Showing posts with label nagapatinam district temple. Show all posts
Showing posts with label nagapatinam district temple. Show all posts

29.6.18

Sri Sattainathar Temple- Sirkali

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் - சீர்காழி 

மூலவர்  : சட்டைநாதர் ,பிரம்மபுரீஸ்வரர் ,தோணியப்பர் 

தாயார் : பெரியநாயகி ,திருநிலைநாயகி 

உற்சவர் : சோமாஸ்கந்தர் 

தல விருச்சம் : பாரிஜாதம் , பவளமல்லி 

தீர்த்தம்  : பிரம்மதீர்த்தம் முதலாக 22 தீர்த்தம் 

ஊர்  :  சீர்காழி




*  பாடல் பெற்ற தலங்களில் இது 14 வது தலம் 

* திருஞானசம்பந்தர் தோன்றிய இடம் 

* அம்பிகை ஞானசம்பந்தருக்கு ஞான பால் புகட்டிய இடம்  இங்கு இத் திருவிழா சிறப்பாக கொண்டாட படுகிறது . திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி இங்கு உள்ளது .

* பிரம்மன் ,குரு ,கண்ணபிரான் ,ஸ்ரீகாளி ,பராசரர் ,உரோமச முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம் .

* இத்தலத்தில் சிவபெருமான்  குரு ,லிங்கம் ,சங்கமம் என மூன்று மூர்த்தங்களாக விளங்குகிறார் 

* இக்கோவிலில் உள்ள குன்றின் மீது பெரியநாயகி  சமேத பெரியநாயகராக எழுந்தருளிருக்கும் தோணியப்பர் குரு மூர்த்தங்களாக விளங்குகிறார் . 
இவரை ஞானசம்பந்தருக்கு ஞானஉபதேசம் செய்த குரு ஆவர் 

* பிரம்மரால் ஸ்தாபிக்கப்பட்டதே இங்குள்ள மூலவர்  பிரம்மபுரீவரர் .

* இம்மலையின் தென்புறத்தில் சட்டைநாதர் வீற்றியிருக்கிறார் .இரணியது உயிரை மாய்த்த நரசிம்மத்தை பிளந்து அதன் எலும்பை கதையாகவும் ,தோலை சட்டையாகவும் கொண்டு இங்கு காட்சி அளிப்பது சிறப்பு . இதிலிருந்து தானும் விஷ்ணுவும் வேறு இல்லை என்று உணர்த்தினார் .

தோடுடைய செவியன்விடை யேறியோர் 
தூவெண் மதிசூடிக் 
காடுடைய சுடலைப்பொடி பூசியென் 
உள்ளம்கவர் கள்வன் 
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து 
ஏத்த அருள்செய்த 
பீடுடைய பிராமபுரமேவிய 
பெம்மான்இவன் அன்றே 


முகவரி மற்றும் இருப்பிடம் 

சீர்காழி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது ,சிதம்பரத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

ph - 04364-270235

திறந்திருக்கும் நேரம் 
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை 
மலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 

இங்கிருந்து 1 km அருகில்  திவ்யதேசத்தில் ஒன்றான திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் உள்ளது அதன் விபரம் கீழே உள்ள link  ஐ அழுத்தவும் 







Sri Thiruvikrama Narayanar Temple, Sirkali

அருள்மிகு திருவிக்ரம நாராயண பெருமாள் - சீர்காழி 




மூலவர் - திருவிக்ரமன் , தாடாளன் 

தாயார் - லோகநாயகி ,மட்டவிழ் குழலி 

உற்சவர் - திருவிக்ரம நாராயணர் 

கோலம் - நின்ற கோலம்


*  திவ்ய தேசங்களில் 28 வது  திருத்தலம் 
* திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்தார் 
*  இறைவன் நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ,மகாபலியின் கர்வத்தை அடக்க ஈரடியால் உலகனைத்தையும் அளந்தார் ,அத்தகைய விண்ணளக்கும் மூர்த்தி சீர்காழி என்னும் இந்த ஊரில் கோயில் கொண்டுள்ளார் .
* உரோமச முனிவரின் ஆசையை பூர்த்தி செய்ய இறைவன் தன் இடது காலை தூக்கி திரிவிக்ரம அவதாரத்தை காட்டியுள்ளார் . ஆதலால் இவுருக்கு தாடாளன் என்ற பெயரும் உண்டு .

