17.9.17

Ashtalingams Near Chennai

சென்னை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்கள் 

அஷ்டலிங்கத்தின் விளக்கம் :

நாம் பெரும்பாலும் அஷ்டலிங்கங்களை திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரை சுற்றி கிரி வளம் வரும் போது கண்டிருப்போம் .ஆனால் நம் சென்னை அருகில் திருவேற்காடு சுற்றி அஷ்டலிங்கங்களை கண்டிருக்கமாட்டோம் .இங்கு உள்ள அனைத்து லிங்கங்களும் 2000 வருடங்களுக்கு முற்பட்டது ,இவை அனைத்தையும் அகத்தியர் மாமுனிவர் நிறுவினார் . இவை அனைத்தையும் அபிநய சோழன் என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது .

அஷ்டலிங்கங்களும் அதன் பெருமைகளும்  :

அஷ்டலிங்கங்களை ஒரே நாளில் கண்டு ரசித்தால் கர்மவினை அகலும் என்று சொல்வார்கள் .ஒவ்வரு ராசிகளுக்கும் ஒரு லிங்கம் உண்டு அந்த ராசிக்காரர்கள் அவருக்குரிய லிங்கங்களை வணங்கினால் அதற்குரிய நன்மைகளை பெறலாம் .

1. இந்திரலிங்கம் - ரிஷபம் ,துலாம் 
2. அக்னி லிங்கம் - சிம்மம் 
3. எமலிங்கம்       - விருச்சகம் 
4. நிருதிலிங்கம்  - மேஷம் 
5. வருணலிங்கம் -மகரம் ,கும்பம் 
6. வாயுலிங்கம்    -கடகம் 
7. குபேரலிங்கம்  -தனுசு ,மீனம் 
8. ஈசான்யலிங்கம் - மிதுனம் ,கன்னி 

சென்னையை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்களின் இடங்கள் :

1. இந்திரலிங்கம் -வள்ளிகொல்லைமேடு (கிழக்கு )

இது  அஷ்டலிங்கங்களின் முதல் லிங்கம் ஆகும் .இங்கே ஞானாம்பிகை சமேத இந்திரலிங்கம் உள்ளார் .திருவேற்காடு பேருந்து நிலையம் போகும் வழியில் பெட்ரோல் பங்க் எதிர் புறம் பிரதான சாலையிலேயே அமைந்து உள்ளது .இவரை வணங்கினால் வேலையில் முன்னற்றம் ,அரசு தொடர்பான காரியங்களை தங்கு தடையின்றி பெறலாம் .

vazipokkan
இந்திரலிங்கம் 


2. அக்னிலிங்கம் - நூம்பல் (தென் கிழக்கு ) 


அகத்தியர் இமயமலையிலிருந்து நூம்பல் என்ற பூவை எடுத்து வந்து இங்கே இவரை நிறுவி வணங்கியதால் இந்த ஊருக்கு நூம்பல் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது . வேலப்பன்சாவடியிலேருந்து கஜலக்ஷ்மி மண்டபத்தின் அருகில் உள்ள சாலையில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது . இவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் .


3. எமலிங்கம் - சென்னீர்குப்பம் (தெற்கு )

மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் இங்கே  அமைந்துள்ளார் . குடியிருப்புகள் அதிகமாக அமைந்துள்ள இடத்தில் வீற்றியுள்ளார் . பூந்தமல்லி ஆவடி மெயின் ரோட்டில் பைபாஸ் சந்திக்கும் இடத்துக்கு முன்னதாக இந்த கோவில அமைந்துள்ளது .இவரை வணங்கினால் எம பயம் நீங்கும் மற்றும் ஏழரை சனி ,கண்ட சனி இவைகளிருந்து விடுபடலாம் .

எமலிங்கம் - கைலாசநாதர் 

4. நிருதிலிங்கம் - பாரிவாக்கம் (தென் மேற்கு )

பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் அமைந்த இடம் . பூந்தமல்லி பைபாஸ் நடுவில் ஒரு சிக்னல் வரும் அதற்கு இடப்புறம் பட்டாபிராம் போகும் வழியில் பரிவாக்கம் வரும் இடது புறத்தில் கோவிலின் வளைவு வரும் . இவரை வணங்கினால் கடன் தொல்லைகள் ,வார கடன் இவைகளில் இருந்து விடுபடலாம் .இந்த கோவில் குருக்கள் வரும் நேரத்தில் மட்டுமே திறந்து இருக்கும் .


