23.5.18

Arulmigu sthala Sayana Perumal Temple, Mamalapuram

அருள்மிகு தல சயனப் பெருமாள் திருக்கோயில் 

திருக்கடல் மல்லை ( மாமல்லபுரம் )




மூலவர் - தலசயன பெருமாள் 

தாயார் - நிலமங்கை  தாயார் 

உற்சவர் - உலகுய்ய நின்ற பெருமாள் 

கோலம் -  சயனம் 

தீர்த்தம் - புண்டரீக புட்கரணி , கருட நதி 

மங்களாசனம் - பூதத்தாழ்வார் , திருமங்கை ஆழ்வார் 

* 108 திவ்யதேசங்களில் 63 வது திவ்யதேசம் ஆகும் 

* 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது 

தல வரலாறு 



புண்டரீக முனிவர் பாற்கடல் பரந்தாமனின் மீது அளவற்ற பக்தி பெருக்கால் குளத்தில் உள்ள தாமரை மலர்களை கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்க நினைத்தார் .பறித்த பூக்களை கூடையில் இட்டு கிழக்கு நோக்கி கொண்டு செல்லும் போது ,குறுக்கே கடல் இருந்தது ,பக்தி பெருக்கால் தன் இரண்டுகைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைத்தார் . அண்ணம் அகாரம் இன்றி இதையே செய்துகொண்டிருந்தார் . இதை கண்டு ஆனந்தம் ஆனந்தம் கொண்ட இறைவன் முதியவர் வேடம் இட்டு காரணம் கேட்டார் . அதற்கு புண்டரீக முனிவர் பாற்கடல் செல்ல பாதை ஏற்படுத்துவதாக கூறினார் . உடனே முதியவராக வந்த இறைவன் தனக்கு உணவு தயார் செய்து கொடுத்தால் தானும் உம்மோடு சேர்ந்து இறைப்பதாக கூறினார் . உடனே முனிவர் மகிழ்ந்து விரைவாக இரண்டு பேரும் இறைக்கலாம் என்று எண்ணி உணவு தயார் செய்ய சென்றார் ,உணவு தயார் செய்து திரும்ப வந்து பார்க்கையில் முதியவர் முகுந்தனாக சயனித்திருந்தார் . அதிர்ந்து போன முனிவர் ஆதிசேஷன் மீது கிடப்பவர் வெறும் தரையில் கிடக்கிறாரே என்று மனம் வருந்தி தான் பறித்து வைத்த தாமரை மலர்களை சமர்ப்பித்து திருவடி அருகிலேயே நிரந்தரமாக அமரும் வரத்தை பெற்றார் . இன்றளவும் இத்திருத்தலத்தில் திருவடி அருகே தாமரை மலரையும் ,புண்டரீக முனிவர் அமர்ந்துள்ளதையும் காணலாம் . தரை தலத்தில் சயனித்திருப்பதால்  "தல சயன பெருமாள் "என்று அழைக்கப்படுகிறார் .

மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிவன் ,திருமால் தலத்தையே திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்ததாக தெரிகிறது .


பூதத்தாழ்வார் 

பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் திரு அவதாரம் செய்த திருத்தலம் .

*  பெருமாள் தரை தலத்தில் சயனித்துள்ள ஒரே திவ்யதேசம் , அதனால இங்கு வந்து  நிலம் வீடு சம்பந்தமாக வேண்டுவார்கள் .
*தாயார் தாமரை இன்றி நிலத்திலேயே அமர்ந்துள்ள ஒரே தலம் .
* உற்சவர் தாமரை மலரை ஏந்தியவாறு காட்சி தரும் ஒரே  திவ்யதேசம் .
*திருமகள் பிராட்டி நிலமங்கை தாயார் என்ற நாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம் .

தரிசன நேரம் & முகவரி 

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை 
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00மணி வரை 

மாமல்லபுரம் பேருந்து நிலைய அருகிலேயே உள்ளது .
சென்னையிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளது .




     

No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...