Showing posts with label kids lunch box. Show all posts
Showing posts with label kids lunch box. Show all posts

14.8.17

Kids Lunch Box- Beetroot Briyani

பீட்ரூட் பிரியாணி (Beetroot briyani)

தேவையான பொருள்கள் :

பாசுமதி அரிசி -200 gm 
பீட்ரூட் -1
கரம் மசாலா பொடி 
லவங்கம் ,பட்டை ,முந்திரி ,பிரிஞ்சி இலை ,அன்னாசி பூ 
நெய் -1 spoon 
எண்ணெய் தேவையான அளவு 
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது 

அளவு : நான்கு பேருக்கு 
காலம் : 20 நிமிடம் 

செய்முறை :
முதலில் பாசுமதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் . பீட்ரூட்டை திருவி வைக்கவேண்டும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் லவங்கம், பட்டை, அன்னாசி இலை, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பிறகு அதில் வெங்காயம் போட்டு வதக்கவேண்டும் இதனுடன் தேவையான உப்பை சேர்த்து கிளரவேண்டும், பாதி வதங்கியதும்  இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்ச வாசனை போகும்வரை வதக்க வேண்டும் பின்பு  கரம்மசாலா மற்றும் தனி மிளகாய் பொடி  (தேவைப்பட்டால்) போட்டு வாசனை போகும் வரை வதக்க வேண்டும், அதனுடன் துருவிய பீட்ரூட் போட்டு வதக்க வேண்டும் சிரிது  நேரத்தில் பாசுமதி அரிசியை போட்டு கிளரவேண்டும் பின்பு 1 டம்பளர் அரிசிக்கு 1 1/2 டம்பளர் என்ற கணக்குக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட வேண்டும் .இரண்டு விசில் வந்தவுடன் குக்கரை அணைத்து விடவேண்டும் ,ஆவி முழுவதும் இறங்கியவுடன் நெய்யில் முந்திரி தாளித்து அதில் போடவேண்டும் . இப்பொது குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் பிரியாணி ரெடி .


குழந்தைகள் பீட்ரூட் பொரியல் செய்து கொடுத்தால் சாப்பிடாது ஆனால் இதை விரும்பி சாப்பிடும் . பீட்ரூட் உடம்புக்கு ரொம்ப நல்லது மற்றும் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ரத்த சோகையிலிருந்து காப்பாற்றும் . வாரத்தின் ஒரு நாள் இதை குழந்தைகளுக்கு கொடுங்கள் .

1.8.17

Brinjal rice for kids ( kathirikai satham )

குழந்தைகளுக்கான கத்திரிக்காய் சாதம்


 

தேவையான பொருட்கள் :

 வடித்த சாதம் -1 கப் 
பிஞ்சி கத்திரிக்காய் - 5
தக்காளி -1 
பெரிய வெங்காயம் -1
கடலைப்பருப்பு - 1 spoon 
உளுத்தம்பருப்பு -1 spoon 
கடுகு - தேவையான அளவு 
உப்பு -தேவையான அளவு 
கரம்மசாலா - 1 spoon 

செய்முறை 

முதலில் சாதத்தை வடித்து தனியாக  எடுத்து கொள்ளவும் .  வாணலில் 3 spoon  எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதனுடன் கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு போட்டு சிவந்தவுடன் வெங்காயம் போட்டு சிவக்கும் வரை வதக்கவும் அதனுடன் தக்காளி ,நறுக்கிய கத்திரிக்காய் போட்டு  நன்றாக வேகும் வரை வதக்கவும் பின்பு அதனுடன் கொஞ்சம் கரம்மசாலா தூள் மற்றும் தேவையான உப்பை போட்டு கிளறவும் ,இந்த கலவையுடன் வடித்த சாதத்தை போட்டு கிளறவும் அப்போது அடுப்பு சிம்மில் இருக்கவேண்டும் . இதனுடன் கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும் . இப்போது குழந்தைகளுக்கு பிடித்த கம கம கத்திரிக்காய் சாதம் ரெடி . கரம்மசாலா போட்டு உள்ளதால் குழந்தைகள்  அந்த மணத்தை பிடித்தே சாப்பிட்டுவிடுவார்கள் .  

28.7.17

Kadappa Sambar is the best side dish for Idli and Dosa

கடப்பா சாம்பார் (இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்கொள்ள )





கும்பக்கோணம் மற்றும் தஞ்சை பகுதிகளில் இந்த கடப்பா சாம்பார் ரொம்ப பிரபலம் .ஒரு முறை நான் என் உறவினர் திருமணத்திற்கு சென்றபோது அன்று காலை டிபன் இட்லி மற்றும் தோசைக்கு இதை தொட்டுக்கொள்ள ஊற்றினார்கள் .மிகவும் சுவையாக இருந்தது உடனே அதை எவ்வாறு செய்யவேண்டும் என்ற ஆவல் என்னுள் ஏற்பட்டது அதை தெரிந்தவர்களிடம் கேட்டு என் வீட்டில் அதை செய்துபார்த்து என் குழந்தைகளுக்கு இட்லிக்கு தொட்டுக்கொள்ள கொடுத்தேன் அவர்கள் அதை குருமா மாதிரி வர்ணமும் நல்ல ருசியாக உள்ளது என்று விரும்பி உண்டார்கள் . நான் அதை எப்படி செய்யவேண்டும் என்பதை இங்கே கொடுத்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் செய்துபாருங்கள் .

காலம் - 15 நிமிடங்கள் 
அளவு - 4 நபர்களுக்கு 












தேவையான பொருட்கள் 

* பாசி பருப்பு - 50 gm 
* உருளை கிழங்கு -1 
*  சின்ன வெங்காயம் -10 or பெரிய வெங்காயம் -1
* பூண்டு -15 பல் 
* கேரட் -1
* பொட்டுக்கடலை -2 spoon 
* சோம்பு -1 spoon 
* கச கசா  - 1/4 spoon 
* பச்சை மிளகாய் -5
* இஞ்சி -1 inch 
* தேங்காய் துருவியது (1/4 மூடி )
* பட்ட ,சோம்பு ,பிரியாணி இலை ,அன்னாசி பூ 
* தக்காளி -1
* எலுமிச்சை 1/2 பழம் 
* புதினா , கொத்தமல்லி இலை 

பாசி பருப்புடன் உருளை கிழங்கை சேர்த்து வேக வைக்கவும் பின்பு உருளை தோலை உரித்து பருப்புடன் மசித்து வைத்துக்கொள்ளவும் .





 முதலில் எண்ணெயுடன் பொட்டுக்கடலை மற்றும் பச்சை மிளகாயை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும் பின்பு அதனுடன் சோம்பு ,கச கசா ,தேங்காய்,இஞ்சி ,பூண்டு-5 பல் ,எலுமிச்சை சாறு சேர்த்து மிக்சியில் பேஸ்டாக அரைத்து வைத்து கொள்ளவும். இதை அந்த நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும் இல்லையெனில் வர்ணம் மாறிவிடும் .

வாணலியில் எண்ணெயை விட்டு பட்டை ,அனாசி பூ ,பிரியாணி இலை போட்டு பின்பு வெங்காயம்,தக்காளி,பூண்டு போட்டு வதக்க வேண்டும் பின்பு அரைத்த விழுதை போட்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும் . பின்பு மசித்து வைத்த பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு  கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்தவுடன் புதினா , கொத்தமல்லி போட்டு இறக்கி வைத்து சுட சுட இட்லி அல்லது தோசைக்கு ஊற்றி சாப்பிடவும்.




Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...