குழந்தைகளுக்கான கத்திரிக்காய் சாதம்
தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் -1 கப்
பிஞ்சி கத்திரிக்காய் - 5
தக்காளி -1
பெரிய வெங்காயம் -1
கடலைப்பருப்பு - 1 spoon
உளுத்தம்பருப்பு -1 spoon
கடுகு - தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
கரம்மசாலா - 1 spoon
செய்முறை
முதலில் சாதத்தை வடித்து தனியாக எடுத்து கொள்ளவும் . வாணலில் 3 spoon எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதனுடன் கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு போட்டு சிவந்தவுடன் வெங்காயம் போட்டு சிவக்கும் வரை வதக்கவும் அதனுடன் தக்காளி ,நறுக்கிய கத்திரிக்காய் போட்டு நன்றாக வேகும் வரை வதக்கவும் பின்பு அதனுடன் கொஞ்சம் கரம்மசாலா தூள் மற்றும் தேவையான உப்பை போட்டு கிளறவும் ,இந்த கலவையுடன் வடித்த சாதத்தை போட்டு கிளறவும் அப்போது அடுப்பு சிம்மில் இருக்கவேண்டும் . இதனுடன் கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும் . இப்போது குழந்தைகளுக்கு பிடித்த கம கம கத்திரிக்காய் சாதம் ரெடி . கரம்மசாலா போட்டு உள்ளதால் குழந்தைகள் அந்த மணத்தை பிடித்தே சாப்பிட்டுவிடுவார்கள் .
No comments:
Post a Comment