சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
அருள்மிகு நெல்லையப்பரும் அருள்தரும் காந்திமதி அம்மனும் .
தாமிர சபை. (திருநெல்வேலி.)
திருவாதிரைத் திருநடனம்.
இந்தத் திருநடனக் காட்சி ஒவ்வொரு ஆண்டும் தாமிர சபையில் மார்கழி மாதத் திருவாதிரை நன்னாளில் வெகு விமரிசையாக நடந்தேறி வருகிறது.
நடராஜப் பெருமானின் ஐந்தொழிலையும் தனித்தனியாகச் செய்யும் தாண்டவங்களையும்,அவற்றை அவர் இயற்றிய இடம் பற்றியும் *திருப்பத்தூர் புராணத்தில்* நீங்கள் அறியப்படலாம்.
*"தாமிர சபையில் தேவதாருவன நெல்வேலி*
*ஆம்பிர பலதலத்தில் ஆற்றதும் முனிநிருத்தம்"* என இருக்கிறது.
இதுதான் படைத்தல் தொழிலைக் கூறும் தாண்டவமாகும்.
இந்தத் தாமிர சபையினில், அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் இரண்டாவது திருச்சுற்றில் தெற்குப் பார்த்த வண்ணம் அமைந்திருக்கிறது.
கல்லாலான பீடத்தின் மீது, மரத்தாலான மண்டபத்தை நிருத்தப் பட்டு, இதனின் மேற்கூறையில் தாமிரத் தகடுகளால் பதிக்கப்பட்டுள்ளன.
பிரமிடுபோல கூம்பு வடிவத்தில் தோற்றம் உடையவை இவை.
தாமிர சபையின் பின்புறமாக சந்தன சபாபதி சந்நிதி அமைந்துள்ளது.
இங்கே மூலவராக நடனத் திருக்கோலத்தில் சந்தன சபாபதி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இவரின் திருநடனம் தை, வியாக்கியானம், பதஞ்சலி, காரைக்கால் அம்மையார் ஆகியோர் கண்டுகளிக்கின்றனர்.
சந்தன சபாபதி கண்களும் பூசப்படும் சந்தனமானது, சித்திரைத் திருவோணம்,ஆனி உத்திரம், ஆவனி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி, மார்கழித் திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தி ஆகிய ஆறு சந்தர்ப்பங்களில் களையப்பட்டு புதியதாக மீண்டும் பார்க்கப்படுகிறது
தாமிரசபையில் எழுந்தருளியிருக்கும் சந்தன சபாபதிக்கு ஆறு அபிசேக நாட்கள் நடக்கின்றன.
1.மார்கழித் திருவாதிரை--உஷத்கால பூசை.
2.மாசி-சுக்ல பட்ச சதுர்த்தி-- காலசந்தி பூசை.
3.சித்திரை-திருவோணம்-- உச்சிகால பூசை.
4.ஆனி-உத்தர நட்சத்திரம்-- சாயங்கால பூசை.
5.ஆவணி-சுக்கிலபட்ச சதுர்த்தி-- இராத்திரி சந்தி பூசை.
6.புரட்டாசி-சுக்கிலபட்ச சதுர்த்தி-- அர்த்தயாம பூசை.
தாமிர சபையின் முன்புறமான இல்லாதான் ஒரு மண்டபம் இருக்கிறது.
இம்மண்டபத்தின் மேற்கூறையானது, வளைவான ஆர்ச் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது, கட்டுமானப் பொருட்கள் எவைகளையும் பயன்படுத்தப்படாமல் முட்டுக் கொடுத்து நிறுவியிருக்கிறார்கள்.
இம்மண்டபத்தின் தூண்களின் கீழ்புறம் அமைந்துள்ள யானை சிற்பங்கள்தான் இம்மண்டபத்தினைத் தாங்கி நிற்கின்றன.
மார்கழித் திருவாதிரைத் திருநாளில் தாமிர சபைக்கு எழுந்தருளும் உற்சவரான தாமிரசபாபதியின் திருநடனம் இம்மண்டபத்தில் வைத்துத்தான் நடைபெறுகிறது.
இந்தத் திருநடனக் காட்சியினை மகாவிஷ்ணு மத்தளம் வாசிப்பது போலவும், மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி முதலான இறைவர்களோடு சேர்ந்து, பதஞ்சலி, வியாக்கியானம் ஆகிய முனிவர்களும் தரிசிப்பதைப் போன்று புடைப்புச் சிற்பங்களாக இம்மண்டபத்திலிருக்கும் தூண்களில் உளிகொண்டு உயிரூட்டம் கொடுத்துள்ளனர்.
திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகிய இவ்விரண்டு நாட்களும் சிவபெருமானின் தனிச்சிறப்பான நாட்களாகும்.
