என் நினைவின் எச்சங்கள் !
காதல்
என் வாழ்கையில் அவ்வப்போதும் வந்து போகும் ஒரு வசந்தம் .என் சிறுவயதில் இருந்து ஒரு அழகான பெண்னை பார்த்தால் என்
மனதிற்குள் ஒரு இன்பம் .நாம் போகும் ரயிலில் , பஸில் யாராவது ஒரு அழகான பெண் இருந்தால் நம் மனதில் ஒரு பூரிப்பு மத்தாப்பாய் தோன்றும் .
நான் பயணம் செய்யும் பெட்டில் நமக்கு ஒத்த வயதுடைய பெண்ணின் பேரை கண்டால் என் மனம் மகிழ்ச்சி கொள்ளும் .ஆனால் நான் இன்றுவரை யாரையும்
காதலிக்கவில்லை .ஆனால் நான் பெண்னை பற்றி கவிதை எழுதினேன் அது எப்படி சாத்தியமானது என் மனதிற்குள் அவளை உருவகபடுத்தி கொண்டதாலா !
நன்றாக துங்கினேன்,சாப்பிட்டேன் ஆனாலும் நான் காதலித்தேன் ? எதை என் வாழ்க்கையை !