4.5.12

கரு(ல்)அறை

கரு(ல்)அறை

என் அம்மாவின் கருவறையே
எனது இனிய இல்லம் !

அவளின் தொப்புள் கொடியே
எனக்கு தூலி!

அவளின் சுவாசமே 
எனக்கு உணவு !

அவளின் கணவுகளே
எனக்கு உயர்மூச்சு !

அவளின் சிரிப்பே  
எனக்கு பலம் !

பத்து மாதம் கழிந்து பத்திரமாய் வந்தேன்
அம்மாவின் வயிற்றிலிருந்து...!

வெளிச்சத்திற்கு  வந்தேன் 
அவள் என்னை கொன்று 
அவள் வெளிச்சமானாள்...!

இதில் எனது குற்றம் 
நான் பெண்ணாய் பிறந்ததாலா!

இந்த சமூகத்தின் பிழையில் 
எனது மரணம் தான்
தீர்வா !!

எனது கருவறை யி ன் 
கண்ணீர் அவர்களை 
திருத்தட்டும்!! 

10.4.12

நினைவின் எச்சங்கள்

டெண்டுகொட்டகை

அப்ப எல்லாம் நாம படம் பாக்க போறதுனால ஒரே கொண்டாட்டம்தான் .50 பைசா கொடுத்து தரைல மண்ணை குவிச்சி
அது மேல   உட்காந்து விசில் அடிச்சிக்கிட்டு எதிர்
உள்ளவங்க  மண்ணை  எல்லாம் சரிசிவிட்டு படம் பார்க்குறது ஒரு இண்பமான அனுபவம் .
படம் பாக்கும் போது  முறுக்கு எல்லாம் வாங்கி தின்றுகொண்டு படம் பாப்போம். இப்ப அந்த டெண்டுகொடகை எல்லாம் காணாமல் போயிடிச்சு.

18.4.11

எனது சிதறல்கள் !!

எனது சிதறல்கள் !!

இறப்பு
ஒரு தலை காதலர்களின்
வழிகாட்டி!

சோகம் -
தோல்வின் பிம்பம் !

கவிதை
மனதின்
திரைக்கதை!

விதவை
சமுதாயத்தில்
தலையாட்டும்
பேதைகள் !

வறுமை
ஏழைகளின் மரபு சொத்து !

தாய்மை
பெண்களின்
வரப்ரசாதம்
கடவுளின்
மறுபிறவி !

கண்ணாடி
நிலையில்லலாததை
அழகு செய்ய
துணை போகும்
குற்றவாளி !

ஹைக்கூ
என்னை பார்த்து
கண்சிமிடிகொண்டே  இருக்கிறது
எங்கள் தெரு
மின்விளக்குகள் !






8.4.11

ஊழலுக்கு எதிராக ஒரு புரட்சி

ஊழலுக்கு  எதிராக ஒரு புரட்சி !

ஹசாரா காந்திய வாதி மேற்கொள்ளும்  இந்த ஊழலுக்கு எதிரான அஹிம்சை போராட்டம்
நம் நாட்டின் இளைய சமுதாயத்திற்கு ஒரு புத்துனர்ச்சியை தருகிறது .நம் நாட்டின் ஊழலுக்கு  எதிராக
சட்டங்கள் கடுமையாக இல்லை . அரசியல்வாதிகளுக்கும் பணக்கரர்களுக்கும் நம் நாட்டில் அதிக அளவில்
ஊழல் செய்துள்ளார்கள் .அவர்களை தண்டிக்க நம் சட்டத்தில் இடமில்லை .ஆனால் ஒரு பாமரன் செய்தால்
உடனே அவனுக்கு நம் சட்டம் தண்டனை தருகிறது .லோக்பால் சட்டத்தை அவர் கூறியதுபோல் மாற்றம் செய்து உடனே அமலுக்கு வரவேண்டும் .நம் நாட்டை ஊழல் இல்லாத நாடாக மாற்றுவோம் .ஜெய் ஹிந்த் !!

1.3.11

vazipokkan: அவள் இல்லாத தெரு .

vazipokkan: அவள் இல்லாத தெரு .: "அவள் இல்லாத தெரு . மரங்கள் காதலை மறந்து இலைகளை உதிர்கின்றன ...! உன் கைப்படாத உதிரிப் பூக்கள் மிதிப்பட்டு குருதி சிந்துகின்றன ......"

அவள் இல்லாத தெரு .

அவள் இல்லாத தெரு .

மரங்கள்
 காதலை மறந்து
இலைகளை
உதிர்கின்றன ...!

உன் கைப்படாத
உதிரிப் பூக்கள்
மிதிப்பட்டு
குருதி சிந்துகின்றன ....!

எதிர் கடையில்
எருதுகளின்
கனவுகள்
சாக  கிடைக்கின்றன...!

தெருவில் வீசும்
தென்றலில்
பிண வாடை
வீச தொடங்கிவிட்டன ...!

நீ வராதலால்
அடிபம்புகள்
கண்ணீரைத்தான்
அள்ளித்தருகின்றன....!   

4.2.11

என் நேசமிகு பாரதமே ...?

வண்டுகள் ரீங்காரமிடும்
வானங்களையும்
வளங்களையும் கொண்ட
என் நேசமிகு பாரதமே ...?

தன்னலத்திற்காக உன்
தங்க மேனியை
சுரண்டும்
அரசியல்வாதிகளை கொண்ட
என் நேசமிகு பாரதமே ...?

சாதி என்ற
சாக்கடை இல்
கல்லெறிந்து
கலகத்தை உண்டாக்கும்
கருணை நெஞ்சங்களை கொண்ட
என் நேசமிகு பாரதமே ..

உன்ன உணவு இல்லாமல்
வறுமையால் நாள்தோறும்
உயிரை வருத்திக்கொள்ளும்
வறண்ட வயற்றை கொண்ட
என் நேசமிகு பாரதமே ...?

இவைகளை கண்டு
எழுதமட்டும் தெரிந்த எனக்கு
எழுச்சி செய்ய
வல்லமைத் தாராயோ !
என் நேசமிகு பாரதமே ...?

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...