* திருஞானசம்பந்தர் திருமங்கையாழ்வாரை பாராட்டி தமது தண்டை மற்றும் வேலை பரிசாக அளித்த தளம் 

* தாயார்  லோகநாயகி என்ற நாமத்தில் காட்சி தரும் திவ்ய தேசம் மற்றும் இறைவன் தாயாரை தன் மார்பில் தாங்கியவாறு காட்சி தரும் தலம் .


இருப்பிடம் மற்றும் நேரம் :

அருள்மிகு திருவிக்ரம நாராயணர் திருக்கோயில் 
விண்ணகரம் ,சீர்காழி -609110
நாகப்பட்டினம் மாவட்டம் 

தரிசன நேரம் :

காலை 7.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை 
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

போக்குவரத்து :

சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் சீர்காழி அருகில் பேருந்து நிலையத்திலிருந்து 2 km முன்னதாகவும் , சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 1km தொலைவிலேயும் உள்ளது .

இக்கோவிலின் அருகில் 1 km தொலைவில் பாடல் பெற்ற சிவத்தலத்தில் ஒன்றான அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் உள்ளது மேலும் விவரங்களுக்கு கிழே உள்ள link ஐ அழுத்தவும்
Sri Sattainathar Temple, sirkali

please click for more details 


9.6.18

Sri Mayuranathar Temple, Mayavaram

அருள்மிகு  மாயூரநாதர்  திருக்கோயில் -மயிலாடுதுறை 


மூலவர் : மாயூரநாதர் 
தாயார் : அபயாம்பிகை ,அஞ்சொல்நாயகி 
தலவிருச்சம் : மாமரம் , வன்னி 

# இக்கோவில்  பாடல் பெற்ற தலங்களில் 102வது தலம் . காவேரி தென்கரையில் 39 வது தலம் .

# அம்பாள் மயில் வடிவத்தில் வந்து வழிபட்டார் 

# ஸ்வாமியின் பின் புறத்தில் உள்ள முருகரை அருணகிரிநாதர் பாடியுள்ளார் 

# தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால் அபயாம்பிகை என்று அழைக்கப்படுகிறார் . கையில் கிளியுடன் காட்சி தருகிறார் .

# இச்சன்னதியில் சந்தன விநாயர் உள்ளார் .இவரை அகத்தியர் வழிபட்டதனால் அகத்திய சந்தன விநாயகர் என்று அழைக்கப்படுகிறரர் .

# கோஷ்டத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு கிளிகள் மற்றும் குரங்குகள் இருக்கும் விசேஷமான அமைப்பு .

# நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது . சிவனின் கௌரி தாண்டவத்தை மயூரதாண்டவம் என்று அழைக்கிறார்கள் .

#  திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர் பாடியுள்ளார்கள் 

அமைவிடம் :

சென்னை to நாகப்பட்டினம் போகும் வழியில் மயிலாடுதுறை உள்ளது .கும்பகோணத்திலிருந்து 45 நிமிடங்களில் செல்லலாம் . இக்கோவிலுக்கு முன்னாள் 8 km தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் vaitheeswaran kovil   உள்ளது . இவூரின் பேருந்து நிலையத்தில் இருந்து 5 km  அருகில் திருஇந்தளூர் என்ற ஊரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் உள்ளது .

திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30வரை  மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை . ph : 04364-223779,222345


for more details please click following link 

நிறைவே கானும் மனம் வேண்டும் சிவனே !அதை நீ தரவேண்டும்
                                திருச்சிற்றம்பலம் 









11.11.17

Vaidyanathar Temple- Vaitheeswaran Koil

வைத்தியநாதர் கோவில் -வைத்தீஸ்வரன் கோவில்

 








ஆதி வைத்தியநாதர் மற்றும் தல விருச்சம் 


மூலவர் - வைத்தியநாதர் 

தாயார் - தையல்நாயகி 

தலவிருச்சகம் - வேம்பு 

தீர்த்தம் - சித்தாமிர்தம் 

பழமை - 2000 வருடங்கள் முற்பட்டது 

மறுபெயர் - புள்ளிருக்குவேளூர் 

தேவார பாடல் பெற்ற காவேரி வடகரையில் இது 16வது தலம் .





