கடப்பா சாம்பார் (இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்கொள்ள )
கும்பக்கோணம் மற்றும் தஞ்சை பகுதிகளில் இந்த கடப்பா சாம்பார் ரொம்ப பிரபலம் .ஒரு முறை நான் என் உறவினர் திருமணத்திற்கு சென்றபோது அன்று காலை டிபன் இட்லி மற்றும் தோசைக்கு இதை தொட்டுக்கொள்ள ஊற்றினார்கள் .மிகவும் சுவையாக இருந்தது உடனே அதை எவ்வாறு செய்யவேண்டும் என்ற ஆவல் என்னுள் ஏற்பட்டது அதை தெரிந்தவர்களிடம் கேட்டு என் வீட்டில் அதை செய்துபார்த்து என் குழந்தைகளுக்கு இட்லிக்கு தொட்டுக்கொள்ள கொடுத்தேன் அவர்கள் அதை குருமா மாதிரி வர்ணமும் நல்ல ருசியாக உள்ளது என்று விரும்பி உண்டார்கள் . நான் அதை எப்படி செய்யவேண்டும் என்பதை இங்கே கொடுத்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் செய்துபாருங்கள் .
காலம் - 15 நிமிடங்கள்
அளவு - 4 நபர்களுக்கு
தேவையான பொருட்கள்
* பாசி பருப்பு - 50 gm
* உருளை கிழங்கு -1
* சின்ன வெங்காயம் -10 or பெரிய வெங்காயம் -1
* பூண்டு -15 பல்
* கேரட் -1
* பொட்டுக்கடலை -2 spoon
* சோம்பு -1 spoon
* கச கசா - 1/4 spoon
* பச்சை மிளகாய் -5
* இஞ்சி -1 inch
* தேங்காய் துருவியது (1/4 மூடி )
* பட்ட ,சோம்பு ,பிரியாணி இலை ,அன்னாசி பூ
* தக்காளி -1
* எலுமிச்சை 1/2 பழம்
* புதினா , கொத்தமல்லி இலை
பாசி பருப்புடன் உருளை கிழங்கை சேர்த்து வேக வைக்கவும் பின்பு உருளை தோலை உரித்து பருப்புடன் மசித்து வைத்துக்கொள்ளவும் .
முதலில் எண்ணெயுடன் பொட்டுக்கடலை மற்றும் பச்சை மிளகாயை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும் பின்பு அதனுடன் சோம்பு ,கச கசா ,தேங்காய்,இஞ்சி ,பூண்டு-5 பல் ,எலுமிச்சை சாறு சேர்த்து மிக்சியில் பேஸ்டாக அரைத்து வைத்து கொள்ளவும். இதை அந்த நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும் இல்லையெனில் வர்ணம் மாறிவிடும் .
வாணலியில் எண்ணெயை விட்டு பட்டை ,அனாசி பூ ,பிரியாணி இலை போட்டு பின்பு வெங்காயம்,தக்காளி,பூண்டு போட்டு வதக்க வேண்டும் பின்பு அரைத்த விழுதை போட்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும் . பின்பு மசித்து வைத்த பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்தவுடன் புதினா , கொத்தமல்லி போட்டு இறக்கி வைத்து சுட சுட இட்லி அல்லது தோசைக்கு ஊற்றி சாப்பிடவும்.
No comments:
Post a Comment