திருக்கார்த்திகைத் திருநாள் சிவபெருமான் பேரொளிப் பிழம்பாய் தோன்றி அருளிய திருநாளாகும்.
இப்பிழம்பு அருவுருவத் திருமேனியைக் குறிக்கும்.
உருவத் திருமேனி கட்புலன் ஆவலோடு தீண்டவும் வாய்ப்புடையது.
ஆனால்,நெருப்பினை காண்பதல்லாமல் தீண்ட இயலாது.
உருவத்திருமேனியினின்று உருவாக முதற்கண் தோன்றிய திருவுருவு கூத்தபெருமானார் திருவுருவே!
அஃதொன்றே திருவருள் மேலிட்டால் இடையீடின்றி இயற்றியருளும் எழில் மிக்க திருத்தொழில்கள் ஐந்தினுக்கும் உரிய திருமேனியாகும்.
அத்திருமேனியைக் குறிக்கும் திருநாள் திருவாதிரை யாதும். ஆதலால், இந்நாளே உலகத் தோற்றத்தின் பொன்னாளாகும்.
திருவாதிரை நாளில் தாமிர சபையின் முன் உள்ள கூத்தபிரான் சந்நிதியில் ஒரு பசு நிறுத்தப்படும்.
இந்தச் செயல் சிவபெருமான் மீண்டும் படைத்தலாகிய சிருஷ்டித் தொழிலைக் மேற்கொள்வது ஆன்மாக்கள் பொருட்டே என்பதை உணர்த்துவதாகும்.
அப்புக்குட்டி காரானாக இருப்பது, திணிந்த இருள் போன்ற ஆணவ மலத்தில் அழுத்திய நிலையுடையன ஆன்மாக்கள் என்பதைக் குறிப்பதாகும்.
இறைவன் சந்நிதியில் அப்பசுவின் முகம் காட்டப்படாமல் அதன் பின்புறம் காட்டி நிறுத்தப்படுகிறது.
இறைவன் திருவடி இன்பத்தை விரும்பாமல் உலக இன்பத்தையே விரும்பிச் செல்லும் ஆன்மாக்களின் நிலையை இது குறிக்கிறது.
சந்நிதியில் இறைவன் அருளிய அருட்பேராக கருநிறச் சாந்து வழங்குகிறார்கள்.
உயிர்களுக்கெல்லாம் இறைவன் மலச் சார்பாகிய உலக வாழ்வைத் தந்துகொண்டிருக்கிறான் என்பதே இதைக் குறிப்பதாகும்.
மலத்திலே அழுந்திக் கிடக்கும் உயிர்களுக்கு ஈசன் தனுகரணம் முதலியவைகளை படைத்துக்கொடுத்தல் களிப்பைத் தரும்.
ஆதலால், இக்குறிப்பை உணர்த்தவே களி உண்ணத் தரப்படுகிறது.
தாமிர சபையின் மேற்கூரையில் மரத்தாலான எண்ணற்ற சிற்பங்கள் இருக்கின்றன.
அடுத்தமுறை நீங்கள் இவ்வாறு செல்ல நேரும்போது, ஆடவல்லானை அண்ணாந்து பார்த்தபிறகு, இவன் சபையின் மேற்கூறையையும் நோக்குங்கள்.
தாமிர சபையில் நடுநாயகமாக அமைந்துள்ள கல் பீடத்தில் வைத்து நடத்தப் படுகிறது.
ஆடல் வல்லானின் திருநடனக் காட்சியினை கூரையின் முதல் அடுக்கில், இறைவனின் திருமூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அடுத்திருக்கும் இரண்டாவது அடுக்கில் முனிவர்கள் நிறைய வர்கள் பார்த்து ரசிப்பது போல் இருக்கின்றன.
இந்த மரச்சிற்பங்களில் இதர திருநடன சபைகளின் சிற்பங்களும் உருவாக்கியிருக்கிறார்கள்.
கண்ணப்ப நாயனார் தனது ஒரு காலால் சிவலிங்கத்தின் கண்ணை மிதித்துக் கொண்டு குறுவாளால் தன் கண்ணைக் கொட்டும் காட்சியினையும், இதை சிவ பெருமான் தடுக்கும் காட்சியும் அற்புத சிற்பமாக செதுக்கியிருக்கிறார்கள்.
ஆலயத் தொடர்புக்கு:
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில்,
திருநெல்வேலி டவுன்,
திருநெல்வேலி-627 006.
தொலைபேசி-0462 2339910
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில்,
திருநெல்வேலி டவுன்,
திருநெல்வேலி-627 006.
தொலைபேசி-0462 2339910
நன்றி. கருப்புசாமி
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment