Showing posts with label vriddhachalam near temple. Show all posts
Showing posts with label vriddhachalam near temple. Show all posts

25.10.17

Kolanji Appar Temple(Murugan Temple)- Manavalanallur-Vriddhachalam

கொளஞ்சி அப்பர் கோவில் (முருகன் )---
விருத்தாச்சலம் 

அருள்மிகு கொளஞ்சியப்பர் சந்தன அலங்காரத்துடன் 


தல பெருமை :

நடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றான 'திருமுதுகுன்றம் 'என்னும் விருதாச்சலத்திற்கு அருகில் கடும் பூவும் நிறைந்த புள்ளினங்கள் ,வண்டினங்களும் இசைபாடும் இதைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது .'குரங்கு உலாவும் குன்றுறை மணவாள 'என்று அருணகிரிநாதர் அருளியதால் கந்தன் எழுந்தருளிய காரணத்தால் மணவாளநல்லூர் என்று அழைக்க படுகிறது .

இன்றைய கந்தசஷ்டி கடைசி நாளான சூரசம்ஹார நாளன்று இந்த கந்தனை பற்றி எழுத எனக்குள் உந்துதலை என் கருணை வடிவான கந்தன் ஏற்படுத்தியதை நான் என்னவென்று சொல்லுவேன் .

சுயம்புவாக கொளஞ்சியப்பன் :

தந்தையை போல் தானும் அருவுருவமாய் காட்சி தரும் தலம் மணவாளநல்லூர் .ஒரு காலத்தில் கொளஞ்சி மரங்கள் அதிகமாக இருந்த பகுதி ,ஒரு சமயம் சில சிறுவர்கள் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டி வந்தபோது ஒரு பசு மட்டும் தினமும் ஒரு புதருக்குள் ஆடாமல் அசையாமல் நிற்பதை கவனித்த சிறுவர்கள் அந்த இடத்தை சென்று பார்க்கும்போது பசு அங்கு இருந்த ஒரு கருங்கல் பீடத்துக்கு தானாகவே பால் சொரிவதை கவனித்தனர் . உடனே அவர்கள் ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அந்த சுயம்புவாக தோன்றிய இடத்தில் கோவில் எழுப்பி வழிபட தொடங்கினர் .கொளஞ்சி வனத்தில் தோன்றியதால் 'கொளஞ்சியப்பர் 'என்ற திருப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார் .


திருத்தல வரலாறு 

சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்தபோது ,விருத்தாச்சலம் திருத்தல வரலாற்றில் 'தம்பிரான் தோழன் 'என்று சொல்லக்கூடிய சுந்தரமுர்த்தி நாயனார் தில்லை இருந்து பதிகம் பாடி 
விருத்தாச்சலம் அடையும் போது ஊர் மற்றும் சுவாமி பெயர்களை கேள்வியுற்று முதுமை தன்மை வாய்ந்த இவர்களால் போன் ,பொருள் கிடைக்காது என கருதி பாடாமல் சென்ற போது திருமுதுகுன்ற ஈசனாகிய பரம்பொருள் அவரிடம் விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் 
'சுந்தரர் மதியாது செல்வதால் அவரை எமதிடத்திற்கு வருவிக்க செய் ' என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் என்று தெரிய வந்தது .அதன்படி விருத்தாச்சலம் நகருக்கு மேற்கு திசையில் முருகன் தான் பலிபீட உருவில் அமைந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டது .

திருத்தல பெருமை மற்றும் பிராது கட்டுதல் :

பிராது கட்டும் இடம் 


இத்திருத்தலத்தில் முருகர் நீதிபதியாகவும் வைத்தியராகவும் அருள்புரிகிறார் .அதன்படி பக்தர்கள் தங்களுடைய கஷ்டங்களையும் ,நியாயமான கோரிக்கைகளையும் எழுத்து மூலமாக சுவாமிக்கு பிராது செலுத்தி செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் முழுவதுமாக நிவர்த்தி பெறுவதும் ,கோரிக்கை நிறைவேறியவர்கள் பிராத்தனை திரும்ப பெற்றுக்கொள்வதும் அன்றாடம் நடந்து வருகிறது .

