15.5.18

Arulmigu Kapaleeshwarar Temple- Mylapore, Chennai

அருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் - மயிலாப்பூர் (திருமயிலை )


நிறைவே கானும் மனம் வேண்டும் சிவனே ! அதை நீ தரவேண்டும் 

ராஜ கோபுரம் 

தேவாரம் பாடல் பெற்ற தல எண்  213


இறைவன்: கபாலீஸ்வரர்.

அம்பாள் : கற்பகாம்பாள்.

தல விருட்சம்: புன்னை மரம்.

தல தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்.

ஆகமம்: காமிக ஆகமம்.

ஆலயப் பழமை: ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.
இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.

கோவில் அமைப்பு:
கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்டு இவ்வாலயம், சென்னை நகரின் நடுப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது.

கிழக்கில் உள்ள கோபுரமே பிரதான இராஜகோபுரம்.
ஏழு நிலைகளைத் தாங்கியபடி சுமார் நூற்று இருபது அடி உயரம் வரை இருக்கும் எனத் தோன்றுகின்றதது.
தல அருமை:
சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன.

இதனால் தானும், சிவனுக்கு ஈடானவன் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது.

இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார்.

பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து போவது இயல்பு.

மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மாவை ஈசனால் படைக்கப்படுவார்.

ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார்.

சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்தார் சிவபெருமான்.

அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார்.

ஆகவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு *கபாலீஸ்வரர்* ஆனார்.

தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.
தல விருச்சம் 


# அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தாள்.
சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார்.

# இதுவே, புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறதைக் காணமுடிந்தது. 

# இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது.

 #வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார்.

# தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார்.

# தேவியர்கள் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர்.

# திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது பத்து பாடல்கள் பாடப்பெற்றிருக்கிறது.

தல பெருமை:
பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள்.

சிவனும் உபதேசிக்க முனைப்பெடுத்து, உபதேசத்தை அருளிக்கொண்டிருந்த சமயத்தில்........

அவ்வேளையில் அங்கு மயில் ஒன்று நடனமாடவே, அந்த மயிலைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை உண்ணிப்பாக கவனிக்காமல் மயில் நடனத்தை வேடிக்கை பார்த்தாள்.

பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பதுதானே இயல்பு.

அதனால், குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதாவாகவே பிற! என்று மயிலாக மாறும்படி செய்து சபித்து விட்டார்.

தன் நிலை குற்றத்தைப் புரிந்து கொண்ட அம்பிகை, தன் குற்றத்திற்கு விமோசனம் கூறுமாறு கேட்டாள்.

அதற்கு ஈசன், நீ பூலோகத்தில் என்னை மயில் வடிவில் வந்து வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார். 

அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.

பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.
இருப்பிடம்:
சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

திருமயிலை புறநகர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கிறது.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மைலாப்பூர்,
சென்னை,
PIN - 600 004

ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

நன்றி : திரு .கருப்புசாமி 
Post a Comment

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...