பீட்ரூட் பிரியாணி (Beetroot briyani)
தேவையான பொருள்கள் :
பாசுமதி அரிசி -200 gm
பீட்ரூட் -1
கரம் மசாலா பொடி
லவங்கம் ,பட்டை ,முந்திரி ,பிரிஞ்சி இலை ,அன்னாசி பூ
நெய் -1 spoon
எண்ணெய் தேவையான அளவு
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது
அளவு : நான்கு பேருக்கு
காலம் : 20 நிமிடம்
செய்முறை :
முதலில் பாசுமதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் . பீட்ரூட்டை திருவி வைக்கவேண்டும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் லவங்கம், பட்டை, அன்னாசி இலை, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பிறகு அதில் வெங்காயம் போட்டு வதக்கவேண்டும் இதனுடன் தேவையான உப்பை சேர்த்து கிளரவேண்டும், பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்ச வாசனை போகும்வரை வதக்க வேண்டும் பின்பு கரம்மசாலா மற்றும் தனி மிளகாய் பொடி (தேவைப்பட்டால்) போட்டு வாசனை போகும் வரை வதக்க வேண்டும், அதனுடன் துருவிய பீட்ரூட் போட்டு வதக்க வேண்டும் சிரிது நேரத்தில் பாசுமதி அரிசியை போட்டு கிளரவேண்டும் பின்பு 1 டம்பளர் அரிசிக்கு 1 1/2 டம்பளர் என்ற கணக்குக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட வேண்டும் .இரண்டு விசில் வந்தவுடன் குக்கரை அணைத்து விடவேண்டும் ,ஆவி முழுவதும் இறங்கியவுடன் நெய்யில் முந்திரி தாளித்து அதில் போடவேண்டும் . இப்பொது குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் பிரியாணி ரெடி .
குழந்தைகள் பீட்ரூட் பொரியல் செய்து கொடுத்தால் சாப்பிடாது ஆனால் இதை விரும்பி சாப்பிடும் . பீட்ரூட் உடம்புக்கு ரொம்ப நல்லது மற்றும் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ரத்த சோகையிலிருந்து காப்பாற்றும் . வாரத்தின் ஒரு நாள் இதை குழந்தைகளுக்கு கொடுங்கள் .
No comments:
Post a Comment