ஸ்ரீ ரெங்கநாதர் பெருமாள் - ஆதி திருவரங்கம்
மூலவர் - ஸ்ரீ ரெங்கநாதர்
தாயார் - ஸ்ரீ ரெங்கநாயகி
தீர்த்தம் - சந்திர புஷ்காரணி
தல விருச்சகம் - புண்ணாக மரம்
தல பெருமை :
இக்கோயில் 3000 வருடங்கள் முற்பட்ட கோவிலாகும் . இங்கே விட்டிருக்கும் பெருமாள் பெருமாள் ஸ்ரீரங்கம் பெருமாளை விட பெரியவர் ஆவர் அதனால் இவரை பெரிய பெருமாள் என்று அழைக்கிறார்கள் . தமிழகத்தில் உள்ள பெருமாள்களில் பெரிய பெருமாள் ஆவர் .
தல வரலாறு :
இந்த சேஷ்திரத்தின் பெருமை ஸ்கந்தபுராண உத்தரகாண்டத்தில் உமாமகேஸ்வரஸம் வாதத்தில் 301 அத்தியாயம் முதல் 306 வது அத்தியாயம் வரை உதிரரங்க மஹாத்ம்யம் என்ற பெயரில் ஆறு அத்தியாயங்களில் வடமொழியில் கூறப்பட்டுள்ளது .
சோமுகன் என்ற அசுரன் தேவர்களை அழிப்பதற்காக வேதங்களை அபகரித்தான் .இதனால் தேவர்களும் ,முனிவர்களும் கவலை அடைந்து மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர் . மகா விஷ்ணு அவர்களின் கவலைகளை போக்க சமுத்திரத்தில் ஒளிந்திருந்த சோமுகனை அழித்து வேதங்களை மீட்டு இத்தலத்தில் பிரம்மனுக்கு உபதேசம் செய்தார் .
திருமங்கை அல்வா பெரிய திருமொழியில் 'வொருவதால் ' என தொடங்கும் பத்து பாசாரங்களும் 'ஏழை ஏதலன் ' என்று தொடங்கும் பத்து பாசுரங்களிலும்
இத்தலத்தை மங்களாசனம் செய்துள்ளார் என இங்குள்ள கல்வெட்டுகளிலில் காணமுடிகிறது .
அமைவிடம் :
இக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகில் மணலூர் பேட்டை அருகில் ஆதி திருவரங்கம் அமைந்துள்ளது .
இக்கோவில் காலை 6 மணி முதல் இரவு 7.30 வரை திறந்திருக்கும் .
No comments:
Post a Comment