மகாளய பட்சம்
இந்த வருடம் மகாளய பட்சம் செப்டம்பர் 6 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி(06.09.2017 to 20.09.2017) வரை . ஆனால் 6 ஆம் தேதி யஜுர் உபகர்மா என்பதால் அன்று விரதம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை .
மஹாளய பட்சம் விளக்கம்
மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பட்சம் . இது வருடத்தில் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். ஆனால் இந்த வருடத்தில் அமாவாசை(19.09.17) அடுத்த நாள் பிரதமை(20.09.17) வருகிறது . இந்த அமாவாசை மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது .தை மற்றும் ஆடி அமாவாசையை விட உயர்ந்தது .
அமாவாசை மற்றும் தமிழ் மாதங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் மற்றும் திதிகளில் சிரார்த்தம் செய்வோம் . ஆனால் மஹாளய பட்சத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும் .
மஹாளய பட்ச திதிகளும் - தர்பண பலன்களும்
- பிரதமை - பணம் சேரும்
- துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
- திரிதியை - நினைத்தது நிறைவேறும்
- சதுர்த்தி - பகைவர்களிடம் இருந்து தப்பித்தல்
- பஞ்சமி - வீடு ,நிலம் முதலான சொத்து வாங்குதல்
- சஷ்டி - புகழ் கிடைத்தல்
- சப்தமி - சிறந்த பதவிகள் அடைதல்
- அஷ்டமி - சமயோசித புத்தி , அறிவாற்றல் கிடைத்தல்
- நவமி -சிறந்த மனைவி மற்றும் அறிவாற்றல் உள்ள பெண் குழந்தை பிறத்தல்
- தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்
- ஏகாதசி - படிப்பு , விளையாட்டு , கலையில் வளர்ச்சி
- துவாதசி - தங்க நகை சேர்தல்
- திரியோதசி - பசுக்கள் , விவசாய அபிவிருத்தி
- சதுர்த்தி - பாவம் நீங்குதல் , தலைமுறை நன்மை
- மஹாளய அமாவாசை - எல்லா பலன்களும் நம்மை சேர முன்னோர்கள் ஆசி வழங்குதல் .
ஆகையால் மஹாளய பட்சத்தில் விரதம் இருந்து நம் முன்னோர்களின் ஆசிகளையும் பலன்களையும் பெறுவோம் .
கீழே ஹேவிளம்பி வருஷ மஹாளய பட்ச சங்கல்பம் மற்றும் தர்பண முறைகள் உள்ள லிங் கொடுக்கப்பட்டுள்ளது அதை உபாயகப்படுத்தி கொள்ளவும் .
No comments:
Post a Comment