Showing posts with label tiruvellure district temples. Show all posts
Showing posts with label tiruvellure district temples. Show all posts

26.7.18

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் 

முகப்பு தோற்றம் 

இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசித்து உங்களுக்காக இந்த ஆலயத்தின் சிறப்புகளை அளித்துள்ளேன் நீங்கள் படித்து இறைவனின் அருளை பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறேன் .


மூலவர் : மாசிலாமணீஸ்வரர் 

தாயார் : கொடியிடைநாயகி 

ஆகமம் : சிவாகமம் 

தல விருச்சகம் : முல்லை 

ஊர் : வட திருமுல்லைவாயில் 

பழமை : 2000 வருடங்களுக்கு முற்பட்டது 


* தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இந்த ஆலயம் தொண்டை மண்டலத்தில் 22வது தலம் ஆகும் .இது 255வது தலமாகும் 
தொண்டைமான் சக்கரவர்த்தி 

சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார் . தொண்டைமான் மன்னரால் வெட்டப்பட்டதால் அதை மறைக்க அவருக்கு சந்தனக்காப்பு இடப்பட்டிருக்கும் .வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று அதை எடுத்து வேறு மாற்றுவார்கள் .

* பாதரச லிங்கம் சன்னதி உள்ளது அவருக்கு எல்லாவித அபிஷேகமும் நடைபெறுகிறது .

* அம்பாள் வலது புறத்தில் வீற்றியிருப்பர் .இவர் இங்கு கிரியா சக்தியாக காட்சிதருகிறார் 

* தொண்டைமான் மன்னருக்கு போருக்கு உதவி செய்வதற்காக நந்தி உடன் சென்றதால் அவர் இறைவனின் எதிர் திசையை(கிழக்கு நோக்கி ) நோக்கி வீற்றியிருப்பர் 

* இங்கே சிவனே பிரதானம் என்பதால் நவகிரகத்திற்கு தனி சன்னதி இல்லை .
கிழக்கு நோக்கிய நந்தி 

* மன்னருக்கு அவசரமாக காட்சி அளிக்க வேண்டியிருந்ததால் அம்பாள் வலதுபுறத்தில் இருப்பார் மற்றும் இருவரும் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார் .

* தேவர்களும் ,அருளாளர்களும் வணங்கிய ஆலயம் 

*பைரவர் ,சூரியன் ,நக்ஷத்திரங்கள் ,வீரபத்திரர் ,நக்கிரகங்கள் இவர்களுக்கு தனி வழிபாடு கிடையாது ஏனெனில் அனைவரும் தம்வினை நீங்க இவ் பெருமானை வணங்கியதால் தனி வழிபாடு கிடையாது ,இறைவனே இங்கு எல்லாம் ஆவார் .

* பிரதோஷம் இங்கு மிக சிறப்பாக கொண்டாட படுகிறது 

* வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாட்களில் திருவெற்றியூர் வடிவுடையம்மன் ,மேலூர் திருவுடையம்மன் மற்றும் இவ் ஆலயத்தின் கொடியுடையம்மன் ஆகியவர்களை மூன்று காலங்களில் வழிப்பட்டால் நல்ல பலன் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது . இவ் மூன்று ஆலயங்களையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது .

* இங்குள்ள முருகரை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார் 

*வசிட்டருக்கு தன் தவத்தால் காமதேனு பசு கிடைத்ததாக புராணங்கள் கூறுகின்றன .

* தொண்டைமான் மன்னன் இக் ஆலயத்தை கட்ட குறும்பர்களின் கோட்டையிலுருந்து இரண்டு வெள்ளருக்கு தூண்களை அமைத்தார் அவை இன்றும் மாசிலாமணி ஆலயத்தின் முன்னர் காணப்படுகிறது .
கொடிமரம் 


கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் செல்லும் வழி 

காலை 7.00 முதல் 12.30 வரை ,மாலை 4.30 மணி முதல் 8.30 வரை 

சென்னை முதல் அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் திருமுல்லைவாயில் நிறுத்தத்தில் இறங்கி 1km செல்லவேண்டும் .மற்றும் அம்பத்தூரிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

அருகில் உள்ள ஆலயங்கள் 

திருநின்றவூர்
Bhakthavatchala perumal
Hirudayaleeswar

திருவேற்காடு 

திருவலிதாயம்
Thiruvalleswarar

      

  திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்சீருடைக் கழல்கள்என் றெண்ணிஒருவரை மதியா துறாமைகள் செய்தும்ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்முருகமர் சோலை சூழ்திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னைப்பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே

