அருள்மிகு வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில்
முகப்பு தோற்றம் |
மூலவர் - வைகுண்டவாசர்
உற்சவர் : பக்தவச்சலர்
தாயார் - கனகவல்லி தாயார்
விருச்சகம் - வில்வம் , வேம்பு
தீர்த்தம் - லவசதீர்த்தம்
புராண பெயர் : குசலவபுரி
தல சிறப்பு :
* வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் .
* வால்மீகி மற்றும் லவன் குசன் இங்கு காட்சிஅளிக்கின்றனர்
* இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்
* இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது
* அனுமன்,லக்ஷ்மணன் இல்லாத ராமர் மற்றும் சீதா காட்சியளிக்கிறார் ஏனென்றால் சீதாவை காண ராமர் அரச கோலத்தில் வராமல் மரவுரி தரித்த கோலத்தில் காட்சிதருகிறார் .இக்கோலத்தில் காண்பது மிக அபூர்வம் . இக்கோவிலின் வெளியே லவசதீர்த்ததில் பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டது .
* கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது . அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர் . கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர் .
* இங்குள்ள விமானம் சாயா விமானம் .
கோவில் அமைவிடம்
கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி பாலத்தின் இடது புறத்தில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் அருகில் உள்ளது .
காலை 6.30 முதல் 11.00 வரை மாலை 4 மணி முதல் இரவு 8.45 வரை .
If you want English please click