தன்வந்திரி ஜீவ சமாதி 

தல சிறப்புக்கள் :



வைத்தியநாதர்  :

இவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக வீற்றியிருக்கிறார் . இக்கோவிலில் எல்லா நவகிரகங்களும் ஈசனின் பின்புறத்தில் ஒரே நேர்கோட்டில் உள்ளனர் .ஈசனுக்கு அடங்கி நவகிரகங்கள் உள்ளதால் ஈசனை வணங்குவர்களின் கிரக பலனை சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி செய்கிறார் .வைத்தியநாதர் மருந்தை தினமும் சாப்பிட்டுவந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு . இங்குள்ள மரகத லிங்கம் சிறப்பு வாய்ந்தது .

தையல்நாயகி :

தையல்நாயகிக்கு  புடவை சாத்துதல் ,அபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு  செய்வது பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது . மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் தாயாருக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்வார்கள் .இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் நீங்கும் .

செல்வமுத்துகுமார் :

இவருக்கு அர்த்தசாமபூஜை ரொம்ப விசேஷமானது .இரவு 9 மணிக்கு நடக்கும் பூஜையில் புனுகு ,பச்சை கற்பூரம் ,சந்தனம் ,எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம் ,பால் அன்னம் வைத்து பூஜை செய்வர் . இந்த சந்தனம் மற்றும் திருநீறு நோய் தீர்க்கவல்லது .இங்கு முத்துகுமாரரே முதன்மையாக உள்ளதால் காலை மற்றும் அர்த்தஜாம பூஜை முதலில் இவருக்கு செய்த பிறகே சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும் . இங்கு எல்லா விழாக்களும் முருகனுக்கே நடக்கிறது .

அங்காரகன் (செவ்வாய் )

இங்கு அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது . செவ்வாய் தோஷத்தால் தடை பட்ட திருமண தோஷங்கள் ,கடன் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகள் ,நிலம் பிரச்சனைகள் ஆகியவை இவரை வணங்கினால் தீரும் . செவ்வாய் கிழமைகளில் இவர் ஆடு வாகனத்தில் எழுந்தருள்வார் . 

சித்தாமிர்த தீர்த்தம் :

இத்தல சிவனை சித்தர்கள் அமிர்தத்தால் அபிசேகம் செய்து பல வரங்களை பெற்றனர் அவ்வாறு செய்கையில் ஒரு துளி அமிர்தம் இக்குளத்தில் விழுந்ததால் இக்குளத்திற்கு சித்தாமிர்த குளம் என்று அழைக்கப்பட்டது .இக்குளத்தில் நீராடினால் உடலில் உள்ள அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடலாம் .இக்குளத்தில் 18 தீர்த்தங்கள் உள்ளதாக கூறப்படுகிறது .சதானந்த முனிவரின் சாபத்தால் இக்குளத்தில் தவளை மற்றும் பாம்புகள் இருப்பதில்லை .

திருச்சாந்து :

இங்கு புற்று மண் ,அபிசேக தீர்த்தம் ,வேப்ப இலை ,அபிசேக சந்தனம் ,அபிசேக திருநீறு இவைகளை கொண்டு திருச்சாந்து உருண்டை தயார் செய்யப்படுகிறது .இதை வாங்கி சாப்பிட்டால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு .தோல் வியாதிகளுக்கு இங்கே கொடுக்கப்படும் புனுகு எண்ணையை தேய்த்து நீராடினால் குணமாகும் . இக்கோயில் 4448 நோய்களை தீர்த்துவைக்கும் தலைமை பீடம் இது .தன்வந்தரி சித்தரின் ஜீவ சமாதி அடைந்த இடமும்கூட .

சடாயுகுண்டம் :


சடாயுகுண்டம் 



சடாயுவின் வேண்டுதலின் படி ராமபிரான் விபூதி குண்டலத்தில் சிதையடுக்கி சடாயுவின் உடலை இட்டு தகனம் செய்ததால் இவ்விடம் சடாயுகுண்டம் என்று அழைக்கப்படுகிறது .

இத்தல பெருமைகளை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் இது .

மற்றும்  பல மாநிலத்தவரின் குலதெய்வம் என்பதால் தினமும் இங்கே மொட்டை அடித்தல் ,காது குத்துதல் மற்றும் திருமணங்கள் நடை பெறுகின்றனர் .இத்தலத்தில் ஓலை சுவடி ஜோசியம் ரொம்ப பிரபலமானது .

