4.2.11

என் நேசமிகு பாரதமே ...?

வண்டுகள் ரீங்காரமிடும்
வானங்களையும்
வளங்களையும் கொண்ட
என் நேசமிகு பாரதமே ...?

தன்னலத்திற்காக உன்
தங்க மேனியை
சுரண்டும்
அரசியல்வாதிகளை கொண்ட
என் நேசமிகு பாரதமே ...?

சாதி என்ற
சாக்கடை இல்
கல்லெறிந்து
கலகத்தை உண்டாக்கும்
கருணை நெஞ்சங்களை கொண்ட
என் நேசமிகு பாரதமே ..

உன்ன உணவு இல்லாமல்
வறுமையால் நாள்தோறும்
உயிரை வருத்திக்கொள்ளும்
வறண்ட வயற்றை கொண்ட
என் நேசமிகு பாரதமே ...?

இவைகளை கண்டு
எழுதமட்டும் தெரிந்த எனக்கு
எழுச்சி செய்ய
வல்லமைத் தாராயோ !
என் நேசமிகு பாரதமே ...?
Post a Comment

Sri Thyagaraja swamy, vadivudaiyambigai Temple- Thiruvottiyur

அருள்மிகு வடிவுடையாம்பிகை உடனுறை தியாகராஜர் சுவாமி திருக்கோயில் - திருவொற்றியூர்  முகப்பு கோபுரம்  மூலவர் - படம்பக்கநாதர...