அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் , கோயம்பேடு
மூலவர் : குறுங்காலீஸ்வரர்
தாயார் : ஸ்ரீ தர்ம சம்வர்தனி
விருச்சகம் : வில்வம்
கோவில் சிறப்பு :
* வடக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோவில் ஆதலால் மோட்ச தலமாக கருதப்படுகிறது . பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார தளம் ஆகும்.
* அம்பாள் தன் இடது காலை முன் வைத்த வண்ணமாக காட்சியளிக்கிறார்
* அம்மன் சன்னதி தூணில் ஜூகுணு மஹரிஷி திருவுருவம் இருப்பது சிறப்பு
* நூதன பஞ்சவர்ண நவகிரக சன்னதி ஒன்று சதுர மேடையில் தாமரையை ஓதவடியில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .
* தாமரை நடுவில் சூரியன் தன் மனைவி உஷா மற்றும் ப்ரதுஷ்டா உடன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் நிற்கிறார் . தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளை பிடித்தபடி சாரதியாய் இருக்கிறரர் .
* இங்குள்ள தூண்களில் ராமாயண காட்சிகள் மிக அழிகிய வேலைப்பாடுடன் செதுக்கப்பட்டுள்ளது .
* கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தூணில் சரபேஸ்வரர் வீற்றியுள்ளார் . அவருக்கு ஞாயிறு கிழமை ராகு காலத்தில் சிறப்பான பூஜை நடைபெறுகிறது .
* லவன் ,குசன் பிறந்து விளையாடிய இடம் மற்றும் ராமன் சீதைக்காக அஸ்வமேதை யாகம் நடத்திய குதிரையை லவன் மற்றும் குசன் இங்குதான் கட்டி போட்டதாகவும் அதை மீட்க ராமன் அவர்களிடம் போரிட்டதாகவும் வால்மீகி அவர்கள் அதை தடுத்து இவர் தான் உங்களுடைய தந்தை என்று லவன் ,குசேலனிடம் சொன்னார் ஆதலால் பித்ரு தோஷம் போக்க ராமர் இவ் சிவனை வணங்கி பித்ரு தோஷம் போக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
* இக்கோவிலின் அருகிலேயே வைகுண்டவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது இவூரின் சிறப்பு .
* கோ என்ற அரசன் ராமன் குதிரைகளை அயம் என்ற இரும்பு வேலியில் கடியதுதான் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது பேடு என்றால் வேலி என்று பொருள் .
அமைவிடம் :
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பாலம் அருகில் உள்ளது . மற்றும் கோயம்பேடு மார்க்கெட் அருகில் உள்ளது .காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரை , மாலை 4 மணி முதல் இரவு 8.45 வரை கோவில் திறந்திருக்கும் .
If you need English please click
No comments:
Post a Comment