அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்
![]() |
முகப்பு தோற்றம் |
இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசித்து உங்களுக்காக இந்த ஆலயத்தின் சிறப்புகளை அளித்துள்ளேன் நீங்கள் படித்து இறைவனின் அருளை பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறேன் .
மூலவர் : மாசிலாமணீஸ்வரர்
தாயார் : கொடியிடைநாயகி
ஆகமம் : சிவாகமம்
தல விருச்சகம் : முல்லை
ஊர் : வட திருமுல்லைவாயில்
பழமை : 2000 வருடங்களுக்கு முற்பட்டது
* தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இந்த ஆலயம் தொண்டை மண்டலத்தில் 22வது தலம் ஆகும் .இது 255வது தலமாகும்
![]() |
தொண்டைமான் சக்கரவர்த்தி |
* சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார் . தொண்டைமான் மன்னரால் வெட்டப்பட்டதால் அதை மறைக்க அவருக்கு சந்தனக்காப்பு இடப்பட்டிருக்கும் .வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று அதை எடுத்து வேறு மாற்றுவார்கள் .
* பாதரச லிங்கம் சன்னதி உள்ளது அவருக்கு எல்லாவித அபிஷேகமும் நடைபெறுகிறது .
* அம்பாள் வலது புறத்தில் வீற்றியிருப்பர் .இவர் இங்கு கிரியா சக்தியாக காட்சிதருகிறார்
* தொண்டைமான் மன்னருக்கு போருக்கு உதவி செய்வதற்காக நந்தி உடன் சென்றதால் அவர் இறைவனின் எதிர் திசையை(கிழக்கு நோக்கி ) நோக்கி வீற்றியிருப்பர்
* இங்கே சிவனே பிரதானம் என்பதால் நவகிரகத்திற்கு தனி சன்னதி இல்லை .
![]() |
கிழக்கு நோக்கிய நந்தி |
* மன்னருக்கு அவசரமாக காட்சி அளிக்க வேண்டியிருந்ததால் அம்பாள் வலதுபுறத்தில் இருப்பார் மற்றும் இருவரும் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார் .
* தேவர்களும் ,அருளாளர்களும் வணங்கிய ஆலயம்
*பைரவர் ,சூரியன் ,நக்ஷத்திரங்கள் ,வீரபத்திரர் ,நக்கிரகங்கள் இவர்களுக்கு தனி வழிபாடு கிடையாது ஏனெனில் அனைவரும் தம்வினை நீங்க இவ் பெருமானை வணங்கியதால் தனி வழிபாடு கிடையாது ,இறைவனே இங்கு எல்லாம் ஆவார் .
* பிரதோஷம் இங்கு மிக சிறப்பாக கொண்டாட படுகிறது
* வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாட்களில் திருவெற்றியூர் வடிவுடையம்மன் ,மேலூர் திருவுடையம்மன் மற்றும் இவ் ஆலயத்தின் கொடியுடையம்மன் ஆகியவர்களை மூன்று காலங்களில் வழிப்பட்டால் நல்ல பலன் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது . இவ் மூன்று ஆலயங்களையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது .
* இங்குள்ள முருகரை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்
*வசிட்டருக்கு தன் தவத்தால் காமதேனு பசு கிடைத்ததாக புராணங்கள் கூறுகின்றன .
* தொண்டைமான் மன்னன் இக் ஆலயத்தை கட்ட குறும்பர்களின் கோட்டையிலுருந்து இரண்டு வெள்ளருக்கு தூண்களை அமைத்தார் அவை இன்றும் மாசிலாமணி ஆலயத்தின் முன்னர் காணப்படுகிறது .
![]() |
கொடிமரம் |
கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் செல்லும் வழி
காலை 7.00 முதல் 12.30 வரை ,மாலை 4.30 மணி முதல் 8.30 வரை
சென்னை முதல் அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் திருமுல்லைவாயில் நிறுத்தத்தில் இறங்கி 1km செல்லவேண்டும் .மற்றும் அம்பத்தூரிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .
அருகில் உள்ள ஆலயங்கள்
திருவேற்காடு
திருவலிதாயம்
Thiruvalleswarar
Thiruvalleswarar
திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்சீருடைக் கழல்கள்என் றெண்ணிஒருவரை மதியா துறாமைகள் செய்தும்ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்முருகமர் சோலை சூழ்திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னைப்பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே
- சுந்தரர்
![]() |
தலை விருச்சகம் |
![]() |
தல தீர்த்தம் |
![]() |
முன் மண்டப சிற்பம் |
![]() |
நர்த்தன கிருஷ்ணர் |
![]() |
சிவன் |
![]() |
விநாயகர் |
![]() |
உள் பிரகார வழி |
![]() |
பல்லி சிற்பம் |
![]() |
பெருமாள் கோயில் |
![]() |
இறைவன் |