பிணி தீர்க்கும் வேப்பஎண்ணெய் :

கை கால் வலி உள்ளவர்கள் ,தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம் ,அரை மண்டலம் என தங்கி கொளஞ்சியப்பரை தரிசித்து அவரது சன்னதியில் பூஜித்து வழங்கும் வேப்பஎண்ணெயினை உடம்பில் பூசியும் ,அருந்தியும் குணமடைந்து வருகின்றனர் .

சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் :



முருகருக்கு அருகிலேயே சித்தி விநாயகருக்கும் தனிவிமானதுடன் கூடிய கருவறை உண்டு இவர் பெரிய திருமேனியுடன் காட்சி அளிப்பார் .இவருக்கு நேர் எதிரே இரண்டு பெரிய கம்பிரமான குதிரை உள்ளது .மற்றும் முனியப்பர் ,வீரனார் ,இடும்பன் ஆகியோர் சன்னதி கொண்டு இருக்கின்றனர் .முனியப்பர் நேரே நிறைய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

அமைவிடம் :

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் உள்ளது . விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நல்லூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் 10 நிமிடங்களில் சென்றுவிடலாம் .

If you need further details in English please click following link

12.8.17

Vilvaneswarar temple-Nallur

பிரகன்நாயகி உடனுறை வில்வனேஸ்வர் ஆலயம் - நல்லூர் 



நான் ஆலயங்களை பற்றி எழுத ஆரம்பிக்கும்போது நான் முதலில் எழுதவேண்டிய ஆலயம் இது . ஏனென்றால் நான் பிறந்து வளர்த்த ஊரின் ஆலயம் இது .எனக்குள் கடவுளின் மேல் நம்பிக்கையும் ஆர்வமும் கிட்டிய தலம் .நான் முதன் முதலில் வணங்கிய எம்பெருமான் என் அம்பலத்தானின் திருமுகம் கண்ட தலம் .

விருத்தாசலம் -வேப்பூர் சாலையில் சென்று கண்டப்பங்குறிச்சி சென்று வடக்கில் நான்கு கிமி செல்லவேண்டும்.கடலூர் மாவட்டத்தில் அமைந்த நல்லூர் என்ற ஊர் ஆகும் . இவ்வூருக்கு 
 தனி சிறப்பு தருவது  மூன்று நதிகள் கூடுமிடமாக அமைந்துள்ளது என்பதே,இந்தத் திருத்தலத்தையொட்டி ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு , கோமுகி நதியும் கிழக்கு நோக்கி பாய்கின்றன . ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தலம் நல்லூர். 


              நல்லூர் வில்வவனேஸ்வரர் ஆலயம் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் மேட்டுப் பகுதியான இடத்தில வட மேற்கே அழகுற அமைந்துள்ளது 
  திருக்கோவிலில் கருவறை,அர்த்தமண்டபம் , மகாமண்டபம் ,முகமண்டபம் 



மகா  மண்டபம்:


                இம்மண்டபம் சோழர்கால தூண்களை கொண்டுள்ளது ,தூண்களில் வடக்குபுறம் ஒரு தூணில் கல் வெட்டு காணப்படுகிறது.

                     "ஸ ஸ்  ஸ்ரீ தனித்த 
                      யாண்ட பஞ்சசதி 
                      தகன அறுபடை 
                      யான சுந்தரபட்ட
                      நான தில்லைநாயக 
                      வேளான் "

என்று வெட்டப்பட்டுள்ளது , சுந்தர பட்டனான தில்லை நாயக வேளான் கட்டி வைத்த மண்டபக இருக்ககூடும் , தூண்களும் மண்டப அமைப்பும், கட்டடக் கலைத்திறனும் ஒப்பு நோக்கும் போது இவை சோழர் காலத்திய கலை முறை என்பதை உணர முடிகிறது. மேலும் இம்மண்டபம் மூன்று பக்கங்களிலும் திறந்த நிலையிலும் ,விதானத்தில் மீனின் பெரிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது .


