கரு(ல்)அறை
என் அம்மாவின் கருவறையே
எனது இனிய இல்லம் !
அவளின் தொப்புள் கொடியே
எனக்கு தூலி!
அவளின் சுவாசமே
எனக்கு உணவு !
அவளின் கணவுகளே
எனக்கு உயர்மூச்சு !
அவளின் சிரிப்பே
எனக்கு பலம் !
பத்து மாதம் கழிந்து பத்திரமாய் வந்தேன்
அம்மாவின் வயிற்றிலிருந்து...!
வெளிச்சத்திற்கு வந்தேன்
அவள் என்னை கொன்று
அவள் வெளிச்சமானாள்...!
இதில் எனது குற்றம்
நான் பெண்ணாய் பிறந்ததாலா!
இந்த சமூகத்தின் பிழையில்
எனது மரணம் தான்
தீர்வா !!
எனது கருவறை யி ன்
கண்ணீர் அவர்களை
திருத்தட்டும்!!
No comments:
Post a Comment