இத்திருக்கோயில் திருக்கைலாய தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமானது .

செல்லும் வழி :

இது நாகப்பட்டினம் மாவட்டதில் மயிலாடுதுறை அருகில் உள்ளது .சிதம்பரம் நடராசரை தரிசனம் செய்துவிட்டு வைத்தியநாதரை தரிசனம் செய்யலாம்.
நிறைய தங்கும் விடுதிகள் இங்கே உண்டு . மொட்டை அடித்தால் சுடு நீர் அருகிலேயே குறைந்த பணத்திற்கு தருகிறார்கள் . சாப்பிட ஒரு ஐயர் மெஸ் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் மிக உயர் தரமான சைவ ஹோட்டலுடன் கூடிய அழகிய தங்கும் விடுதி "சதாபிஷேகம் " என்ற பெயரில் உள்ளது .  விடுதியின் விவரம் பின் வரும் லிங்கை அழுத்தவும் .


திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 வரை , மாலை 4 மணி முதல் இரவு  8.30 வரை 

If you need to English please click following link





6.8.17

Thirumeeyachur Sri Lalithambigai Temple

திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை உடனுறை அருள்மிகு மேகநாதர் திருக்கோவில் 



 தல வரலாறு


அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்
  மூலவர் : மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர்,   முயற்சிநாதர் )
   உற்சவர் : பஞ்சமூர்த்தி
   அம்மன்/தாயார் : லலிதாம்பிகை, சவுந்திரநாயகி
   தல விருட்சம் : மந்தாரை, வில்வம்
   தீர்த்தம் : சூரியபுஷ்கரிணி
   ஆகமம்/பூஜை  : -
   பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
   புராண பெயர் : திருமீயச்சூர்
   ஊர் : திருமீயச்சூர்
   மாவட்டம் : திருவாரூர்
   மாநிலம் : தமிழ்நாடு 

திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 56வது தலம்


பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர் வரமுடியும்அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!

தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும்  தலம் திருமீயச்சூர். 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ,

 இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் திருத்தலம் இது!

இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!

உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!

பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் ஈசன். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள். இறுதியில் அவனை அழித்தொழித்தாள். ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை.

 இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.

எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட… அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.

அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, "வசின்யாதி வாக் தேவதைகள்' என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே "ஸ்ரீ மாத்ரே' என துவங்கும் "லலிதா சகஸ்ரநாமம்' ஆயிற்று.

இதோ… இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள். மகிழ்விக்கிறாள். 

வருடம் முழுவதும், இங்கே கூட்டம், 
மகா பெரியவா, ‘’இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்; அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!’’ என அருளினாராம்!

  .


 தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 119 வது தேவாரத்தலம் ஆகும்

இங்கு மூலவர் மேகநாதர். சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.  சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் "மீயச்சூர்' என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீசக்ர நாயகி: மூலவர் மேகநாதர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருளுகிறார் அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும்  உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. இளங்கோவில் சன்னிதானத்திலுள்ள இறைவனின் திருநாமம் சகலபுவனேஸ்வர். இவர்   மேகலாம்பாளுடன் அருள் செய்கிறார்.

கிளியுடன் துர்க்கை: மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான். சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான்.


"சுகம்' என்றால் "கிளி'. இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள். இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்க்கை மூலமாக லலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். "சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்ற சுலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது. இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று  வருவதைக் காணலாம்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.


 உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர்.


 இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,"லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?''என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்," "பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்,''என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர்,"லலிதா நவரத்தின மாலை' என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

இரண்டு லிங்கம்: இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். பிரண்டை சாத நைவேத்தியம் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக தி உண்டு என்பார்கள்.




சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான்.


கொலுசு காணிக்கை:  இங்குள்ள லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும், காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். ஒருமுறை அம்பாளின் பக்தை ஒருவரின் கனவில் அம்பாளுக்கு கொலுசு மாட்டுவது போன்ற காட்சி வந்ததாம். அதன்படி பக்தை அம்பாளுக்கு கொலுசு செய்து அணிவித்தார். தற்போது பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள். 


சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளிலில் ஒரு முறையேனும் தரிசிக்கவேண்டிய தளம் .

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...