                  கல்வெட்டுக்களை ஒப்புநோக்கும் போது இங்கு சோழர்களும், பாண்டியர்களும்,விசயநகர மன்னர்களும் இப்பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் அரசாண்டாமை புலனாகின்றது.இவற்றில் இக்கோயில் மூலத்தானம் முதல் மகா மண்டபம் வரையில் சோழர்கால கலைப்பணியாக திகழ்கின்றது. கோபுரம் ,முக மண்டபம் பிற பிற்க்காலத்திய பணிகளாக தோன்றுகிறது.ற அமைப்புடன் அமையபெற்றுள்ளது.
               நுழைவு வாயிலில் கோபுரமும்,  முன்மண்டபங்களும், 
திருமண மண்டபம் காணப்படுகிறது .நந்தி மண்டபம் இறைவனை நோக்கி எழுப்பட்டுள்ளது .

இறைவன் கிழக்கு  நோக்கியும் அவரது இடது புறத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். 

வடக்கு திசை நோக்கிய முருகன் :

இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக  உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. 

முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம். 
கருவறை சுற்றி சுற்றாலை மண்டபங்கள் உள்ளன அதில் அறுபத்து மூவர் உள்ளனர். பின் புறம் பிராண தியாகர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி உள்ளனர். 

 கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவபெருமாள், பிரமன், துர்க்கை உள்ளனர் அது போல் இறைவியின் கருவறை சுற்றி ஞானசக்தி, கிர்ரியாசக்தி, பிரம்மா சக்தி என சிலைகள் உள்ளன.  இறைவியின் முகப்பு மண்டபம் ஒட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியுள்ளார்.

 இறைவியின் எதிரிலும் இறைவனின் எதிரிலும் தனி தனி கொடிமரங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சூரியன் உள்ளன. 

இக்கோயில் கடக ராசி உள்ளவர்கள் பார்த்து அருள் பெறவேண்டிய தளம் .ஒரு காலத்தில் வில்வமரங்கள் உள்ள காடுகளுக்கு நடுவே எம்பெருமான் உள்ளதால் இவருக்கு வில்வனேஸ்வர் என்ற பெயர் கிட்டியது .இன்றும் ஊருக்கு வெளியே சுற்றிலும் ஆறுகளால் சூழப்பட்டு நிறைய மரங்களுக்கு இடையே ரம்யமாக அமைதியாக காட்சி அளிப்பார் .

இந்த கோவிலில் மாசி மகம் ஆறாம் நாள் திருவிழா ரொம்ப விசேஷமானது .திருவட்டத்துறையில் 5 ஆம் நாள் திருவிழாவும் ,ஆறாம் நாள் திருவிழாவின் காலை விருதாச்சலத்திலும்  இரவு  இங்கேயும் வரிசையாக காண்பவர்கள் காசிக்கு போய் கிட்டும் புன்னியம் கிட்டுவதாக ஐதீகம் .அதுபோல் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாழ்ந்தது .இங்கு பஞ்ச பாண்டவர்கள் தங்கி ஈசனை வணங்கியதாக சொல்லப்படுகிறது .

அம்பாள் பாலாம்பிகை வேண்டினாள் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு . உங்களுக்கு கடலூர் மாவட்டம் செல்லும் நேரம் கிடைத்தால் இந்த கோவில் , மிக அருகில் உள்ள விருதை,கொளஞ்சியப்பர் ,ஸ்ரீமுஷ்ணம் வராகர் இவைகளையும் சேர்த்து பார்க்கலாம் .

இறைவன்- வில்வனேஸ்வரர் 
 இறைவி- பிரகன்னாயகி

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...