அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் - சீர்காழி
மூலவர் : சட்டைநாதர் ,பிரம்மபுரீஸ்வரர் ,தோணியப்பர்
தாயார் : பெரியநாயகி ,திருநிலைநாயகி
உற்சவர் : சோமாஸ்கந்தர்
தல விருச்சம் : பாரிஜாதம் , பவளமல்லி
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் முதலாக 22 தீர்த்தம்
* பாடல் பெற்ற தலங்களில் இது 14 வது தலம்
* திருஞானசம்பந்தர் தோன்றிய இடம்
* அம்பிகை ஞானசம்பந்தருக்கு ஞான பால் புகட்டிய இடம் இங்கு இத் திருவிழா சிறப்பாக கொண்டாட படுகிறது . திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி இங்கு உள்ளது .
* பிரம்மன் ,குரு ,கண்ணபிரான் ,ஸ்ரீகாளி ,பராசரர் ,உரோமச முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம் .
* இத்தலத்தில் சிவபெருமான் குரு ,லிங்கம் ,சங்கமம் என மூன்று மூர்த்தங்களாக விளங்குகிறார்
* இக்கோவிலில் உள்ள குன்றின் மீது பெரியநாயகி சமேத பெரியநாயகராக எழுந்தருளிருக்கும் தோணியப்பர் குரு மூர்த்தங்களாக விளங்குகிறார் .
இவரை ஞானசம்பந்தருக்கு ஞானஉபதேசம் செய்த குரு ஆவர்
* பிரம்மரால் ஸ்தாபிக்கப்பட்டதே இங்குள்ள மூலவர் பிரம்மபுரீவரர் .
* இம்மலையின் தென்புறத்தில் சட்டைநாதர் வீற்றியிருக்கிறார் .இரணியது உயிரை மாய்த்த நரசிம்மத்தை பிளந்து அதன் எலும்பை கதையாகவும் ,தோலை சட்டையாகவும் கொண்டு இங்கு காட்சி அளிப்பது சிறப்பு . இதிலிருந்து தானும் விஷ்ணுவும் வேறு இல்லை என்று உணர்த்தினார் .
தோடுடைய செவியன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென்
உள்ளம்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து
ஏத்த அருள்செய்த
பீடுடைய பிராமபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே
முகவரி மற்றும் இருப்பிடம்
சீர்காழி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது ,சிதம்பரத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .
ph - 04364-270235
திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
மலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
இங்கிருந்து 1 km அருகில் திவ்யதேசத்தில் ஒன்றான திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் உள்ளது அதன் விபரம் கீழே உள்ள link ஐ அழுத்தவும்