Showing posts with label Alvargal. Show all posts
Showing posts with label Alvargal. Show all posts

23.5.18

Arulmigu sthala Sayana Perumal Temple, Mamalapuram

அருள்மிகு தல சயனப் பெருமாள் திருக்கோயில் 

திருக்கடல் மல்லை ( மாமல்லபுரம் )




மூலவர் - தலசயன பெருமாள் 

தாயார் - நிலமங்கை  தாயார் 

உற்சவர் - உலகுய்ய நின்ற பெருமாள் 

கோலம் -  சயனம் 

தீர்த்தம் - புண்டரீக புட்கரணி , கருட நதி 

மங்களாசனம் - பூதத்தாழ்வார் , திருமங்கை ஆழ்வார் 

* 108 திவ்யதேசங்களில் 63 வது திவ்யதேசம் ஆகும் 

* 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது 

தல வரலாறு 



புண்டரீக முனிவர் பாற்கடல் பரந்தாமனின் மீது அளவற்ற பக்தி பெருக்கால் குளத்தில் உள்ள தாமரை மலர்களை கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்க நினைத்தார் .பறித்த பூக்களை கூடையில் இட்டு கிழக்கு நோக்கி கொண்டு செல்லும் போது ,குறுக்கே கடல் இருந்தது ,பக்தி பெருக்கால் தன் இரண்டுகைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைத்தார் . அண்ணம் அகாரம் இன்றி இதையே செய்துகொண்டிருந்தார் . இதை கண்டு ஆனந்தம் ஆனந்தம் கொண்ட இறைவன் முதியவர் வேடம் இட்டு காரணம் கேட்டார் . அதற்கு புண்டரீக முனிவர் பாற்கடல் செல்ல பாதை ஏற்படுத்துவதாக கூறினார் . உடனே முதியவராக வந்த இறைவன் தனக்கு உணவு தயார் செய்து கொடுத்தால் தானும் உம்மோடு சேர்ந்து இறைப்பதாக கூறினார் . உடனே முனிவர் மகிழ்ந்து விரைவாக இரண்டு பேரும் இறைக்கலாம் என்று எண்ணி உணவு தயார் செய்ய சென்றார் ,உணவு தயார் செய்து திரும்ப வந்து பார்க்கையில் முதியவர் முகுந்தனாக சயனித்திருந்தார் . அதிர்ந்து போன முனிவர் ஆதிசேஷன் மீது கிடப்பவர் வெறும் தரையில் கிடக்கிறாரே என்று மனம் வருந்தி தான் பறித்து வைத்த தாமரை மலர்களை சமர்ப்பித்து திருவடி அருகிலேயே நிரந்தரமாக அமரும் வரத்தை பெற்றார் . இன்றளவும் இத்திருத்தலத்தில் திருவடி அருகே தாமரை மலரையும் ,புண்டரீக முனிவர் அமர்ந்துள்ளதையும் காணலாம் . தரை தலத்தில் சயனித்திருப்பதால்  "தல சயன பெருமாள் "என்று அழைக்கப்படுகிறார் .

மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிவன் ,திருமால் தலத்தையே திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்ததாக தெரிகிறது .


பூதத்தாழ்வார் 

பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் திரு அவதாரம் செய்த திருத்தலம் .

*  பெருமாள் தரை தலத்தில் சயனித்துள்ள ஒரே திவ்யதேசம் , அதனால இங்கு வந்து  நிலம் வீடு சம்பந்தமாக வேண்டுவார்கள் .
*தாயார் தாமரை இன்றி நிலத்திலேயே அமர்ந்துள்ள ஒரே தலம் .
* உற்சவர் தாமரை மலரை ஏந்தியவாறு காட்சி தரும் ஒரே  திவ்யதேசம் .
*திருமகள் பிராட்டி நிலமங்கை தாயார் என்ற நாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம் .

தரிசன நேரம் & முகவரி 

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை 
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00மணி வரை 

மாமல்லபுரம் பேருந்து நிலைய அருகிலேயே உள்ளது .
சென்னையிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளது .




     

20.8.17

Jegannathar Perumal and Thirumalisai Alvar Temple, Thirumazhisai

அருள்மிகு ஜகந்நாதர் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார்




சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இந்த திருமழிசை தலம் சிறப்பு வாழ்ந்தது . உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது " உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்துப் பக்கம் வலிது " என்ற திருச்சந்தவிருத்தானியானால் அறியப்படுகிறது .




தலபெருமை :

திருப்புல்லானினியில் சயனகோலமும் ,பூரியில் நின்ற கோலமும் இந்த திருத்தலத்தில் வீற்றிருந்த கோலத்தில் இருப்பதால் இத்தலத்தை" மத்திய ஜெகநாதம் " என்று அழைக்கப்படுகிறது .

அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார் . அவர்களுக்கு ஜெகந்நாதர் அமர்ந்த நிலையில் காட்சி அளித்தார் .

ஆழ்வார் அவதாரம் :

இவர் இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானின் சக்கரம் அம்சமாக திருவவாதித்தார் . அவதரித்த காலம் : துவாபரயுகம் .
தந்தை பெயர் : பார்கவ மகரிஷி
தாயார் : கனகாங்கி
அருளிக் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி ,திருச்சந்த விருத்தம்
இவர் இவுலகில் எழுந்தருளியிருந்த காலம் : 4700 ஆண்டுகள்
இந்த கோவில் மட்டும் இல்லாமல் இத்திருத்தலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒத்தாண்டேஸ்வரர் மற்றும் வீடறிந்த பெருமாள் கோவில்கள் உள்ளன இவற்றையும் கண்டு இறைவன் அருளை பெறலாம் .
இக்கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .



Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...