- சுந்தரர் 

தலை விருச்சகம் 


தல தீர்த்தம் 

முன் மண்டப சிற்பம் 

நர்த்தன கிருஷ்ணர் 

சிவன் 

விநாயகர் 

உள் பிரகார வழி 

பல்லி சிற்பம் 
பெருமாள் கோயில் 

இறைவன்






21.7.18

Sri Thyagaraja swamy, vadivudaiyambigai Temple- Thiruvottiyur

அருள்மிகு வடிவுடையாம்பிகை உடனுறை தியாகராஜர் சுவாமி திருக்கோயில் - திருவொற்றியூர் 




முகப்பு கோபுரம் 

மூலவர் - படம்பக்கநாதர் ,ஒற்றீஸ்வரர் ,ஆதிபுரீஸ்வரர் ,தியாகராஜர் 
தாயார் - வடிவுடையாம்பிகை ,வட்டப்பாறையம்மன் 
விருச்சம் - மகிழம் ,அத்தி 
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் ,நந்தி தீர்த்தம் 
ஆகமம் - காரணம் ,காமீகம் 
ஊர் - திருவொற்றியூர் 
கொடிமரம் 

* இங்கு எல்லாமே இரண்டு சுவாமி ,அம்பாள் ,தீர்த்தம் ,பூஜை ,விருச்சகம் இவை எல்லாமே இரண்டு ஆகையால் இரண்டு என்பது பிரதானமானது 

* தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 253வது தலம் 

* சுயம்பு லிங்கம் ,ஆவுடையார் கிடையாது 

* இங்கு பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார் 

* துர்க்கை காலின் கீழ் மகிஷாசுரன் இல்லை 

* அம்மனின் 51 சக்தி பீடங்கலில் இது இஷி சக்தி பீடமாகும் 

*பிரமனின் விருப்பத்திற்கேற்ப ஈஸ்வரன் மண்ணுலகில் எழுந்தருளிய முதல் திருத்தலம் 
வட்டப்பாறை அம்மன் 

*ஏழாம் நூற்றாண்டில் காளியின் வடிவமாக உள்ள வட்டப்பாறை அம்மனை தொண்டைமான் சக்கரவர்த்தி வழிபட்ட தலம் .

* ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை விளக்கும் திருமூர்த்திகளின் ஓர் வடிவம் பெற்ற தலம் 

* பஞ்சபூத தலங்கள் ஒரே இடத்தில அமைந்த தலம் 

* ஆதிசேஷன் மற்றும் சந்திரன் ஒருங்கே நின்று சிவனை வழிபட்ட தலம் 

* அகத்தியர் இறைவனின் திருமணக்கோலத்தை கண்டு களித்த தலம் .

* இலவன் பிரதோஷ நாளில் சிவனை வழிபட்ட தலம் 

* நந்தியம் பெருமானுக்காக சிவன் பத்மதாண்டவம் ஆடிய தலம் .

*திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலம் .

* சுந்தரர் சங்கிலி நாச்சியாரை சிவபெருமான் முன்னிலையில் மணம் புரிந்த சிறப்புமிக்க தலம் .

* ஆதிபுரி  என்பது இவூரின் பழம் பெறும் பெயராகும் 

* அருணகிரிநாதர் ,வள்ளலார் ,பட்டிணத்தார் ,பாம்பன் அடிகளார் போன்ற இருபது அருளாளர்கள் போற்றி பாடிய தலம் 

* தெய்வங்கள் ,முனிவர்கள் ,தேர்வர்கள் மற்றும் ஆறு அரசர்கள் வழிபட்ட தலம் 

*27 நட்சத்திர லிங்கங்களை கொண்ட தலம் 

* திருவொற்றியூரை நினைத்தாலே வினைகள் நீங்கும் .

 அருள்மிகு வடிவுடையாம்பிகை 

வடிவுடையம்மன் கோயில் 

வடிவுடைநாயகியை கண்குளிர கண்டு கைகூப்பி வணங்கினால் நல்ல மனைவியும் ,நல்ல கணவனும் ,நல்ல குழந்தை செல்வமும் கிடைக்கும் .செல்வ செழிப்போடு வாழ்வர் .

இவர்  இங்கு இஷி சக்தி (ஞான சக்தியாக ) அருள்புரிகிறார் . 51 சக்தி பீடங்களில் இத்தளம் இஷி சக்தி பீடமாகும் .