நிருத்தலிங்கம் -பாலீஸ்வரர் 

5. வருணலிங்கம் - மேட்டுப்பாளையம் (மேற்கு )

பாலிவாக்கம் கோவிலில் இருந்து திரும்பி வரும் வழியில் அம்பேத்கார் சிலைக்கு அடுத்து வரும் ரோட்டில் திரும்பினாள் ஏரி கரையை கடந்தால் இயற்கையான இடத்தில மிக சிறியதான டென்ட் கொட்டகை உள் மிக ரம்யமாக ஜலகெண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வர் வீற்றியிருக்கிறரர் . அவரை வணங்கினால் நோய்களிலிருந்து விடுபடலாம் மற்றும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . இந்த கோவிலை புதுப்பிக்கும் மற்றும் கோபுரம் அமைக்கும் பணி வரும் கார்த்திகை மாதத்தில் தொடங்க இருக்கிறார்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் .
ஜலகண்டேஸ்வரர் 
ஜலகண்டேஸ்வரரி 
கோவில் தோற்றம்

6. வாயுலிங்கம்  - பருத்திப்பட்டு (வட மேற்கு )


மேட்டுப்பாளையத்தில் இருந்து 3கி .மீ சென்றால் பருத்திப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் ஹனுமான் கோவில் அருகில் உள்ளே சென்றால் இந்த அழகிய கோவில் வரும் . இந்த விருத்தாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரரை வணங்கினால் வாயு தொல்லை மற்றும் இழந்த சொத்துக்களையும் மீட்டு எடுக்கலாம்.


7. குபேரலிங்கம் - சுந்தரசோழபுரம் (வடக்கு )


பருத்திப்பட்டு இருந்து இடது புறத்தில் சென்றால் சுந்தரசோழபுரம் வரும் . வேம்புநாயகி சமேத குபேரலிங்கேஸ்வர் இவரை வணங்கினால் வாழ்வில் எல்லா வித பொருளாதார மற்றும் வெற்றிகளை பெறலாம் .



8. ஈசானலிங்கம் - சின்னகோலடி (வட கிழக்கு )


இந்தக்கோயில் கண்டுபிடிப்பது சற்று சிரமம் . இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஞானேஸ்வரி சமேத ஈசான்யலிங்கம் இவரை வணங்கினால் வாழ்வில் வெற்றிகளையும் மற்றும் தடைகள் மற்றும் தோல்விகளில் இருந்து விடுபடலாம் .

நாம் இந்த கோவில்களுக்கு செல்லும் போது சில கோவில்கள் குருக்கள் இல்லாமல் அல்லது ஒரு வேலை மட்டும் பூஜை செய்யப்படுகிறது .
பௌர்ணமி , சிவராத்திரி ,திங்கள் கிழமை இந்த நாட்களில் நல்ல கூட்டமும் பூஜைகளும் நடைபெறுகின்றன . சிலர் இந்த நாட்களில் குழுவாக எல்லா கோவில்களுக்கும் ஒரே நாளில் செல்கின்றனர் . நீங்களும் இந்த அஷ்டலிங்கங்களை தரிசனம் செய்தால் ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் ஈசனின் அருளையும் பெறுவது நிச்சயம் .


வழிகாட்டி 


12.9.17

Vedapureeswarar Temple,Tiruverkadu

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு

மூலவர் :  வேதபுரீஸ்வரர் 
அம்பாள் : பாலாம்பிகை 
தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம் 
இடம்     : திருவேற்காடு 
காலம் : 2000 வருடங்கள் மேற்பட்ட பழமையானது 
சிறப்பு : தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23 ஆவது                     தளம், தேவார சிவ தலம்  274 ல் இது  256வது தலம் .

திருவேற்காடு என்றவுடன் எல்லோருக்கும் கருமாரி அம்மன் கோவில் மட்டுமே நினைவுக்கு வரும் ஆனால் திருவேற்காடு பேருந்து நிலையத்தில் 1கி.மீ  தொலைவில் மிக கம்பிரமாக வேதபுரீஸ்வர் கோவில் காட்சி அளிக்கிறார் .

தல வரலாறு   

சிவபெருமான் பார்வதி திருமணம் திருமணம் செய்த நேரத்தில் தேவர்கள் முதலியோர் வட திசை நோக்கி சென்றதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்த்து அதை சரிசெய்ய சிவபெருமான் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார் . அய்யனின் திருமணத்தை காணமுடியவில்லை என்ற அகத்தியரின்  வருத்தத்தை போக்க சிவபெருமான் தன் பார்வதியுடன் தன் திரு மணகோலத்தில் காட்சி அளித்தார் .

