26.5.18

Arulmigu Ardhanareeswarar Temple- Tiruchengode

அருள்மிகு அர்த்தநாரீஸ்வர் திருக்கோவில் - திருச்செங்கோடு 

இறைவன் : அர்தநாரீஸ்வரர் / ஸ்ரீ மாதொரு பாகர் 

தாயார் :      ஸ்ரீ பாகம் ப்ரியாள் 




* திருஞானசம்பந்தரரால் பாடல் பெற்ற தலம் .
* பாடல் பெற்ற தலங்களில் 262 வது தலம் .கொங்கு மண்டல தலத்தில் 4 வது தலம் .2000 வருடம் முற்பட்டது 
* இங்கு முருகர் ரொம்ப பிரசித்தமானது .இவர் செங்கோட்டு வேலர் என்று அழைக்கப்படுகிறார் .
* மலை மேல் உள்ள கோவில் . மேலமடா வீதியில் இருந்து பார்க்கும் போது நாகம் போல் காட்சி அளிப்பதால் நாகாசலம் என்னும் பெயர் உண்டு .
* 1200 படிகள் 20 அடி பாம்பு வடிவம் ஒரு இடத்தில உள்ளது . இங்குள்ள 60ஆம் படி சத்தியத்திற்கு விசேஷமானது .இங்கு செய்யப்படும் சத்தியம் நீதிமன்றத்திலும் செல்லும் என்று கூறப்படுகிறது .
* வெள்ளை பாஷானத்தால் ஆன சுயம்பு மூர்த்தி . உளிபடாத விடங்கம் .சதுர பீடம் .
* மூலவர் லிங்க வடிவில்லாத அர்த்தநாரீஸ்வரர் . இதுவும் வெள்ளை பாஷாணம் .
* இவரை வணங்கினால் தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் .
* இவூருக்கு கோடிமாடச்செங்குன்றுர் என்ற பெயரும் உண்டு .


கோயில் திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 

அமைவிடம் மற்றும் செல்லும் வழி :

நகரின் மையத்தில் இவ் மலை அமைந்துள்ளது . மலைக்கு செல்ல கோவில் பேருந்து உள்ளது . ஈரோடு மற்றும் நாமக்கல் இருந்து பேருந்து உள்ளது .
இக் கோயிலை தரிசித்து விட்டு நாமக்கல் வந்து ஆஞ்சனேயர் மற்றும் நாமக்கல் நரசிம்மரையும் தரிசிக்கலாம் .

For brief details please refer below links.

Video link








23.5.18

Arulmigu sthala Sayana Perumal Temple, Mamalapuram

அருள்மிகு தல சயனப் பெருமாள் திருக்கோயில் 

திருக்கடல் மல்லை ( மாமல்லபுரம் )




மூலவர் - தலசயன பெருமாள் 

தாயார் - நிலமங்கை  தாயார் 

உற்சவர் - உலகுய்ய நின்ற பெருமாள் 

கோலம் -  சயனம் 

தீர்த்தம் - புண்டரீக புட்கரணி , கருட நதி 

மங்களாசனம் - பூதத்தாழ்வார் , திருமங்கை ஆழ்வார் 

* 108 திவ்யதேசங்களில் 63 வது திவ்யதேசம் ஆகும் 

* 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது 

தல வரலாறு 



புண்டரீக முனிவர் பாற்கடல் பரந்தாமனின் மீது அளவற்ற பக்தி பெருக்கால் குளத்தில் உள்ள தாமரை மலர்களை கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்க நினைத்தார் .பறித்த பூக்களை கூடையில் இட்டு கிழக்கு நோக்கி கொண்டு செல்லும் போது ,குறுக்கே கடல் இருந்தது ,பக்தி பெருக்கால் தன் இரண்டுகைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைத்தார் . அண்ணம் அகாரம் இன்றி இதையே செய்துகொண்டிருந்தார் . இதை கண்டு ஆனந்தம் ஆனந்தம் கொண்ட இறைவன் முதியவர் வேடம் இட்டு காரணம் கேட்டார் . அதற்கு புண்டரீக முனிவர் பாற்கடல் செல்ல பாதை ஏற்படுத்துவதாக கூறினார் . உடனே முதியவராக வந்த இறைவன் தனக்கு உணவு தயார் செய்து கொடுத்தால் தானும் உம்மோடு சேர்ந்து இறைப்பதாக கூறினார் . உடனே முனிவர் மகிழ்ந்து விரைவாக இரண்டு பேரும் இறைக்கலாம் என்று எண்ணி உணவு தயார் செய்ய சென்றார் ,உணவு தயார் செய்து திரும்ப வந்து பார்க்கையில் முதியவர் முகுந்தனாக சயனித்திருந்தார் . அதிர்ந்து போன முனிவர் ஆதிசேஷன் மீது கிடப்பவர் வெறும் தரையில் கிடக்கிறாரே என்று மனம் வருந்தி தான் பறித்து வைத்த தாமரை மலர்களை சமர்ப்பித்து திருவடி அருகிலேயே நிரந்தரமாக அமரும் வரத்தை பெற்றார் . இன்றளவும் இத்திருத்தலத்தில் திருவடி அருகே தாமரை மலரையும் ,புண்டரீக முனிவர் அமர்ந்துள்ளதையும் காணலாம் . தரை தலத்தில் சயனித்திருப்பதால்  "தல சயன பெருமாள் "என்று அழைக்கப்படுகிறார் .

மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிவன் ,திருமால் தலத்தையே திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்ததாக தெரிகிறது .


பூதத்தாழ்வார் 

பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் திரு அவதாரம் செய்த திருத்தலம் .

*  பெருமாள் தரை தலத்தில் சயனித்துள்ள ஒரே திவ்யதேசம் , அதனால இங்கு வந்து  நிலம் வீடு சம்பந்தமாக வேண்டுவார்கள் .
*தாயார் தாமரை இன்றி நிலத்திலேயே அமர்ந்துள்ள ஒரே தலம் .
* உற்சவர் தாமரை மலரை ஏந்தியவாறு காட்சி தரும் ஒரே  திவ்யதேசம் .
*திருமகள் பிராட்டி நிலமங்கை தாயார் என்ற நாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம் .

தரிசன நேரம் & முகவரி 

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை 
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00மணி வரை 

மாமல்லபுரம் பேருந்து நிலைய அருகிலேயே உள்ளது .
சென்னையிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளது .




     

15.5.18

Arulmigu Kapaleeshwarar Temple- Mylapore, Chennai

அருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் - மயிலாப்பூர் (திருமயிலை )


நிறைவே கானும் மனம் வேண்டும் சிவனே ! அதை நீ தரவேண்டும் 

ராஜ கோபுரம் 

தேவாரம் பாடல் பெற்ற தல எண்  213


இறைவன்: கபாலீஸ்வரர்.

அம்பாள் : கற்பகாம்பாள்.

தல விருட்சம்: புன்னை மரம்.

தல தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்.

ஆகமம்: காமிக ஆகமம்.

ஆலயப் பழமை: ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.
இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.





கோவில் அமைப்பு:
கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்டு இவ்வாலயம், சென்னை நகரின் நடுப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது.

கிழக்கில் உள்ள கோபுரமே பிரதான இராஜகோபுரம்.
ஏழு நிலைகளைத் தாங்கியபடி சுமார் நூற்று இருபது அடி உயரம் வரை இருக்கும் எனத் தோன்றுகின்றதது.




தல அருமை:
சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன.

இதனால் தானும், சிவனுக்கு ஈடானவன் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது.

இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார்.

பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து போவது இயல்பு.

மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மாவை ஈசனால் படைக்கப்படுவார்.

ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார்.

சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்தார் சிவபெருமான்.

அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார்.

ஆகவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு *கபாலீஸ்வரர்* ஆனார்.

தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.
தல விருச்சம் 


# அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தாள்.
சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார்.

# இதுவே, புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறதைக் காணமுடிந்தது. 

# இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது.

 #வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார்.

# தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார்.

# தேவியர்கள் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர்.

# திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது பத்து பாடல்கள் பாடப்பெற்றிருக்கிறது.

தல பெருமை:
பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள்.

சிவனும் உபதேசிக்க முனைப்பெடுத்து, உபதேசத்தை அருளிக்கொண்டிருந்த சமயத்தில்........

அவ்வேளையில் அங்கு மயில் ஒன்று நடனமாடவே, அந்த மயிலைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை உண்ணிப்பாக கவனிக்காமல் மயில் நடனத்தை வேடிக்கை பார்த்தாள்.

பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பதுதானே இயல்பு.

அதனால், குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதாவாகவே பிற! என்று மயிலாக மாறும்படி செய்து சபித்து விட்டார்.

தன் நிலை குற்றத்தைப் புரிந்து கொண்ட அம்பிகை, தன் குற்றத்திற்கு விமோசனம் கூறுமாறு கேட்டாள்.

அதற்கு ஈசன், நீ பூலோகத்தில் என்னை மயில் வடிவில் வந்து வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார். 

அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.

பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.
இருப்பிடம்:
சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

திருமயிலை புறநகர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கிறது.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மைலாப்பூர்,
சென்னை,
PIN - 600 004

ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

நன்றி : திரு .கருப்புசாமி 

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...