அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் -மயிலாடுதுறை
மூலவர் : மாயூரநாதர்
தாயார் : அபயாம்பிகை ,அஞ்சொல்நாயகி
தலவிருச்சம் : மாமரம் , வன்னி
# இக்கோவில் பாடல் பெற்ற தலங்களில் 102வது தலம் . காவேரி தென்கரையில் 39 வது தலம் .
# அம்பாள் மயில் வடிவத்தில் வந்து வழிபட்டார்
# ஸ்வாமியின் பின் புறத்தில் உள்ள முருகரை அருணகிரிநாதர் பாடியுள்ளார்
# தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால் அபயாம்பிகை என்று அழைக்கப்படுகிறார் . கையில் கிளியுடன் காட்சி தருகிறார் .
# இச்சன்னதியில் சந்தன விநாயர் உள்ளார் .இவரை அகத்தியர் வழிபட்டதனால் அகத்திய சந்தன விநாயகர் என்று அழைக்கப்படுகிறரர் .
# கோஷ்டத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு கிளிகள் மற்றும் குரங்குகள் இருக்கும் விசேஷமான அமைப்பு .
# நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது . சிவனின் கௌரி தாண்டவத்தை மயூரதாண்டவம் என்று அழைக்கிறார்கள் .
# திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர் பாடியுள்ளார்கள்
அமைவிடம் :
சென்னை to நாகப்பட்டினம் போகும் வழியில் மயிலாடுதுறை உள்ளது .கும்பகோணத்திலிருந்து 45 நிமிடங்களில் செல்லலாம் . இக்கோவிலுக்கு முன்னாள் 8 km தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் vaitheeswaran kovil உள்ளது . இவூரின் பேருந்து நிலையத்தில் இருந்து 5 km அருகில் திருஇந்தளூர் என்ற ஊரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் உள்ளது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை . ph : 04364-223779,222345
for more details please click following link
No comments:
Post a Comment