வாழைத்தண்டு பச்சடி (கேரளா ஸ்பெஷல் )
தேவையான பொருட்கள் :
சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்
கடுகு -1 teaspoon
தேங்காய் - 1/2 மூடி
சிகப்பு மிளகாய் -5
ப . அரிசி -1 teaspoon
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு
மஞ்சள் பொடி
பெருங்காயம்
கருவேப்பிலை
செய்முறை
புளியை நன்றாக தண்ணீர் விட்டு கரைத்து அதை வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும் அதனுடன் வாழைத்தண்டு உப்பு,மஞ்சள் பொடி
போட்டு அடுப்பில் வைத்து நன்றாக வேக வைக்கவேண்டும் .
மிளகாயை வறுத்து எடுத்து அதனுடன் தேங்காய்,அரிசி மற்றும் கடுகை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை வேக வைத்த வாழைத்தண்டு கலவையில் போட்டு நன்றாக கிளரி அது நன்றாக இரண்டு நிமிடம் கொதிக்க விடவேண்டும் .பின்பு அதில் பெருங்காயம் ,கருவேப்பிலை போட்டு இறக்கி வைத்துவிடவேண்டும் .பின்பு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து போடவும் .
இந்த பச்சடியை சுடு சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும் . கேரளா சமையலில் இது மிக சுவையான ஆரோக்யமான சாம்பாருக்கு மாற்றான உணவு ஆகும் .
No comments:
Post a Comment