தில் அவதரித்தார் .அவர் இத்தலத்தை வழிபட வந்தபோது உடன் ரேணுகையும் வந்தார் . அந்த ரேணுகையையே இப்போது 'கருமாரி அம்மன் 'என்று அழைக்கப்படுகிறது .
சிறப்பு :
இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார் . லிங்கத்திற்கு பின்னாடி சிவபெருமான் பார்வதி தேவியுடன் திருமண கோலத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறார் .
திருவேற்காடு பாலாம்பிகையும் ,திருவலிதாயம் ஜெகதாம்பிகையும் ,திருவெற்றியூர் வடிவாம்பிகையும் ஒரே நாளில் வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்வர் என்று கூறப்படுகிறது .
இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான 'மூர்க்கநாயனார் ' அவதரித்த தலமாகும் .
செல்லும் வழி : கோயம்பேட்டுலிருந்து திருவேற்காட்டுக்கு நிறைய பேருந்துகள் உள்ளன . மற்றும் வேலப்பன்சாவடி சிக்னல் இருந்து வலது புறம் திரும்பினால் திருவேற்காடு வரும்.
இந்த தளத்திற்கு அகத்தியர் வரும் பொழுது இந்த கோவிலை சுற்றி எட்டுத்திசைகளிலும் அஷ்ட லிங்கங்களை நிறுவி வழிபட்டதாக கருதப்படுகிறது அந்த அஷ்ட லிங்கங்களை பற்றி அடுத்த வரும் வாரங்களில் பார்ப்போம் .
details of Ashtalingams please click below link
Ashtalingam details
details of Ashtalingams please click below link
Ashtalingam details
------ திருச்சிற்றம்பலம் ------
No comments:
Post a Comment