பிருகு முனிவர் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாக பரசுராமர் என்ற நாமத்தில் அவதரித்தார் .அவர் இத்தலத்தை வழிபட வந்தபோது உடன் ரேணுகையும் வந்தார் . அந்த ரேணுகையையே இப்போது 'கருமாரி அம்மன் 'என்று அழைக்கப்படுகிறது .

சிறப்பு :

இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார் . லிங்கத்திற்கு பின்னாடி சிவபெருமான் பார்வதி தேவியுடன் திருமண கோலத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறார் .

திருவேற்காடு பாலாம்பிகையும் ,திருவலிதாயம் ஜெகதாம்பிகையும் ,திருவெற்றியூர் வடிவாம்பிகையும் ஒரே நாளில் வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்வர் என்று கூறப்படுகிறது .

இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான 'மூர்க்கநாயனார் ' அவதரித்த தலமாகும் .



செல்லும் வழி : கோயம்பேட்டுலிருந்து திருவேற்காட்டுக்கு நிறைய பேருந்துகள் உள்ளன . மற்றும் வேலப்பன்சாவடி சிக்னல் இருந்து வலது புறம் திரும்பினால் திருவேற்காடு வரும்.

இந்த தளத்திற்கு அகத்தியர் வரும் பொழுது இந்த கோவிலை சுற்றி எட்டுத்திசைகளிலும் அஷ்ட லிங்கங்களை நிறுவி வழிபட்டதாக கருதப்படுகிறது அந்த அஷ்ட லிங்கங்களை பற்றி அடுத்த வரும் வாரங்களில்  பார்ப்போம் .
details of Ashtalingams please click below link
Ashtalingam details


       
               ------  திருச்சிற்றம்பலம் ------


1.9.17

mahalaya paksha details and Benefits

மகாளய பட்சம் 

இந்த வருடம் மகாளய பட்சம் செப்டம்பர் 6 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி(06.09.2017 to 20.09.2017) வரை . ஆனால் 6 ஆம் தேதி யஜுர் உபகர்மா என்பதால் அன்று விரதம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை .

மஹாளய பட்சம் விளக்கம் 

மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பட்சம் . இது வருடத்தில் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். ஆனால் இந்த வருடத்தில் அமாவாசை(19.09.17) அடுத்த நாள் பிரதமை(20.09.17) வருகிறது . இந்த அமாவாசை மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது .தை மற்றும் ஆடி அமாவாசையை விட உயர்ந்தது .

அமாவாசை மற்றும் தமிழ் மாதங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் மற்றும் திதிகளில் சிரார்த்தம் செய்வோம் . ஆனால் மஹாளய பட்சத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும் .

மஹாளய பட்ச திதிகளும் - தர்பண பலன்களும் 

  • பிரதமை - பணம் சேரும் 
  • துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும் 
  • திரிதியை - நினைத்தது நிறைவேறும் 
  • சதுர்த்தி - பகைவர்களிடம் இருந்து தப்பித்தல் 
  •  பஞ்சமி - வீடு ,நிலம் முதலான சொத்து வாங்குதல் 
  • சஷ்டி - புகழ் கிடைத்தல் 
  • சப்தமி - சிறந்த பதவிகள் அடைதல் 
  • அஷ்டமி - சமயோசித புத்தி , அறிவாற்றல் கிடைத்தல்
  • நவமி -சிறந்த மனைவி மற்றும் அறிவாற்றல் உள்ள பெண் குழந்தை பிறத்தல் 
  • தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல் 
  • ஏகாதசி - படிப்பு , விளையாட்டு , கலையில் வளர்ச்சி 
  • துவாதசி - தங்க நகை சேர்தல் 
  • திரியோதசி - பசுக்கள் , விவசாய அபிவிருத்தி 
  • சதுர்த்தி - பாவம் நீங்குதல் , தலைமுறை நன்மை 
  • மஹாளய அமாவாசை - எல்லா பலன்களும் நம்மை சேர முன்னோர்கள் ஆசி வழங்குதல் .
ஆகையால் மஹாளய பட்சத்தில் விரதம் இருந்து நம் முன்னோர்களின் ஆசிகளையும் பலன்களையும் பெறுவோம் .

கீழே ஹேவிளம்பி வருஷ மஹாளய பட்ச சங்கல்பம் மற்றும் தர்பண முறைகள் உள்ள லிங் கொடுக்கப்பட்டுள்ளது அதை உபாயகப்படுத்தி கொள்ளவும் .

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...