அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் மற்றும் வெள்ளை பிள்ளையார் திருக்கோயில்
மூலவர் - திருவலஞ்சுழிநாதர்
அம்பாள் - பெரியநாயகி ,பிரஹந்நாயகி
தீர்த்தம் - காவேரி
தல விருச்சம் - வில்வம்
ஊர் - திருவலஞ்சுழி
* காவேரியை வலமாக சுற்றும் போது வருவதால் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது
* பாடல் பெற்ற தலங்களில் இது 88 தலமாகும்
* இங்குள்ள விநாயகர் மிகவும் சிறப்பு வாழ்ந்தவர் ,இவருக்கென தனி சன்னதி உள்ளது .இவர் இங்கு வெள்ளை நிறத்தில் காணப்படுவதால் வெள்ளை பி ள்ளையார் என்று அழைக்கப்படுகிறார் .
* பாற்கடலை கடையும் போது ஏற்பட்ட அமுத கடல் நுரையினால் ஏற்பட்ட விநாயகர் என்பதால் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் .இவர் சுயம்புவாக காட்சி தருகிறார் .
* தேவேந்திரன் அகல்வியாவின் சாபத்திலிருந்து விடுபட விநாயகரை கையில் சுமந்தபடி பூலோகத்தில் உள்ள சிவ தலங்களுக்கு சென்று தினமும் பூஜை செய்துவந்தார் ,அப்போது இத்தலத்திற்கு வந்தபோது சிவன் சிறுவனாக வந்து இந்திரனுக்கு முன்னாடி காட்சி அளித்தார் அப்போது இந்திரன் சிறுவனான சிவனிடம் தான் நீராட செல்லவேண்டும் அதுவரை விநாயகர் உள்ள பெட்டியை வைத்திருக்குமாறு கூறினார் . சிவன் அந்த விநாயகர் உள்ள பெட்டியை அங்கேயே கீழே வைத்து விட்டு மறைந்துவிட்டார் இந்திரன் வந்து பாத்த போது சிறுவன் இல்லை உடனே பிள்ளையாரின் பெட்டியை எடுக்க முற்பட்டார் ஆனால் எடுக்கமுடியவில்லை பின்பு விஸ்வகர்மாவை வைத்து விநாயகரை சுற்றி இந்திர ரதம் செய்து எடுத்து செல்ல முற்பட்டார் அப்போதும் முடியவில்லை . அப்போது விநாயகர் அசிரீரி மூலம் நான் இங்கேயே இருப்பதாகவும் விநாயகர் சதுர்த்தி அன்று இங்கு வந்து தன்னை வணங்கினால் தினமும் வணங்கியதற்கு சமம் ஆகும் என்றார் . ஆதலால் இக்கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள் மிக அற்புதமாகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும் .
*விநாயகர் சுயம்பாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் ,அலங்காரம் .பூக்கள் சாத்தப்படுவதில்லை ,பச்சை கற்பூரத்தை பொடி செய்து மட்டுமே சாத்துவார்கள் .
* விநாயகர் 10 படை வீடுகளில் இத்தலமும் ஒன்று .
* கோயில் மிக பிரமாண்டமாக பெரியதாக இயற்கை அழகோடு மரங்கள் சூழ அமைந்திருக்கிறது.
அமைவிடம் மற்றும் செல்லும் வழி :
சுவாமிமலை அருகில் உள்ளது இங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம் இதன் அருகிலேயே பட்டிஸ்வரம் கோவில் மற்றும் திவ்ய தேசத்தில் ஒன்றான திருப்புள்ளம் பூதங்குடி உள்ளது . கும்பகோணத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை
மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை
மேலும் புகைப்படங்களுக்கு கிழே உள்ள link ஐ அழுத்தவும்
No comments:
Post a Comment