மூவுலகை ஆளுகின்ற அன்னை ஆதி பராசக்தி நம்மவர்களுக்கு தாயக ஆள்கிறார் .இவர் இச்சா சக்தி ,ஞான சக்தி ,கிரியா சக்தி  என முப்பெரும் தேவியாக அருள்பாலித்து வருகிறார் .
சென்னையில் இவர் மூன்று இடங்களில் இவ் சக்திகளாக காட்சிதருகிறார் இவர்களை பவுர்ணமியும் வெள்ளிக்கிழமையும் ஒன்றாக வரும் நாளில் ஒரே நாளில் தரிசனம் செய்தல் வாழ்க்கை செம்மயாகவும் ,ஒளிமயமாகவும் விளங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .

1. திருவுடையம்மன் -இச்சை சக்தி - மேலூர் (மீஞ்சூர் )-அதிகாலை தரிசனம் 

2. வடிவுடையம்மன் -ஞான சக்தி -திருவொற்றியூர் -உச்சிவேளை தரிசனம் 

3. கொடியுடையம்மன் - கிரியா சக்தி - திருமுல்லைவாயல் -மாலை தரிசனம் 
For more details 

செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் 

மத்திய ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை 

அருகில் பட்டினத்தார் அடிகளாரின்  ஜீவ சமாதி உள்ளது இந்த இடத்தை பற்றி பின்னர் எழுதிகிறேன் 
நன்றி - தல வரலாறு தொகுப்பு 













12.9.17

Vedapureeswarar Temple,Tiruverkadu

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு

மூலவர் :  வேதபுரீஸ்வரர் 
அம்பாள் : பாலாம்பிகை 
தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம் 
இடம்     : திருவேற்காடு 
காலம் : 2000 வருடங்கள் மேற்பட்ட பழமையானது 
சிறப்பு : தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23 ஆவது                     தளம், தேவார சிவ தலம்  274 ல் இது  256வது தலம் .

திருவேற்காடு என்றவுடன் எல்லோருக்கும் கருமாரி அம்மன் கோவில் மட்டுமே நினைவுக்கு வரும் ஆனால் திருவேற்காடு பேருந்து நிலையத்தில் 1கி.மீ  தொலைவில் மிக கம்பிரமாக வேதபுரீஸ்வர் கோவில் காட்சி அளிக்கிறார் .

தல வரலாறு   

சிவபெருமான் பார்வதி திருமணம் திருமணம் செய்த நேரத்தில் தேவர்கள் முதலியோர் வட திசை நோக்கி சென்றதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்த்து அதை சரிசெய்ய சிவபெருமான் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார் . அய்யனின் திருமணத்தை காணமுடியவில்லை என்ற அகத்தியரின்  வருத்தத்தை போக்க சிவபெருமான் தன் பார்வதியுடன் தன் திரு மணகோலத்தில் காட்சி அளித்தார் .

பிருகு முனிவர் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாக பரசுராமர் என்ற நாமத்தில் அவதரித்தார் .அவர் இத்தலத்தை வழிபட வந்தபோது உடன் ரேணுகையும் வந்தார் . அந்த ரேணுகையையே இப்போது 'கருமாரி அம்மன் 'என்று அழைக்கப்படுகிறது .

சிறப்பு :

இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார் . லிங்கத்திற்கு பின்னாடி சிவபெருமான் பார்வதி தேவியுடன் திருமண கோலத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறார் .

திருவேற்காடு பாலாம்பிகையும் ,திருவலிதாயம் ஜெகதாம்பிகையும் ,திருவெற்றியூர் வடிவாம்பிகையும் ஒரே நாளில் வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்வர் என்று கூறப்படுகிறது .

இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான 'மூர்க்கநாயனார் ' அவதரித்த தலமாகும் .



செல்லும் வழி : கோயம்பேட்டுலிருந்து திருவேற்காட்டுக்கு நிறைய பேருந்துகள் உள்ளன . மற்றும் வேலப்பன்சாவடி சிக்னல் இருந்து வலது புறம் திரும்பினால் திருவேற்காடு வரும்.

இந்த தளத்திற்கு அகத்தியர் வரும் பொழுது இந்த கோவிலை சுற்றி எட்டுத்திசைகளிலும் அஷ்ட லிங்கங்களை நிறுவி வழிபட்டதாக கருதப்படுகிறது அந்த அஷ்ட லிங்கங்களை பற்றி அடுத்த வரும் வாரங்களில்  பார்ப்போம் .
details of Ashtalingams please click below link
Ashtalingam details


       
               ------  திருச்சிற்றம்பலம் ------


Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...